Posts

Showing posts from January, 2019

பணம் உங்களுக்காக உழைக்க - பகுதி 1

Image
முதலீடு பற்றி நான் படித்த தகவல்களை இனி எழுதலாம் என்றுள்ளேன் ! அதன் முதல் பதிவு இதோ நம்மில் பலரும் tnstc.in என்கிற தமிழக அரசின் பேருந்து முன்பதிவு இணையதளத்தை பயன்படுத்தியிருப்போம் ! ஆனால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் Tamilnadu Transport Development Finance Corporation Ltd (TDFC) நிறுவனத்தை பற்றிய விளம்பரத்தை நீங்கள் கவனித்ததுண்டா ? TDFC பற்றிய விளம்பர குறிப்பு வட்டமிடப்பட்டுள்ளது  போக்குவரத்து கழகத்தின் துணை நிறுவனமான TDFC யில் நம் பணத்தை முதலீடு செய்தால் (குறைந்த பட்சம் ₹10,000) 2 வருடத்துக்கு 7.8% வட்டியும், 3 முதல் 5 வருடத்துக்கு 8.25% வட்டி கிடைக்கும் ! வங்கிகள் தற்பொழுது  6.5% to 7.5% என்கிற அளவில் வட்டி தருகின்றனர் என்பதை கருத்தில் கொள்க ! அரசு நிறுவனம் என்பதால் பணதிற்கும் வட்டிக்கும் Guarantee ! இந்த முதலீடு சாதரணமாக வங்கியில் செய்தால் கிடைக்கும் வட்டியை விட கூடுதல் வட்டியை தரக்கூடியது ! மேலும் தகவலுக்கு - http://www.tdfc.in/interestrates.html

பிளாஸ்டிக் தடை விவசாய விவசாய பொருட்களின் தேவையை அதிகரிக்கும்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு இந்த பிளாஸ்டிக் தடை ! தாமரை இலை பயன்பாடு அதிகரித்துள்ளது ஒரு நல்ல உதாரணம் ! தாமரை இலை வேண்டுமெனில் குளங்கள் பாதுகாக்க படவேண்டும்.. குளமிருந்தால் தானே தாமரை மலரும் ? தாமரையின் தேவை அதிகரிக்கும் பொழுது குளங்களில் நீர் இருப்பு மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலெழும்.. அப்படித்தான் குளங்களையும் தாமரையையும் பாதுகாக்க முடியும்.. எந்த பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற ஒரே வழி அதற்கு சந்தையில் தேவையை ஏற்படுவது தான்... வெறும் இரக்கம் மட்டும் எந்த ஒரு பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.. விவசாயத்தை நாம் அணுகும் பொழுது இரக்கத்தை விட பொருளாதார பார்வையுடன் அணுகுவது தான் விவசாயத்தை காப்பாற்ற உதவும்... 

கங்கை நதியை சுத்தம் செய்வதில் ஒருபடி முன்னேற்றம்

கங்கை நதி சுத்தம் செய்ய உமா பாரதி அமைச்சராக இருந்தவரை ஒரு சதவீத அளவு கூட வேலை நடக்கவில்லை.. எனவே மோடி அவரை மாற்றிவிட்டு அந்த பணியை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடன் வழங்கினார்.. நிதின் கட்கரி மோடி அமைச்சரவையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர்களில் முதன்மையானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்... அவர் கையில் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டம் சென்றவுடன் நேரடியாக கங்கையில் கலக்கப்பட்ட சாக்கடை கழிவு கால்வாய்கள் அடைக்கப்பட்டன.. சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டது....மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது... இஸ்ரோ முதல் நாட்டின் பல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் தலைமையில் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டம் வேகமேடுத்தது... விளைவு... கடந்த 10 வருடமாக ph அளவு 6 என்ற நிலையில் இருந்த கங்கை நதி சமீபத்தில் 8.5 என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறது..கரைந்த ஆக்சிஜன் (dissolved oxygen) அளவு 4 என்கிற அளவில் இருந்து 2.5 என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது.. ஆனால் இது ஆரம்பம் தான் இன்னும் கங்கை நதி சுத்திகரிப்பில் நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்.. ஆனால் நாம் சரியான ...

மீண்டும் மீண்டும் பேசப்படும் ரபேல் - உண்மை என்ன ?

2004 முதல் 2014 ஆண்டு வரை சீனா 400 போர் விமான்களை வாங்கியுள்ளது ! பாகிஸ்தான் தனது விமனாப்படை பலத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.. ஆனால் இந்திய விமானப்படையின் பலம் (1 squadron = 18 விமானம்) 2002 ல் - 42 squadron (756 விமானம்) 2007 ல் - 36 squadron (648 விமானம்) 2012 ல் - 33 squadron (594 விமானம்) வாஜ்பாய் விமானப்படையின் பலம் குறைகிறதே என்று 126 விமானம் வாங்க திட்டம் கொண்டுவந்தார்.. அதில் உடனடி தேவைக்கு 18 விமானங்கள் (1 squadron) பறக்கும் தகுதியுடன் (fly away condition) பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த முடிவெடுத்தார். ஆனால் அதற்குள் மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அடுத்து வந்த காங்கிரஸ் அரசு 10 வருடங்களுக்கு ஒரு போர் விமானம் கூட வாங்கவில்லை. விமானப்படையின் விமானங்களின் எண்ணிக்கை 756 ல் இருந்து 594 க்கு குறைந்தது.. மோடி பதவியேற்றவுடன் விமானப்படையின் பலம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு உடனடி தேவைக்கு 36 ரபேல் விமானங்கள் (2 squadron - சீனா எல்லைக்கு 1 squadron, பாக்கிஸ்தானுக்கு 1 squadron) வாங்க முடிவெடுத்து அதை செய்தும் முடித்து விட்டார்.. காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் ...