இந்தியா ஒளிர்கிறது ?
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு உணவகத்தில் இருந்து வீட்டுக்கு அரசாங்கம் போட்டு தந்த பளபளப்பான நான்கு வழி சாலையின் ஓரமாய் நடத்து வந்துகொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருத்த பெரியவர் (வயது உறுதியாக 70க்கு மேல் இருக்கும்) மயங்கி சரிவதை கண்ட எனக்கும் நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஓடிசென்று அவரை தூக்கி ஓரமாக நிழலில் உட்காரவைத்தோம். எங்களுடன் உதவிக்கு வந்த நல்ல உள்ளங்கள் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க அவரையும் அறியாமல் பசிக்குது என்றார். 10 அடி தூரத்தில் ஹோட்டல் ஆனால் அவரால் நடக்க முடியவில்லை. ஓடி சென்று 4 இட்லி வாங்கிவந்தோம். அவருக்கு இருக்கும் பசியில் பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து வரும் மோசமான வாடையை அவர் பொருட்படுத்தவில்லை. உங்க வீட்ல உள்ளவங்க போன் நம்பர் இருந்த சொல்லுங்க ஐயா நாங்க அவங்கள வரசொல்றோன்னு சொன்ன பொழுது போன் நம்பர் கொடுத்தா செத்து போன உன் பொண்டாட்டி கிட்ட பேசப்போறியா என்று பெத்த மகன்கள் கேட்டதாக சொன்னார் பெரியவர். பாவம் அவர் மகன், மனிதனை என்றும் இளமையாய் வைத்திருக்கும் சோமரசம் போன்ற மருந்துகள் இன்னும் கண்டு பிடிக்கப் படவ