GST (ஜிஎஸ்டி) - எனது பதிவுகள் - 1

GST யை வியாபாரிகள் எதிர்க்க காரணம் அவர்கள் வரி அதிகம் கட்டவேண்டி வரும் என்பதால் அல்ல (GST வரியை customer தான் கட்டுகிறார் வியாபாரி கட்டவில்லை), GST வருவதற்கு முன் தொழில் நடத்தி வந்த விதத்தால் தான்.

உதாரணமாக ராஜேஷ் என்பவர் ஒரு வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கு தொழிலில் turnover செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். GST வருவதற்கு முன்னாள் அவர் அரசாங்கத்துக்கு 5 அல்லது 10 லட்சத்துக்கு தான் turnover ராக கணக்கு காட்டுவார்.

GST - செய்திகளில் சொல்லப்படாத ஒரு பிரச்சனை


GST வந்தபிறகு அவர் 50 லட்சத்துக்கு கணக்கு காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் கணக்கு காட்டுவதில் இல்லை வியாபாரிக்கு பிரச்சனை. ஆனால் போனவருடம் 5 லட்சம் தொழில் நடந்ததாக கணக்கு காட்டிவிட்டு இந்த வருடம் 50 லட்சத்துக்கு கணக்கு காட்டினால் வரி விதிக்கும் அதிகாரிக்கு சந்தேகம் வரும். ஒரே வருடத்தில் தொழில் 10 மடங்கு உயர்வது அவ்வளவு எளிதல்லவே.

எனவே இந்த வருடம் ஒழுங்காக கணக்கு காட்டினாள் இத்தனை வருடம் இவர்கள் மறைத்த வரி ஏய்ப்பு அனைத்தும் வெளியே வந்துவிடும் எனவே தான் GST என்றவுடன் ஐயோ ஐயோ என கொதிக்கிறார்கள்.

ஆனால் நேற்று மோடி வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வியாபாரிகள் பலருக்கு நிம்மதியை தந்திருக்கும். அந்த அறிவிப்பின் படி வியாபாரியின் பழைய கணக்கு வழக்குகள் அரசாங்கத்தால் நோண்டப்படமாட்டாது அவர்கள் பயப்பட தேவையில்லை. இனியாவது ஒழுங்காக கணக்கு காட்டினாள் போதும் என்பதே அது.

இனியாவது முழு பில் போடுவார்களா நம் வியாபாரிகள் ????


Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)