BS IV தரத்தில் இருந்து BS VI க்கு மாறுவதால் பெட்ரோல் டீசல் விலை உயருமா ??
BS VI பெட்ரோல் மற்றும் டீசலின் விலை BS IV தர பெட்ரோலை விட விலை அதிகம் ?? வாகனங்கள் உமிழும் புகையை கட்டுப்படுத்த அரசு BS எனப்படும் தரநிலையை பின்பற்றி வருகிறது.. 2000 ஆம் ஆண்டு BS I எனப்படும் Bharat Emission Stage 1 அமலுக்கு வந்தது.. BS II 2005 ஆம் ஆண்டும், BS III 2010 ஆம் ஆண்டும், BS IV 2017 ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது.. இப்பொழுது நடைமுறையில் இருப்பது BS IV தான்.. அடுத்ததாக BS V க்கு பதிலாக நேரடியாக BS VI புகை வெளியீடு தரத்துக்கு மாற விருப்பதாக இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு அறிவித்தது.. இதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மற்றும் பைக்குகள் BS VI புகை உமிழ்வு தரத்துக்கு மாறவேண்டும்... BS IV தர வாகனங்களை விற்பனை செய்யமுடியாது.. எனவே கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் BS VI தரத்திலான வாகனங்கள் தயாரிக்க பல கோடி முதலீட்டில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. அதே போல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்றவையும் தங்கள் சுத்திகரிப்பு முறையில் சில மாற்றங்களை செய்த...