Posts

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பக்கவிளைவு !

Image
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பக்கவிளைவு ! சிறுமிகள் கடத்தல் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த தொழிலின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய். சிறுமிகள் வயது 10 முதல் 12 வயது வரை இருந்தால் அவர்கள் விலை 5 லட்சம், வயது 13 முதல் 15 வரை இருந்தால் விலை 4 லட்சம். இதில் கடத்தல்காரர்களுக்கு ஒரு சிறுமிக்கு போக்குவரத்து, போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் என சுமார் 20,000 வரை செலவு ஆகிறது. இன்று அவர்களிடம் செலவு செய்ய ரொக்க பணமில்லை - நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாத்ரி. படிக்க : http://www.livemint.com/Politics/p9VrQTy6jY4Cs4H6CqpbZO/Note-ban-breaks-the-backbone-of-Rs20-trillion-trafficking-in.html Side Effect of Demonetization ! Girl Trafficking business worth 20000 crore a year is completely shut down due to demonetization. Girl aged 10-12 cost Rs. 5 Lakh in market whereas age group of 13 to 15 cost Rs 4 Lakh. For transporting, grooming & bribing local police & politicians, 20000 was spent for each girl child. Now the entire network is down because ...

பெர்லின் தாக்குதலும் விளைவும்

Image
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்கள் எல்லைகளை ராணுவத்தை கொண்டும் முள் வேலிகளை கொண்டும் அடைத்த பொழுது ஜெர்மனி மட்டும் சிரிய அகதிகளை அரவணைத்தது. ஆனால் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த டிரக் தாக்குதல் ஜெர்மனியின் அகதிகள் பற்றிய  நிலைப்பாட்டை கடுமையாக மாற்றியமைக்கும் ! ஏற்கனவே ஜெர்மனியின் வலதுசாரிகளுக்கும் அகதிகளுக்கும் ஆங்காங்கே கைகலப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன (படிக்க : https://www.washingtonpost.com/news/worldviews/wp/2016/09/15/tensions-escalate-after-violent-clashes-between-germans-and-refugees/?utm_term=.92c0b1b349c6 ) மக்களிடம் அகதிகள் பற்றிய வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரங்கள் இனி வரும் காலங்களில் அதிகமாக நடக்கும் ! டிரம்ப் போன்றவர்கள் தங்கள் இத்தனை நாள் கூறிவந்த வெறுப்பு பிரச்சாரங்கள் சரி என்று மார்தட்ட ஆரம்பித்து விடுவார்கள் ! இதன் போக்கு நல்லதாக இராது ! உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதன் மூலம் மக்களை பிளவு படுத்துவது ஐஎஸ்ஐஎஸ் குழுவின் திட்டமாக இருந்தால் அதில் அவர்கள் வெற்றி பெறுவதாகவே நான் கருதுகிறேன் ! ஆண்டவன் தான் அமைதிக்கு வழிசொல்லவேண்டும் ! ம...

புத்தக விமர்சனம் - இனியவை இருபது (கலைஞர் திரு. கருணாநிதி)

Image
கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் எழுத்துகளை படிக்க இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது! புத்தகத்தின் பெயர் : இனியவை இருபது கலைஞர் அவர்கள் தான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றி எழுதிய பயண குறிப்பு புத்தகம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எதர்ச்சியாக கண்ணில்பட்டது இந்த புத்தகம். பயண குறிப்பாக மட்டுமல்லாமல் அவர் சென்று வந்த இடங்களின் வரலாற்றை சொன்னவிதம் அருமை ! உதாரணமாக இத்தாலி பயணத்தை பற்றி குறிப்பிடும் பொழுது ஜூலியஸ் சீசர் மற்றும் கிளியோபட்ரா காதல் மற்றும் ஆண்டனி - கிளியோபட்ரா காதல்  (ஆம் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சீசர் கொல்லப்பட்டபின் பிரமாதமான உரை நிகழ்த்தி மக்களை ப்ரூட்டஸ் மற்றும் அவரது கூட்டாளிகளிக்கு எதிராக திருப்பிய அதே ஆண்டனி தான்) பற்றி விவரித்த விதங்கள் அருமை ! கண்டிப்பாக திரு. கலைஞர் அவர்களின் மற்ற எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை ! அவர்தம் எழுத்துகளை படித்தவர்கள் உங்கள் மனம் கவர்ந்த புத்தக பெயர்களை சிபாரிசு செய்தால் உதவியாக இருக்கும் ! ஆவலுடன் ! விக்கி

Cashless Economy சாத்தியமா?

Image
இந்தியாவில் cashless economy ஊக்குவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததும் (கவனிக்கவும் ஊக்குவிக்க மட்டுமே  நிர்பந்தபடுத்தப்பட போவதில்லை) இதெல்லாம் தேவையா சாத்தியமா என்று பலவாறான விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர்களுக்கு ஒரு குட்டி கதை ராஜிவ் காந்தி 1986 ஆம் ஆண்டு IT புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தார், IT இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் என்றார். இங்கே விவசாயிகள் பிரச்சனை இத்தனை இருக்கும் பொழுது நம் பிரதமர் கம்ப்யூட்டர் கிம்ப்யூட்டர் என்று உளறிக்கொண்டு இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள்! இன்னும் சில கட்சிகள் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது கம்ப்யூட்டர் ஒரு ரோபோட் அது தொழிலார்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் இந்தியா அவ்வளவு தான் என்று போராட்டமே நடத்தினார்கள். படிக்க ஆதாரம் : http://pazhayathu.blogspot.in/2010/04/anti-computer-protests-1980-by-commun.html ஆனால் ராஜிவ் உறுதியாக இருந்தார் ! IT யை ஊக்குவித்தார் ! விளைவு இன்று IT துறை இந்திய பொருளாதாரத்தில் 8 % சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் 29 லட்சம் பேர் நேரடி...

அமைதி தந்த பரிசு !

Image
காவேரி பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் கலவரம் நடந்த பொழுது தமிழகத்தில் பெரிய அளவிலான வன்முறை ஏதும் நடைபெறவில்லை. தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற லெட்டர் பேடு கட்சிகள் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு தமிழகத்தின் பெயரை கெடுத்தன. ஆனால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி மு க மற்றும் அ தி மு க இரண்டும் பொறுப்புள்ள கட்சிகளாக செயல்பட்டு தமிழகத்தில் பெரிய வன்முறை சம்பவங்கள் செயல்படாமல் பார்த்துக்கொண்டன. அன்று அரசியல் வியாபாரிகள் ஏற்படுத்திய வன்முறை ஆட்டத்துக்கு தமிழகம் துணை போகாததன் விளைவு இன்று தமிழகத்துக்கு சாதகமாக மாறியுள்ளது. இது பற்றி இன்று தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் இருந்து சில மேற்கோள்கள் கீழே. ஏற்கெனவே வேறு சில நெருக்கடிகளால் தேக்கமடைந்திருந்த பெங்களூரு ஐடி நிறுவனங்களுக்கு சமீபத்திய கலவரம் அவற்றின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். இதனால், பெரும் முதலீட்டில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் சில பெங்களூருவை காலி செய்துவிட்டு, அமைதி தவழும் தமிழகத்திற்கு தங்களது நிறுவனத்தை மாற்றிவிடலாமா என்று யோசித்து வருகின்றன. கலவர நேரத்தில் கர்நாடகாவில...

தீபாவளி கசக்கிறது !

Image
இன்று தீபாவளி என்று சன் டிவி சிறப்பு நிகழ்ச்சி பார்த்தால்தான் தெரியும் போல !  ஊரு அவளோ அமைதியா இருக்கு ! விவசாயம் பொய்தது, மழையை காணும், பேண்ட் சட்டை எடுக்க குறைந்தது 1500 ரூபாய் வேண்டும், வெடி, இனிப்புகளின் விலை 200 ஐ கடந்து விட்டது.. எவர் வீட்டு போர் குழாயிலும் தண்ணீர் இல்லை... அரசாங்கம் 5000 செலவில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்ட சொன்னபொழுது 4 செங்களை நட்டு வைத்து அரசாங்கத்தை ஏமாற்றிய நாம் இன்று 40000 முதல் 100000 வரை செலவு செய்து போர் குழாய் ஆழத்தை அதிகப்படுத்துகிறோம்.. வறட்சி அதன் கோரா முகத்தை காட்ட தொடங்கி விட்டது.. இதுதான் திருவாரூரின் இன்றைய நிலை... குடிநீர் லாரிகளை இதுவரை பார்க்காத திருவாரூர் மக்கள் வெகு விரைவில் குடிநீர் லாரிக்கு பின்னால் ஓடப்போகிறார்கள்.. விழித்துக்கொண்டோர் பிழைத்து கொண்டார்.. திருவாரூர் மக்களே நாம் எப்போது விழிக்கப் போகிறோம்.. ? செலவோடு செலவாக மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவீர் ! வரும் டிசம்பர் மாத மழை உங்களை போர் குழாய் ஆழப் படுத்தும் செலவில் இருந்து காக்கட்டும்... பெற்றோரிடம் எதை எதையோ அடம் பிடித்து வாங்கும் நாம் மழை நீர் சேம...

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

Image
டேவிட் பிரவுன் ஆராய்ச்சி முடிவுகள்  டேவிட் பிரவுன் Ganesh: Studies of an Asian God என்ற தனது புத்தகத்தில் மிக விரிவாக வாதாபி விநாயகர் பற்றி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு  திருவாரூர் மற்றும் திருச்செங்காட்டங்குடி விநாயகர் சிலைகளின் படத்தை ஒப்பிட்டு ராபர்ட் பிரவுன் என்ற ஆராய்ச்சியாளரின் கருத்தையும் பதிவிட்டுள்ளார்.  தி ருச்செங்காட்டங்குடி (இடது) , திருவாரூர் வாதாபி விநாயகர் (வலது)  மூலம் : Ganesha : Studies of an Asian God புத்தகம்  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன  The Vatapi Ganapathi is still in worship at the Ganapatheswara Temple, Thiruccengattangudi. That It is a seventh century Chalukyan image, the one brought back by Cirutondaa from Badami appears, however, unlikely. Judging by the photograph, the image fits best stylistically with 10th 11th century Chola representation of Ganesha... The copy from Thiruvarur is even further stylistically from t...