சென்னை ஓபன் இனி இல்லை !

சென்னை ஓபன் இனி இல்லை ! இனி அது மஹாராஷ்டிரா ஓபன் ! காரணம் நிதி இல்லையாம் !

சென்னை ஓபன் தமிழ்நாட்டுக்கு அத்தனை முக்கியமா?

உலகத்தில் நடக்கும் டென்னிஸ் தொடர்களில் 4 கிராண்ட்ஸ்லாம் (Grand slam) போட்டிகளுக்கு அடுத்து 5வது பெரிய டென்னிஸ் தொடர் ATP World Series.

சென்னை ஓபன் ATP World Series தொடரில் ஒன்று. இந்தியாவில் நடக்கும் ஒரே ATP World Series போட்டி நம்ம சென்னை ஓபன் மட்டும் தான்.

சென்னையில் 22 வருடமாக தொடர்ந்து நடைபெற்றுவந்த சென்னை ஓபன் போட்டியை அடுத்த வருடம் நடத்த நடவடிக்கை கூட எடுக்க வக்கில்லாத அரசு நம்ம எடப்பாடி அரசு !

ஜெயலலிதா இருந்த வரை விளையாட்டு துறைக்கு பெரிய அளவில் உதவி செய்துவந்தார். இதை நான் சொல்லவில்லை பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சொன்னார்.

சென்னை ஓபன் இனி இல்லை


2013 ஆம் ஆண்டு World Chess championship போட்டியை சென்னையில் நடத்த பெரிய அளவில் முயற்சி மேற்கொண்ட ஜெயலலிதா 29 கோடி நிதி ஒதுக்கி Vishwanath Anand vs Magnus Carlsen போட்டியை இந்தியா பெருமைப்படும் வண்ணம் நடத்தி நினைத்ததை முடித்துக்காட்டினார்.

இந்தியாவில் போட்டி என்றவுடன் தயங்கிய Magnus Carlsen னை சென்னைக்கு வரவழைக்க போட்டியின் பரிசுத்தொகையை பன்மடங்கு உயர்த்தி வழங்கினார் ஜெயலலிதா !

2016 ஆம் ஆண்டு Magnus Carlsenனுக்கு Newyork போட்டிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையைவிட 2013 ஆம் ஆண்டு சென்னையில் வழங்கப்பட்ட தொகை பலமடங்கு அதிகம் என்பது ஆச்சர்யமான செய்தி.

இன்று அம்மாவின் ஆட்சியை அப்படியே நடத்துவதாக தினமும் பேட்டி அளித்து பெருமைபட்டுக்கொள்ளும் இந்த மங்குனி அமைச்சர்களை ஜெயலலிதாவே மன்னிக்கமாட்டார் !

படிக்க ஆதாரம் :

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)