விவசாயம் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை... !
இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல... உணவின்றி தவிக்கும் மக்கள் ஒரு பக்கம் என்றால் உற்பத்தியில் வருடா வருடம் உச்சத்தை தொடும் விவசாயிகள் மறுபக்கம்.. உதாரணத்திற்கு பால் பொருட்களை எடுத்துக்கொள்வோம்.. இந்திய பால் உற்பத்தி உலகிலேயே பெரியது..கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்த பாலின் அளவு 176 மில்லியன் டன்கள்... ஆனால் சந்தையில் பாலுக்கு தேவை அவ்வளவு இல்லை. எனவே பாலின் கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏறிக்கொண்டே போகிறது.. SMP (Skim Milk Powder) என்று சொல்லப்படும் பால் பவுடராக மாற்றி உலக அளவில் ஏற்றுமதி செய்யலாம் என்றால் உலக அளவில் பால் பவுடரின் விலையும் ஒரு டன்னுக்கு $ 3519 ல் இருந்து $ 2000 அளவுக்கு விழுந்து விட்டது.. இப்பொழுது விவசாயிகள் வீதிக்கு வந்துவிட்டார்கள். அரசே அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து கொள்ளவேண்டும் என்று.. சந்தையில் தேவையே இல்லாத பொழுது அரசாங்கம் மட்டும் பாலை கொள்முதல் செய்து என்ன தான் செய்யமுடியும் ?