தூவைநாதர் கோவில் - திருவாரூர் நகரின் மைய பகுதியில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்
திருவாரூர் நகரின் மைய பகுதியில் பெரிய தேருக்கு மிக அருகில் (முருகன் தேருக்கு பக்கத்தில்) மோசமான நிலையில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலத்தை பற்றிய பதிவு... ~~~ தூவைநாதர் கோவில் ~~~ இத்திருக்கோயில் குளத்தில் நீராடி இறைவன் மீது "தூவாயா தொண்டுசெய்" என்று துவங்கும் தேவாரப்பாடலை பாடி இழந்த கண்பார்வையை சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பபெற்றார்.. ஆரூர் அமர்ந்த தியாகராஜ சுவாமிக்கு நண்பரான சுந்தர மூர்த்தி நாயனார் நீராடிய திருக்குளத்தின் இன்றைய நிலை வெளியே சொல்வதற்கில்லை... பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒரு அறிவிப்பு பலகை கூட கிடையாது. திருவாரூரில் வாழும் பலருக்கே அது தெரியாது... "இறைவனே நேரில் வந்து அருள்வழங்கும் அளவுக்கு பக்தியில் திளைத்த சுந்தரமூர்த்தி நாயனார் நின்று மனமுருகி தேவாரம் பாடிய அதே இடத்தில் நாம் நிற்கிறோம் என்ற உணர்வே உடலில் சிலிர்ப்பை தருகிறது" அதேசமயம் இப்படி கொண்டாடப்படவேண்டிய கோவில் நகரின் மையப்பகுதியில் இருந்தும் கேட்பாரற்று பாழடைந்து கிடப்பது மனதை உறுத்துகிறது.. தூவைநாதர் கோவில் கூகிள் மேப் தளத்தில் தூவாயா தொண்டுசெய் தேவாரப்பாடல் ( https://shaivam.org/thirumur...