Posts

Showing posts from March, 2018

இந்தியாவில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம்

Image
ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது... இதுவரை பெரிய நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் அம்பானிக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் என்றுதானே செய்திகளில் படித்தோம்.. இன்று நிலைமை தலைகீழ்... ஒவ்வொரு பெருநிறுவனமும் தாங்கள் வாங்கிய கடனை அவசர அவசரமாக திரும்பி செலுத்துகின்றனர். (மேலும் படிக்க  திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு ) அதிலும் ஒரு பெரிய மனிதர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல 40000 கோடி ரூபாய் கடனை திரும்பி செலுத்துகிறார் ! அந்த தொழில் அதிபர் வேறு யாருமல்ல அனில் திருபாய் அம்பானி தான்... என்னது அம்பானி கடனை திரும்ப செலுத்துகிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா ???? Source : கூகுள் தேடுபொறி  இதையெல்லாம் சாதித்து காட்டியது Insolvency & Bankrupty code எனப்படும் திவால் சட்டம்.. வங்கிகளின் வாராக்கடன் அளவுக்கு மிஞ்சி சென்றதால் (சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு) மோடி அரசு பெரிய நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை வசூல் செய்ய IBC சட்டத்தை கொண்டுவந்தது.. இந்த சட்டப்படி நிறுவனம் வாங்கிய கடன் வாராக்கடன் என்று RBI ...

திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு

Image
வாராக்கடனை வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC எனப்படும் திவால் சட்ட உதவியுடன் Bhushan Steel நிறுவன கடன் வழக்கு வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது Source : கூகுள் தேடுபொறி  சுமார் 44,000 கோடி ரூபாய் அளவு கடனில் உள்ள Bhushan Steel நிறுவனத்தை IBC சட்ட உதவியுடன் வங்கிகள் ஏலம்விட்டன. இந்த ஏலத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் அதிகபட்சமாக 34000 கோடி ரூபாய் குறிப்பிட்டு Bhushan Steel நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது இந்த வழக்கு மூலம் வங்கிகளுக்கு எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதையும், வங்கிகள் Bhushan Steel நிறுவனத்துக்கு கொடுத்த கடன் தொகையை அடைப்புகுறியிலும் () கீழே குறிப்பிட்டுள்ளேன் * ஸ்டேட் வங்கி - 8083 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 12,000 கோடி ரூபாய்) * PNB வங்கி - 3081 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 4904 கோடி ரூபாய்) * கனரா வங்கி - 1794 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2856 கோடி ரூபாய்) * ICICI வங்கி - 1583 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2448 கோடி ரூபாய்) * AXIS வங்கி - 1218 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 1939 கோடி ரூபாய்) Bhushan steel நிறுவனத்துக்கு தனியார், பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது வெளிநாட்...