Posts

Showing posts from August, 2015

2015 திரும்பி பார்க்கிறோம் !

2015 ல் இதுவரை நடந்த நிகழ்வுகள் அதற்கு இந்திய மக்கள் கொடுத்த ரியாக்சன்கள் (Reactions) ஆகியவற்றின் தொகுப்பு 2015 திரும்பி பார்க்கிறோம் தோனி ஓய்வு   வருந்தினோம், மறந்தோம் ஜனவரி 26 ஒபாமா வருகை வரவேற்றோம், மறந்தோம் அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை பெருமைபட்டோம் மறந்தோம் டெல்லியில் அரவிந்த் கெஜர்வால் வெற்றி ஆச்சர்யப்பட்டோம் , மறந்தோம் உலகமே திணறிய பொழுது , ஏமன் மண்ணில் இருந்து நமது சகோதரர்கள் வெற்றிகரமாக மீட்பு கர்வம் கொண்டோம் , மறந்தோம் உலக கோப்பை தோல்வி கோலி , அனுஷ்காவை திட்டி தீர்த்தோம் மறந்தோம் 20 தமிழகர்கள் ஆந்திரா வனப்பகுதியில் சுட்டுக்கொலை செய்தியை படிக்க மறந்தோம் IPL பார்த்தோம் நேபாள் பூகம்பம் கண்ணீர் விட்டோம் மறந்தோம் ஜெயலலிதா விடுதலை குமாரசாமிக்கு கும்பிடு போட்டோம் மறந்தோம் மியான்மார் எல்லையில் இந்திய இராணுவம் அதிரடி தாக்குதல் மீசையை முருக...

ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட்

Image
தனது கனவுகளை நனவாக்க ஒரு குழந்தை  ! தனது கஷ்டத்தை தீர்க்க ஒரு குழந்தை என்று குழந்தைகள் பார்க்கப்பட்டது அந்த காலம். தனது பணத்தை வெளியுலகிற்கு காட்டவும் தனது தகுதியை வெளியுலகிற்கு காட்டவும்  இன்று குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். மகனுக்கும் மகளுக்கும் பொறியியலில் ஆர்வமே இல்லையென்றாலும் தனது ஸ்டேடஸ்க்காக(status) பொறியியல் படிக்கவைத்து பெரிய கல்லூரி என பல கல்லூரிகளில் நன்கொடை கொடுத்து பொறியியலுக்கு HYPE உருவாக்குவதே இந்த பெற்றோர் தான். என்மகன் சென்னையில் இந்த கல்லூரியில் படிக்குறான் நான் இந்தனை இலட்சம் கொடுத்து எனது மகனை கல்லூரியில் சேர்த்தேன் என்று கல்யாண வீடுகளில் பெருமை பேசும் பெற்றோர் பலர். இவர்களுக்கு சரியான ஒப்பீடு ரியல் எஸ்டேட் முதலாளிகள் தான் ! விலை போகாத நிலத்தை விலையேற்றி இன்று யாருமே நிலம் வாங்க முடியாத நிலைக்கு ஆளாக்கிய ரியல் எஸ்டேட் முதலாளிகள் போல் வேலைவாய்ப்பே இல்லையென்றாலும் பொறியியலுக்கு டிமாண்ட் உருவாக்குவது இவர்கள்தான். வரும் காலங்களில் ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட் விற்கப்பட்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.

அப்துல் கலாமுக்கு என்ன வேலையோ ?

Image
தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மறைவு ! அப்துல் கலாம் சொன்ன வழியில் நடந்து நாட்டைத்தான் உருப்புட செய்யப்போவதில்லை அட்லீஸ்ட் Whatsapp குரூப்களுக்கு அவரது படத்தையும் பெயரையும்வைப்போம் என நாங்கள் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டோம். இனி வருடாவருடம் ஜூலை கடைசியில் Facebook, Whatsapp குரூப்களில் தவறாமல் கலாம் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்  அவ்வளவுதான் தமிழக இளைஞர்கள் சக்தி. புலி படமோ தல 56 வது படமோ வெளிவந்தால் அப்துல் கலாமுக்கு Facebook,Whatapp ல் என்ன வேலையோ ? #RIPAbdulKalamQuotes #RIPAbdulKalamDreams - விக்கி 

இந்திய செய்தி சேனல் பார்க்க போறிங்களா ? எச்சரிக்கை !

Image
யாகூப் மேமன் குற்றவாளி என பலமுறை தனது தீர்ப்பில் சுட்டிகாட்டிய உச்ச நீதிமன்றம் அவருக்கு எந்த கருணையும் காட்டாமல் தீர்ப்பை உறுதி செய்த பின்னரே யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது ! இதை பற்றி செய்தி வெளியிட்ட தமிழ் ஹிந்து நாளிதழின் இணைய தளம், யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது என்ற செய்திக்கு கீழேயே யாகூப் மேமன் நல்லவர் என்பது போன்றதொரு கட்டுரையையும் பிரசுரித்தது.. எனில் நீங்கள் நாட்டுமக்களுக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ? யாகூப் மேமன் என்ற ஒரு நல்லவன் உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பால் தூக்கில் இடப்பட்டார் என்றா ??  மீடியாவின் TRP பசி TRP வெறியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் கையாளப்பட்ட ஹிந்து முஸ்லிம் பிரிவினை அரசியலை விட மோசமான பிரிவினை அரசியலை இப்பொழுது தங்கள் பிழைப்புக்காக மீடியாக்கள் கையாள்கிறார்கள் . இந்திய மக்கள் மதங்களை தாண்டி என்றுமே நல்லவர்களை கொண்டாடவே செய்கிறார்கள். அதற்கு திரு. அப்துல் கலாம் ஐயா ஒரு சிறந்த உதாரணம். மீடியா விளையாடும் ஹிந்து முஸ்லிம் விளையாட்டில் நாம் விழுந்து விடக்கூடாது. மீடியாவின் செய்திகளை எச...