போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்
கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திலும், திருவாரூர் நூலகத்திலும் பட்டதாரிகள் மணிக்கணக்காக போட்டி தேர்வுக்கு தயார் செய்வதை பார்த்திருக்கிறேன். எப்படியேனும் தேர்வில் வெற்றிபெற்று அரசு பணிக்கு செல்லவேண்டும் என்று இரவு பகலாக படிக்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் TNPSC, SSC போன்ற அரசு தேர்வுகள் கேலிக்கூத்தாக, காசு கொடுத்தால் எவரும் வெற்றி பெறலாம் என்ற லச்சணத்தில் நடக்கிறது. ஒரு வேளைக்கு லச்சக்கணக்கானவர்கள் போட்டிபோடுகிறார்கள். போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள் - தயவு செய்து ஏதோ ஒரு பணியில் இருந்து கொண்டே தேர்வுக்கு தயார் செய்யுங்கள் . முக்கால்வாசி நிறுவனங்கள் கல்வி முடித்ததற்கும், வேலைக்கு செல்வதற்குமான இடைவேளை அதிகமாக இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை. நீங்கள் வேலைக்கு செல்வதை தாமதிக்கும் ஒவ்வொருநாளும் உங்கள் படிப்புக்கு ஏற்ற துறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே வரும் ஊரில் அடுத்தவருக்கு உபதேசம் செய்வதற்காகவே ஒரு கூட்டம் சுற்றுகிறது. கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்களை அரசு வேலைக்கு போங்க தம்பி, பேங்க் கோச்சிங் சேர்ந்தால் நீ தான் அடுத்த மேனேஜர் என்று கு...