ஜெய்ஷ் இ முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா !!! பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றி !! பின்னணி : இந்திய பாராளமன்றத்தின் மீதான தாக்குதல், மும்பை தாக்குதல், பதன்காட் மற்றும் புல்வாமா போன்ற கொடிய தாக்குதல்களை இந்தியாவில் நிகழ்த்திய JeM தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மூன்று முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்த தீர்மானங்களை சீனா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தை கொண்டு முறியடித்தது புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியாவிற்கு ஆதரவாக பிரான்சும், ஜெர்மனியும் மசூத் அசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை நான்காவது முறையாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்தது இந்த தீர்மானத்துக்கு சீனா தவிர மற்ற 14 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன ஆனால் சீனா மட்டும் தனது நண்பன் பாகிஸ்தானுக்கு சாதகமாக இந்த தீர்மானத்துக்கு தற்காலிகமாக தடை கொண்டுவந்தது. சீனாவின் பல சாலை திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மசூத் அஸார் தீவிரமாக பணி...