1$ = ₹70 - நல்லதா ? கெட்டதா ?
பொருளாதாரம் மோசமாக இருந்து நாட்டின் நாணயமும் வீழ்ச்சி அடைந்தால் நாம் மோசமான நிலைமையில் இருப்பதாக பொருள் ! பொருளாதாரம் நன்றாக இருந்து நாட்டின் நாணயம் வீழ்ச்சி அடைந்தால் அது நாட்டுக்கு பெரிய வரப்பிரசாதம் ! பொருளாதாரம் நன்றாக இருக்கும் பொழுது நாட்டில் உள்ள தொழில் உற்பத்தி நன்றாக இருக்கும். உற்பத்தி நன்றாக இருந்தால் ஏற்றுமதி நன்றாக இருக்கும். ஏற்றுமதி நடைபெற்றால் தான் வேலைவாய்ப்பு பெருகும் ! உதாரணத்திற்கு மாருதி நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கார் ஒன்றை $5000 க்கு ஏற்றுமதி செய்வதாக வைத்துக்கொள்வோம். 1$ = ₹65 என்று வைத்துக்கொண்டால் மாருதி நிறுவனத்திற்கு ஒரு காருக்கு ₹ 3,25,000 ரூபாய் கிடைக்கும். இதுவே 1$ = ₹70 என்று வைத்துக்கொண்டால் ₹ 3,50,000 ரூபாய் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருந்தால் மாருதி நிறைய கார்களை உற்பத்தி செய்யும் ! நிறைய லாபமும் கிடைக்கும். நாட்டின் $ இருப்பும் உயரும். அதைவைத்து இறக்குமதியை கையாளலாம் ! (TCS, இன்போசிஸ் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்களும் ஏற்றுமதி நிறுவனங்கள் தான்) பொருளாதாரம் நன்றாக இருக்கும் பொழுது நாணய மதிப்பு சரிவடைந்தால் நாட்டுக்கு அது பலவகைய...