ஆன்லைன் விற்பனை - கடைக்கார்களின் லாபத்தை சாப்பிட துவங்கிவிட்டது
எனக்கு என்னவோ ஆன்லைன் விற்பனை எல்லாம் கடைகளை பெரிதாக பாதிக்காது என்றே தோன்றுகிறது. நான் இரண்டு முறை ஆன்லைனில் வாங்கி முயற்சி செய்தேன் எனக்கு பிடிக்கவில்லை எனவே நான் வாங்குவதை நிறுத்திவிட்டேன் என்று எனது கட்டுரையை படித்த நண்பர் ஒருவர் வாட்ஸப் செய்திருந்தார்... உண்மை தான் ஆன்லைன் விற்பனை இன்னும் கடைகளை அப்புறப்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிடவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைகளின் லாப சதவீதத்தை ஆன்லைன் நிறுவனங்கள் சாப்பிட துவங்கிவிட்டன என்றே நினைக்கிறேன். இன்றும் மக்களில் பெரும்பாலானோர் சத்யா அல்லது வசந்த் அன் கோ போன்ற கடைகளில் சென்று டீவி வாங்கினாலும், கடையின் சேல்ஸ் மேன் சொல்லும் விலையை உடனே பிளிப்கார்ட் அல்லது அமேசான் தளத்தில் தட்டிப்பார்த்து பேரம் பேச துவங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு ஆன்லைனில் வாங்க தயக்கம் இருந்தாலும், ஆன்லைனில் அதே பொருள் சில 100 ரூபாய்கள் குறைத்து காண்பிப்பதை கண்ணால் பார்த்தபின் கடையில் அதிக விலை கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது கடைக்காரர்களின் லாபத்தை சாப்பிட துவங்கி விட்டது. எதிர்பார்த்த லாபம் வராவிடில் கடைகள் மூடப்படுவதும் நடக்...