Cascading effect of having an ugly Government (ஒரு திறமையற்ற அரசால் ஏற்படும் விளைவுகள்) - Episode 1

தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வில் state boardல் படித்தவர்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக கோர்ட்டில் உள்ள வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. (தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வராது என்று நான் நினைக்கிறேன்)

எனவே மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு திட்டமிட்ட படி நடைபெறாது.

தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு

தமிழ்நாட்டை பொறுத்தவரை மருத்துவ கலந்தாய்வு முடிந்தால் தான் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். எல்லாவருடமும் ஜூலை 13 தேதிக்கு பாதி பொறியியல் கலந்தாய்வே முடிந்திருக்கும். இப்பொழுது பொறியியல் கலந்தாய்வு தேதி கூட அறிவிக்கப்படவில்லை.

பொறியியல் துறையில் ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. நிறுவனங்கள் மாணவர்களை தட்டி கழிக்க history of arrear இருக்கக்கூடாது. குறைந்தது 70 சதவீத CGPA இருக்கவேண்டும் போன்ற பல criteria களை முன்வைக்கின்றன.

பொறியியல் கலந்தாய்வு தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே கல்லூரிகள் திறப்பதும் தாமதமாகும்.

பொறியியல் படிப்பில் முதல் வருடத்தில் அதிலும் குறிப்பாக M1 மற்றும் M2 போன்றவற்றில் தான் பலரும் arrear வைப்பார்கள்.

இப்பொழுது கல்லூரிகள் திறப்பது தாமதமானாலும் semester தேர்வுகளை தள்ளிவைக்க மாட்டார்கள். எனவே கஷ்டப்பட போவது மாணவர்களும் ஆசிரியர்களும் தான். பலரும் arrear வைப்பார்கள்.

இது பல மாணவர்களின் வேலைவாய்பை கேள்விக்குறியாக்கும்.

அது சரி இங்கே எங்களுக்கு பான் மசாலா குட்கா காரனிடம் கமிஷன் வாங்கவும் ஆத்து மணலை திருடி விற்கவுமே நேரம் போதவில்லை, இதில் மாணவர் நலன் மாங்கா நலன் சீ சீ !

இந்த அரசு 5 வருடம் பூர்த்தி செய்தால் தமிழ்நாடு 10 வருடம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்லும்.

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)