உணவு விற்பனையில் அந்நிய நேரடி முதலீடு

இந்திய அரசு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் (Food only Retail) சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் அந்நிய நாட்டு நிறுவனங்கள் கடைகளாகவோ (Brick and Mortar stores) அல்லது இணைய கடைகளாகவோ (online shops) உணவு துறையில் இந்தியாவில் கால்பதிக்க முடியும்.

ஆனால் ஒரேயொரு நிபந்தனை இந்தியாவில் மட்டுமே அவர்கள் கொள்முதல் செய்யமுடியும். (அதாவது காய்கறி பழங்களை குஜராத்திலோ மதுரையிலோ வாங்கி விற்கலாம் ஆனால் ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கையில் வாங்க முடியாது)


மேலே சொன்ன முதலீடு வாய்ப்பை பயன்படுத்தி அமேசான், Bigbasket, Grofers போன்ற பல நிறுவனங்கள் இந்திய உணவு துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.

இதற்கு எதிர்வினையாற்றும் முன் கீழே உள்ள இரண்டு செய்திகளை படியுங்கள். 

செய்தி 1:

விவசாய தற்கொலை பற்றி செய்தி அதிகம் செய்தி வந்த கடந்த ஆண்டு வெளியான கீழே உள்ள செய்தி உங்களுக்கு அதிர்ச்சி தரலாம்

" Total food grain production is estimated at an all-time high of 272 million tonnes in 2016-17, 8% higher than last year, and surpassing the previous record of 265 million tonnes in 2013-14.

Production of key crops like rice, wheat and pulses will be at record levels during the year. Production of rice increased by over 2 million tonnes, from 104.4 million tonnes last year to 106.7 million tonnes in 2016-17 "

இந்தியா உணவு உற்பத்தியிலேயே கடத்த ஆண்டு தான் அதிக உற்பத்தி நடைபெற்றுள்ளது.

ஆதாரம் : http://www.livemint.com/Politics/f2etZiWEzUlq4I4J490UjM/Record-272-million-tonnes-food-grains-in-201617-agricultur.html

செய்தி 2:

இன்னொரு செய்தி இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதம் ஒவ்வொரு வருடமும் வீணாகிறது.

அதாவது ஒரு பக்கம் அதீத உற்பத்தி மற்றொரு பக்கம் உற்பத்திக்கு சரியான விலை கிடைக்காதது என்று விவசாயிகள் மத்தளம் போல் இரண்டுபக்கமும் இடிவாங்குகிறார்கள்.

உணவு பொருள் விற்பனையின் லாபம் இடைத்தரகருக்கே அதிகம் செல்கிறது. அதே சமயம் விவசாயிக்கு பெரிதாக எதுவும் கிடைப்பதில்லை.

இதை சமாளிக்க விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து தேவை இருக்குமிடத்தில் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் அதே போல் உணவு பொருள் விலையும் கட்டுக்குள் இருக்கும்.

இதை அமேசான் போன்ற நிறுவனங்கள் சிறப்பாக செய்யும் என நம்பலாம்.

இந்தியாவில் மட்டுமே உணவு பொருள் கொள்முதல் செய்யவேண்டும் என்ற கொள்கையில் அரசு உறுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதமே.

மேலும்இதைப்பற்றி படிக்க:

http://www.livemint.com/Opinion/xQmunAF6TpRpNaTrqGCcFK/When-big-retail-meets-small-farmers.html?li_source=LI&li_medium=news_rec


Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)