மருத்துவ நுழைவு தேர்வு - சில உண்மைகள்
தேசிய அளவில் மருத்துவ நுழைவு தேர்வு பற்றிய ஒரு தவறான புரிதல் என்னவென்றால் அனைத்து மருத்துவ கல்லூரி இடங்களுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் என்பதே. உண்மை என்னவெனில் மொத்த மருத்துவ இடங்களில் வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே மருத்துவ நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இருக்குமெனில் அதில் 15 சீட் மட்டுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் மீதி இடங்கள் வழக்கம் போல் மாநில தேர்வில் (+12 தேர்வில்) பெற்ற மதிப்பெண்ணை கொண்டே நிரப்பப்படும். கிராமபுறங்களில் படித்தவர்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் தனியார் கல்லூரிகள் தங்கள் பண வேட்டை குறையும் என்பதற்காக கிளப்பி விடும் காரணங்கள் என்பதை நுழைவு தேர்வை எதிர்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.