கங்கை நதியை சுத்தம் செய்வதில் ஒருபடி முன்னேற்றம்

கங்கை நதி சுத்தம் செய்ய உமா பாரதி அமைச்சராக இருந்தவரை ஒரு சதவீத அளவு கூட வேலை நடக்கவில்லை..

எனவே மோடி அவரை மாற்றிவிட்டு அந்த பணியை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடன் வழங்கினார்..

நிதின் கட்கரி மோடி அமைச்சரவையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர்களில் முதன்மையானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்...

அவர் கையில் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டம் சென்றவுடன் நேரடியாக கங்கையில் கலக்கப்பட்ட சாக்கடை கழிவு கால்வாய்கள் அடைக்கப்பட்டன.. சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டது....மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...

இஸ்ரோ முதல் நாட்டின் பல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் தலைமையில் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டம் வேகமேடுத்தது...

விளைவு...

கடந்த 10 வருடமாக ph அளவு 6 என்ற நிலையில் இருந்த கங்கை நதி சமீபத்தில் 8.5 என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறது..கரைந்த ஆக்சிஜன் (dissolved oxygen) அளவு 4 என்கிற அளவில் இருந்து 2.5 என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது..

ஆனால் இது ஆரம்பம் தான் இன்னும் கங்கை நதி சுத்திகரிப்பில் நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்.. ஆனால் நாம் சரியான திசையில் பயணத்தை துவங்கி விட்டோம்..

நிதின் கட்கரிக்கு வாழ்த்துக்கள் !

பின்குறிப்பு:

தமிழ்நாட்டில் கூவம் நதி சுத்தம் செய்யும் திட்டம் அண்ணா முதல்வராக இருந்த பொழுது துவங்கப்பட்டது. இன்று வரை பல ஆயிரம் கோடிகள் வாரி இறைத்தாயிற்று..ஆனால் கூவம் எந்த நிலையில் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் பல ஆயிரம் கோடிகளை சாப்பிட அரசியல் கட்சிகளே எங்களுக்கு போதும் என சிலர் எண்ணுகிறார்கள்.. அவர்களுக்கு வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை..

ஆதாரம்
https://m.hindustantimes.com/lucknow/marine-life-in-ganga-set-for-a-splash-as-water-quality-improves/story-vgq94n6LVulYe4p1avx32I_amp.html?__twitter_impression=true


Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)