நேரு குடும்ப விசுவாசிகளால் மண்ணை கவ்விய காங்கிரஸ்
கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே..
ஆனால் அந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் எவ்வளவு முக்கிய காரணமோ அதே அளவு காரணம் சச்சின் பைலட்..
சச்சின் பைலட் ஒரே வருடத்தில் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துவந்தார். இத்தனைக்கும் அவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்..
தேர்தல் முடிந்ததும் வெற்றிக்கு கடுமையாக உழைத்த சச்சின் பைலட்டுக்கு தான் முதல்வர் பதவி என அனைவரும் எதிர்பார்த்தனர்..
ஆனால் சோனியா குடும்ப விசுவாசி என்ற ஒரே காரணத்திற்காக அசோக் கெலாட்க்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது..
அதே போல் மத்திய பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் தேரியதற்கு காரணம் சிந்தியா என்பர் தான். ஆனால் முதல்வர் பதவி சோனியா குடும்பத்தின் விசுவாசி என்பதற்காக கமல்நாத்துக்கு வழங்கப்பட்டது...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி பற்றி பேசிய ராகுல் காந்தி அசோக் கெலாட், கமல்நாத், சிதம்பரம் போன்றவர்கள் கட்சிக்கு உழைக்காமல் தங்கள் மகன்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க மட்டுமே உழைத்தனர் என்று காட்டமாக குறிப்பிட்டார்..
ஆனால் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்காமல் திறமையற்ற அசோக் கெலாட், கமல்நாத் போன்ற குடும்பத்துக்கு கும்பிடு போடுபவர்களுக்கு பதவியை கொடுத்துவிட்டு இன்று அவர்கள் கட்சியின் வெற்றிக்கு உதவவில்லை என புலம்புவான் ஏனோ ??
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் மோடி அலையிலும் தனி ஒருவராக போராடி பஞ்சாப் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கரை சேர்த்துள்ளார்.
இதே போல் சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவியை வழங்கியிருந்தால் அவரும் பாஜக விற்கு பெரிய போட்டியை அளித்திருப்பார்..
ஆனால் நேரு குடும்பம் மற்றும் அதன் விசுவாசிகளை தவிர வேறு யாரும் கட்சியில் வளரக்கூடாது என காங்கிரஸ் தலைமை நினைக்கும் வரை மோடி தான் பிரதமர்...
Comments
Post a Comment
Post ur comments and help us to improve