Posts

மலேசிய பாமாயில் வாங்க தடை ! காஷ்மீர் கருத்துக்கு இந்தியா பதிலடி

பாமாயில் உற்பத்தியில் உலகளவில் முதலிடம் இந்தோனேசியா தான். ஆனால் நாம் மலேசியாவிடம் இருந்து தான் பாமாயில் இறக்குமதி செய்கிறோம். அதற்கு இந்திய அரசு வரிச்சலுகையும் தந்துவருகிறது. ஆனால் மலேசிய பிரதமர் சமீபகாலமாக இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார். இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது என்றார். CAA மூலம் முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதாக அறிக்கை விட்டு இந்திய அரசை கடுப்பேத்தினார்.. பொறுத்து பார்த்த இந்திய அரசு பதிலடி கொடுக்க முடிவு செய்தது. வியாபாரிகளை அழைத்து மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்திக்கொள்ள சொன்னது. அதற்கு பதிலாக இந்தோனேசியாவிடம் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.. இது மலேசிய அரசுக்கு பெரிய அடியாக இருக்கும். காரணம் பாமாயில் ஏற்றுமதி மலேசிய GDP யில் கிட்டத்தட்ட 3% பங்கு வகிக்கிறது..

செய்தித்தாள்களில் வரும் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்திருக்கிறீர்களா ??

Image
செய்தித்தாள்களில் வரும் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்திருக்கிறீர்களா ?? அவை எங்கே சாலை பணிகள் நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஒரு வழியாகும். உதாரணமாக கடந்த இரண்டு நாட்களாக தினத்தந்தி மற்றும் தினமலர் நாளிதழில் வெளியான நெடுஞ்சாலைத்துறையின் விளம்பரங்கள் மூலம் நாம் அறிந்திடும் செய்தி : சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத்தின் கீழ் கும்பகோணம் - மன்னார்குடி (ஆலங்குடி வழி) மற்றும் கும்பகோணம் - சீர்காழி சாலைகளை விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன என்பதே.. நில கையகப் பணிகள் முடிந்தால் அடுத்து டெண்டர் விடப்பட்டு சாலை போடும் பணிகள் துவங்கும்.. இனி செய்தித்தாளில் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்தால் படித்துவிடுங்கள்..

தமிழக ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே

Image
தமிழகத்தில் மிச்சமிருந்த பல ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே. இந்த பணிகள் முடிக்க 900 நாட்கள் (தோராயமாக ஜூன் 2022) காலக்கெடுவாக வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் வழங்கப்பட்டுள்ள பாதைகள் : மதுரை - மானாமதுரை, சேலம் - விருத்தாசலம் - கடலூர் துறைமுகம், திண்டுக்கல் - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனூர், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்தூர், விருதுநகர் - தென்காசி, திருச்சி - மானாமதுரை - விருதுநகர்.. L & T நிறுவனம் பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதிலும் பெயர் போன நிறுவனம். அவர்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டது ஒரு வகையில் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். 2022 க்குள் தமிழகத்தின் ரயில் பாதைகள் மொத்தமும் மின்மயமாக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கலாம்... படம் : Tamilnadu Train Users 🚆 தமிழ்நாடு ரயில் பயனர்கள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது

ரயில் கட்டணம் உயர்வு - சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு எவ்வளவு உயர்வு ?

Image
நீண்ட இடைவேளைக்கு பின் ரயில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது இந்திய அரசு ! சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு எவ்வளவு உயர்வு என்பதை விளக்கும் அட்டவணை கீழே

ஆன்லைன் விற்பனை - கடைக்கார்களின் லாபத்தை சாப்பிட துவங்கிவிட்டது

எனக்கு என்னவோ ஆன்லைன் விற்பனை எல்லாம் கடைகளை பெரிதாக பாதிக்காது என்றே தோன்றுகிறது. நான் இரண்டு முறை ஆன்லைனில் வாங்கி முயற்சி செய்தேன் எனக்கு பிடிக்கவில்லை எனவே நான் வாங்குவதை நிறுத்திவிட்டேன் என்று எனது கட்டுரையை படித்த நண்பர் ஒருவர் வாட்ஸப் செய்திருந்தார்... உண்மை தான் ஆன்லைன் விற்பனை இன்னும் கடைகளை அப்புறப்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிடவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைகளின் லாப சதவீதத்தை ஆன்லைன் நிறுவனங்கள் சாப்பிட துவங்கிவிட்டன என்றே நினைக்கிறேன். இன்றும் மக்களில் பெரும்பாலானோர் சத்யா அல்லது வசந்த் அன் கோ போன்ற கடைகளில் சென்று டீவி வாங்கினாலும், கடையின் சேல்ஸ் மேன் சொல்லும் விலையை உடனே பிளிப்கார்ட் அல்லது அமேசான் தளத்தில் தட்டிப்பார்த்து பேரம் பேச துவங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு ஆன்லைனில் வாங்க தயக்கம் இருந்தாலும், ஆன்லைனில் அதே பொருள் சில 100 ரூபாய்கள் குறைத்து காண்பிப்பதை கண்ணால் பார்த்தபின் கடையில் அதிக விலை கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது கடைக்காரர்களின் லாபத்தை சாப்பிட துவங்கி விட்டது. எதிர்பார்த்த லாபம் வராவிடில் கடைகள் மூடப்படுவதும் நடக்...

ஆன்லைன் வர்த்தகமும், இந்திய பொருளாதாரமும்

(இந்த கட்டுரை புதியதலைமுறை தமிழ் வார இதழின் 24 அக்டோபர் பதிப்பில் வெளிவந்தது..) இந்திய பொருளாதாரம் தேக்கநிலையை என்றொரு செய்தி ! பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனையில் ஆறே நாட்களில் சுமார் ₹ 19,000 கோடிக்கு வர்த்தகம் என்றொரு செய்தி ! இவை இரண்டையும் எப்படி பொருத்தி பார்ப்பது என்பதே பலரின் கேள்வி இரண்டு முக்கிய புரிதல்களுடன் இந்த செய்தியை அணுகவேண்டும் என்று நான் நினைக்கிறன். முதலாவது பிளிப்கார்ட், அமேசான் இரண்டு நிறுவனங்களுமே தங்களின் விற்பனையின் அளவை எக்காலத்திலும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ₹ 19,000 கோடி வரை விற்பனை என்பது யாரோ மூன்றாம் நபர் வெளியிட்டுள்ள கணிப்பு அல்லது அலசல் என்பதை நாம் கவனிக்கவேண்டும். உண்மையான விற்பனை இதைவிட அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ கூட இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து (slowdown) காணப்படுகிறது. ஆனால் அது 2008 ஆம் ஆண்டு நாம் சந்தித்ததை போன்ற மந்தநிலையாக (recession) மாறிவிடவில்லை .   உலகவங்கி சமீபத்தில் வெ...

தேஜஸ் போர்விமானத்தின் கப்பற்படைக்கான விமானம் பரிசோதித்து பார்க்கப்பட்ட வீடியோ

இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர்விமானத்தின் கப்பற்படைக்கான விமானம் (Naval variant) நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.. விமானம் தாங்கி போர்கப்பல்களில் ஓடுதளத்தின் நீளம் மிகக்குறைவு. எனவே போர் விமானம் மிக விரைவாக தனது வேகத்தை குறைத்து 0 Km/hr க்கு கொண்டு வரவேண்டியது அவசியம். இதை தான் நேற்று பரிசோதித்து பார்த்துள்ளனர் என்று நினைக்கிறன். வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்....