Posts

Showing posts from March, 2017

நதிநீர் இணைப்பில் இறங்கி அடிக்கும் சந்திரபாபு

Image
கோதாவரி நதியிலிருந்து 3000 கன அடி நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதை வறட்சி பாதித்த கிருஷ்ணா நதி நீர் பகுதிக்கு திருப்பி விடும் திட்டம் தான் பட்டிசீமா நீர் திட்டம்.  திட்டத்தின் ஒருபகுதியாக ‘பட்டிசீமா’ அணைக்கட்டை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்தது. படங்கள் கூகிள் தேடுதளத்தில் பெறப்பட்டவை  இந்த அணையின் கட்டுமானப் பணி வெறும் 173 நாட்களில் முடிக்கப்பட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இறங்கி அடிக்கிறார் சந்திராபாபு நாய்டு ! தொப்பிக்கு ஓட்டு கேட்டு ரோட்டில் சுற்றுகிறார் நம்ம எடப்பாடி ! நம்மளும் காவேரி வைகை இணைப்பு திட்டம்னு ஒன்னு 2008 ல் தொடங்குனோம். என்னங்க ஆச்சர்யமா இருக்கா ? அந்த ப்ராஜெக்ட் அடிக்கல் நாட்டி 9 வருஷம் ஆச்சு ! அடிக்கல் நாட்டுனத்தோட சரி ! நம்பமாட்டீங்கன்னா இத படிச்சுப்பாருங்க:  https://en.wikipedia.org/wiki/Kaveri%E2%80%93Vaigai_link_canal http://www.deccanchronicle.com/nation/current-affairs/260317/aps-river-linking-project-finished-in-a-year-enters-limca-book-of-records.html

உலக தண்ணீர் தினம் : திருவாரூர் கமலாலய குளம்

Image
தண்ணீர் தினம் என்றவுடன் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது திருவாரூர் கமலாலயம் தான் ! திருவாரூர் கோவிலின் கமலாலயம் குளம் 350 மீட்டர் நீளம் 250 மீட்டர் அகலம் உடையது. காவேரி ஆற்றில் வரும் நீர் தானாக குளத்தில் நிரம்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் கமலால குளத்தின் நீர் தான் திருவாரூரில் நிலத்தடி நீர் ஓரளவுக்கு இருப்பதற்கு காரணம். ஆனால் திருவாரூர்காரர்கள் (என்னையும் சேர்த்து) கமலாலய குளத்தை பார்த்துக்கொள்ளும் லட்சணம் வெட்கக்கேடானது. குளத்தை சுற்றி இருக்கும் எல்லா மருத்துவமனைகளின் குப்பைகளும் கொட்டுமிடம் கமலாலயம் தான். சொத்துவரியை ஒழுங்காக வசூலிக்க வழியில்லாத நகராட்சி தான் ஏதோ கோடிரூபாய் வருமானம் வரும் என்று கமலாலய குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு குத்தகைக்கு விட்டுருக்கிறார்கள். அவர்கள் மீனுக்கு உணவாக இறைச்சிக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பலகாலம் குளத்தின் நீர் சுத்தமாகத்தான் இருந்தது. நான் பள்ளி செல்லும் காலத்தில் கூட பலரும் கமலாலயத்தில் தினமும் குளிக்கும் பழக்கமுடியவர்களாக இருந்தார்கள். இன்று அதே கமலாலயம் அருகில் செல்ல முடியாத அளவுக்கு பச்சை நிறத்தில் ஏதோ கெமிக்கல் குப்பை தொ

இராணுவ கொள்முதலில் வரவேற்கப்படவேண்டிய மாற்றம்

Image
இந்தியாவிற்கு இராணுவ ரீதியில் அதிக உதவி செய்த நாடு ரஷ்யா தான். எனவே நாம் அமெரிக்கா பக்கம் அதிகம் போகக்கூடாது என்ற கருத்து பலர் மத்தியில் உள்ளது, ஆனால் ரஷ்யா செய்யும் ஆயுத உதவிகளில் இருக்கும் பின்னணி தந்திரத்தை நாம் கவனிக்க வேண்டும். IT நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் development (ஒரு பொருளை உருவாக்கி விற்பனை செய்யவது ) முறையில் வரும் லாபத்தை விட support (ஏற்கனவே விற்றபொருளுக்கு service பார்த்துத்தருவது) முறையில் தான் கொள்ளை லாபம் என்று. ரஷ்யா தான் விற்கும் விமானங்களுக்கு தொழில்நுட்ப உதவியை (Technology Transfer) என்றுமே வழங்குவதில்லை. உதாரணமாக இந்திய அரசு ரஷ்யா தயாரிப்பான சுகாய் விமானங்களில் 55000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஆனால் சின்ன சின்ன தொழில் நுட்ப கோளாறுக்கும் நாம் ரஷ்யாவின் உதவியையே நாடவேண்டும். அதற்கு அவர்கள் கேட்கும் சேவை கட்டணமும் மிக அதிகம். இந்திய விமான படையில் சுகாய் விமானங்கள்  மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் தற்போதைய இராணுவ அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர் மேலே குறிப்பிட்ட நிலைப்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டுவர முயல்கிறார்.

அவளும் ! நானும் ! நீங்களும் !

Image
ஆண்டு 2011 வீட்ல பொண்டாட்டி தொல்லை போல அதான் வீட்டுக்கு போக மனசில்லாம வண்டிய நிப்பாட்டிவச்சுருக்கான் என்றார் எதிரில் இருந்தவர், பாவம் அவருக்கு தெரியாது கடவுள் ஏன் திருச்சி ரயில்நிலையத்தில் அரைமணிநேரமாக ரயிலை நிறுத்திவச்சுருக்கார்னு ! என் ஹெட்போனில் ஜி வி பிரகாஷ் கத்திக்கொண்டு இருந்தார் ! யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ !   அந்த ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட தேவதை அவள் அப்பா அம்மாவுடன் வந்து எனக்கு எதிர்சீட்டில் அமர்ந்தாள். சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஆயாசமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு நொடி ஒரு சிறு பார்வை என் பக்கம் வீசினாள். ஜி வி பிரகாஷின் தொடர்ந்து பாடினார். அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா ! உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா ! நா தலகாலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே ! ஆடுகளம் பாட்டுக்கும், அவளின் ஒரே நொடி காந்தப்பார்வைக்கும் கூட தொடர்பு உண்டு என மேற்கத்திய Choas தியரிக்கு கிழக்கில் நான் புதுவிளக்கம் கொடுத்துக்கொண்டேன் ! அந்த நொடியே அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். எங்களுக