ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு ஆதரவாக இறுதியில் வாக்களித்தாலும், கவுன்சில் கூட்டத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையே பிரிட்டன் எடுத்ததாக செய்திகள் வருகின்றன பிரிட்டனில் பாகிஸ்தான் மக்கள் அதிகம் வாழ்வதும் (சவுதிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் மக்கள் அதிகம் வாழும் நாடு பிரிட்டன்), அரசு பதவிகளில் பாகிஸ்தான் மக்கள் பலர் இருப்பதும் (லண்டன் நகரின் மேயர் கூட பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்தான்) பிரிட்டன் பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட காரணமாக இருக்கலாம்.. பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் பழைய கலவர வீடியோ ஒன்றை தற்பொழுது காஷ்மீரில் கலவரம் நடப்பது போல் திரித்து வெளியிட்டதும் , ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தின விழா லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்றபொழுது அங்கு கூடிய பாகிஸ்தானியர் முட்டைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி விழாவை பாதியில் நிறுத்த வைத்தபொழுதும் லண்டன் போலீசார் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாதும் இந்தியாவிற்கு பிரிட்டன் மேல் அதிருப்தியை அதிகரித்துள்ளது.