புதிய இந்தியா : 1 - நிறுவனங்களை கை கழுவும் ஆடிட்டர்கள்
(இந்தியாவில் ஏற்பட்டு வரும் வரவேற்கப்படவேண்டிய மாற்றங்களை பற்றிய எனது கட்டுரைகள் "புதிய இந்தியா" என்கிற தலைப்பில்) பல நிறுவனகங்கள் தங்கள் வருமானத்தை உயர்த்தி காட்டி அந்த கணக்குகளை கொண்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளன. இந்த கடன்கள் தான் பின்னாளில் வாரக்கடனாக லட்சம் கோடிகளில் இந்திய வங்கிகளை இழுத்து மூடம் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதுபோன்ற பித்தலாட்ட வேலைகளுக்கு நிறுவனங்களுக்கு உதவுபவர்கள் ஆடிட்டர்கள். உதாரணமாக A என்கிற நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடிக்கு turnover செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிறுவனமும் அதன் ஆடிட்டர்களும் சேர்ந்து A நிறுவனத்தின் turnover 500 கோடி என்று கணக்குகளை மாற்றுவார்கள். பின் மாற்றிய கணக்குகளை கொண்டு வங்கிகளில் விரிவாக்க திட்டம் என்ற பெயரில் 300 அல்லது 500 கோடிக்கு கடன் பெறுவார்கள். வங்கியை பொறுத்தவரை 500 கோடி turnover செய்யும் நிறுவனத்துக்கு 300 கோடி கடன் தருவது ஒன்றும் தவறல்ல. ஆனால் A நிறுவனம் ஆண்டுக்கு செய்யும் தொழிலே 100 கோடி தான். எப்படியும் A நிறுவனத்தால் கடனை திரும்ப செலுத்தமுடியாது. A நிறுவனம் திவால் ஆகும், நிறுவனத்தின் தலைவ