பானி பூரி விற்பது கேவலம் அல்ல
வடக்கே இருந்து வந்து பானி பூரி விற்கிறான் என அடுத்தவர் செய்யும் தொழிலை மட்டம் தட்டும் சிலருக்கு மனநோய் என்று தான் சொல்ல தோன்றுகிறது...
வடமாநிலத்தில் இருக்கும் மக்களில் சில லட்சம் பேர் வாய்ப்பு தேடி இங்கே வருகிறார்கள் நான் மறுக்கவில்லை. வாய்ப்பு இருக்கும் இடத்தை தேடி நகர்வது தான் மனித இயல்பு.
நம்ம மக்கள் பலர் கூட UAE, மலேசியா, சவுதி, அமெரிக்கா, UK என பல நாடுகளில் வேலை செய்கிறார்கள். இங்கே அத்துனை வாய்ப்பு கொட்டி கிடந்தால் ஏன் நம் மக்கள் அங்கெல்லாம் வேலைக்கு சென்று கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்று கேட்டால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும் ?
இங்கே முடி திருத்தும் தொழில், டீ கடை துவங்கி மொத்த வியாபாரம் வரை மெதுவாக பல வடநாட்டவர் முன்னேறி வருவதெல்லாம் இந்த பேஸ்புக் போராளிகளுக்கு தெரியாது..
சுய தொழிலில் ஈடுபடுபவதை ஊக்குவிக்காத கல்வி திட்டத்தில் படித்து வந்த நம்மிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்..
வருடத்துக்கு உங்கள் பணத்துக்கு 7% வட்டி என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் இப்பொழுது 6.5% வட்டியில் வைத்திருக்கும் FD யை முறித்து அடுத்த வங்கிக்கு வருடத்துக்கு 0.5% கூடுதல் வட்டிக்காக தூக்கி கொண்டு ஓடும் மக்களுக்கு ஒரு வியாபாரி (பானி பூரி கடைக்காரனையும் சேர்த்து) ஒவ்வொரு நாளும் தன்னிடம் உள்ள பணத்தை பல மடங்கு ஆக்குகிறான் என்பதெல்லாம் புரிவதே இல்லை..
தொழிலை, தொழில்முனைவோரை மதிக்காத நாடு உருப்படாது...
உங்கள் அரசியல் ஆதாயத்துக்கு நாட்டை கெடுக்காதீர்கள்
Comments
Post a Comment
Post ur comments and help us to improve