திவால் சட்டத்தில் தேவையான மாற்றம்

பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC (Insolvency & Bankruptcy Code) எனப்படும் திவால் சட்டத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டை இப்பொழுது அடைக்கப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனத்தை நடத்தும் முதலாளிகள் (promoter) வேண்டுமென்றே பெரிய கடன் தொகையை பெற்று (வங்கி அதிகாரிகளும் இதில் உடந்தை) பின் அந்த நிறுவனம் நஷ்டம் என்று கணக்கு காட்டி பணத்தை சுருட்டி சென்றதால் வங்கிகளின் வாரா கடன் அளவு பலமடங்காக அதிகரித்தது.

இந்திய வாராக்கடன்களின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்.

இதை சரி செய்ய கொண்டுவரப்பட்டதே IBC என்ற திவால் சட்டம்.

இந்த சட்டப்படி கடனை திரும்பி செலுத்தாத நிறுவனத்தை வங்கிகள் திவால் என அறிவித்து ஏலம் விடுவதன் மூலமோ அல்லது மற்றவருக்கு  நிறுவனத்தை விற்பதன் மூலமோ தங்கள் கடன் தொகையை திரும்ப பெறலாம்.

IBC திவால் சட்டம் , Insolvency & Bankruptcy Code
source: google

ஆனால் இந்த சட்டத்தில் இருந்த ஒரு ஓட்டையை தான் பெரிய அளவில் முதலாளிகள் பயன்படுத்த முயன்றனர்.

ஏற்கனவே நிறுவனத்தை திவாலுக்கு தள்ளிய முதலாளி மீண்டும் ஏலத்தில் பங்கேற்று தனது நிறுவனத்தை தானே குறைந்த விலைக்கு ஏலமெடுத்த கூத்து நடைபெற்றது.

இந்த தடுக்க IBC சட்டம் நிறைவேற்றப்பட்ட ஒரே வருடத்தில் இப்பொழுது திருத்தம்(amendment) கொண்டுவரப்பட்டுள்ளது. இனி பழைய முதலாளி குறைந்த விலைக்கு தனது நிறுவனத்தை தானே ஏலமெடுக்கும் கூத்தெல்லாம் செய்யமுடியாது.

#Bold_step_against_corporates #IBC_ORDINANCE 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)