நல்ல தமிழில் எழுதுவோம் - 1
தமிழில் எழுதும் பொழுது பலருக்கு ஏற்படும் சந்தேகம் மூன்று சுழி " ண் ", இரண்டு சுழி " ன் " மற்றும் " ந் " இவற்றில் எதை பயன்படுத்துவது என்பது. இந்த குழப்பத்துக்கு எளிய தீர்வை நண்பர் ஒருவர் அனுப்பினார். "ண்" இதன் பெயர் டண்ணகரம், "ன்" இதன் பெயர் றன்னகரம், "ந்" இதன் பெயர் தந்நகரம் அதாவது எப்பொழுதெல்லாம் மூன்று சுழி ண வருகிறதோ அதைத்தொடர்ந்து வரும் எழுத்து ட வரிசையாகத்தான் இருக்கும் (அதனால் தான் டண்ணகரம்). உதாரணம் - மண்டபம் (கவனிக்க மன்டபம் என்பது தவறு), இரண்டு அதேபோல் எப்பொழுதெல்லாம் இரண்டு சுழி ன வருகிறதோ அதைத்தொடர்ந்து வரும் எழுத்து றகர வரிசையாகத்தான் இருக்கும். உதாரணம் - அன்றாட, இன்றைய அதேபோல் ந வை தொடர்ந்து த எழுத்துக்களே வரும் உதாரணம் - இந்தியா (இன்தியா என்பது தவறு) நல்ல தமிழில் எழுதுவோம் - விக்கி