சென்னை MTCக்கு ஆண்கள் சார்பாக ஒரு கோரிக்கை
சென்னைக்கு வந்த பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யத்தை கொடுத்தது. முதலாவது பேருந்தில் இடது புறம் இருக்கை முழுவதும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, இரண்டாவது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரும் ஆண்களை " எழுந்திரிங்க இது லேடீஸ் சீட் " என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெறுவது (நம்ம ஊர்ல பொண்ணுங்க தைரியமா இது லேடீஸ் சீட் எழுந்திரிங்க என்று குரல் கொடுத்து நான் பார்த்தது இல்லை). ட்ரைனிங் பீரியட் பொழுது ஆபீஸ் நடந்து போகும் தொலைவில் இருந்ததால் பேருந்தில் பயணம் என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான். சமீப மாதங்களில் பேருந்தில் ஆபீஸ் சொல்லவேண்டிய சூழல்.ஆபீஸுக்கு பேருந்தில் பயணிக்கும் பொழுது மற்றுமொரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது. இடது பக்கம் பெண்கள் இருக்கை பலவும் காலியாக இருக்க பெண்கள் வலது பக்கம் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து இருந்தார்கள். ஆண்கள் பலர் நின்று கொண்டே பயணம் செய்தார்கள். அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தங்களில் காலியாக இருந்த பெண்கள் இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கடைசி வரை ஆண்கள் நின...