Posts

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைப்பது எப்படி ?

Image
மத்திய அரசு  ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு முகாம்களும் தொகுதி வாரியாக ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டது.  நீங்கள் உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து விட்டீர்களா ?  இணைக்காவிட்டால் கவலைப்படவேண்டாம்.  ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை  ஆன்லைனிலும் ஏன் மொபைலிலும் கூட  செய்யலாம்.  அதற்கான வழிமுறைகள் இதோ ! http://electoralsearch.in/  தளத்துக்கு செல்லவும்.  முதலில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை (EPIC Number ) கொண்டோ அல்லது தகவல்களை கொண்டோ உங்கள் வாக்காளர் விவரங்களை தேடவும் (Search). உங்கள் வாக்காளர் தகவல்கள் கீழே காட்டப்படும். அதில் FEED AADHAAR NO. என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் தகவல்களை தரவும். ஆதார் தகவல்களை உள்ளீடு செய்த பின் submit செய்யவும்.  உங்கள் ஆதார் கார்டு வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிடும். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில் சந்தேகம் இருப்பின் அல்லது மேலே தரப...

என்னதான் இருக்கு இந்தியாவில் ?

Image
கோகினூர் வைரம் நம்மலோடது தெரியுமா ? , வெள்ளக்காரங்க நம்கிட்ட இருந்து கப்பல் கப்பலா தங்கத்த அள்ளிட்டு போனாங்கலாம் என இந்தியாவின் பழைய செல்வ செழிப்பை பற்றி பலர் பெருமை பேசுவதை கேட்டிருப்போம். அப்படி என்னதான் இருந்தது இந்தியாவில் ? இந்திய அரசர்களிடம் இருந்த தங்கத்தையும், கோவில் நகைகளையும் பார்த்து மட்டுமா உலகம் இந்தியாவை செல்வா செழிப்பான நாடாக எடைபோட்டது ? வெறும் அரசர்கள் வைத்திருந்த செல்வத்தை கொள்ளையடிக்கவா  வெள்ளைக்காரன் 200 வருடங்கள் இங்கேயே தங்கினான் ? அப்படித்தான் இந்தியர்கள் நினைக்கிறார்கள் . ஆனால் உலகத்தின் இந்தியா மீதான பார்வை வேறு. நம் வரலாற்று புத்தகங்கள் ஒன்றை  விளக்க தவறிவிட்டன இந்தியாவின் செல்வம் அதன் அரசர்களிடமும் கோவில்களிலும் கொட்டிக்கிடந்த தங்கம் அல்ல இந்திய மக்களின் உழைக்கும் குணம். இப்படி யோசித்து பாருங்கள் கடந்த 10 வருடங்களில் மட்டும் எத்தனை ஊழல்கள் அரசாங்கத்துக்கு எத்தனை இலட்சம் கோடி இழப்புகள் எத்தனை கறுப்பு பண பதுக்கல்கள், இத்தனை இருந்தும் இந்திய பொருளாதாரம் தான்  இன்று  உலகின் அதிவேகமாக வளரு...

சம்பளத்தோடு ஆபரேஷன் - தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்

Image
லட்ச லட்சமாக பணம்கொடுத்து வைத்தியம் பார்த்தவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். வைத்தியமும் பார்த்துவிட்டு கையில் பணமும் கொடுத்த தஞ்சாவூர் கதை பற்றி கேள்விபட்டதுண்டா? தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்  தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆவணங்களை ஆய்வு செய்த ஒரு நிபுணர் குழு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றது.  காரணம், சரஸ்வதி மஹால் ஆவணங்களில்   நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே  44 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ததற்கான குறிப்புக்கள் உள்ளன. அவற்றில் 6  குறிப்புக்கள்  மோடி ஸ்கிரிப்ட் (Modi  Scripts)   எனப்படும் மராத்தா மொழியிலும், 38 குறிப்புக்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. சிகிச்சை எடுத்து கொண்டவர்களின் வயது 5 முதல் 60. அந்த ஆவணங்களோடு 18 படங்களும் கிடைத்தன. ( சில படங்கள் உங்கள் பார்வைக்கு )   இந்த படங்கள் கண் நோயையும் அதற்கு சிகிச்சை அளிக்கும் முறையையும் தெளிவாக விளக்கியுள்ளன. "கார்னியா (Cornea), லென்ஸ் (lens), கண்ஜெக்டிவ் (Conjective) " போன்ற பல நவீன கால வார்த்தைகளு...

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

Image
திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் : திருவாரூர் தங்க கோவில் : திருப்பதி கோவில் தங்கத்தால் செய்யப்பட்ட கோபுரத்திற்கு பெயர் போனது. திருப்பதியை போன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை கோபுரமும் தங்கத்தால் செய்யப்பட்டது.  ஆச்சர்யமாக உள்ளதா ? தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவாரூரில் பிறந்த பரவை என்ற நாட்டிய பெண்ணின் மேல் காதல். அவளுக்கு திருவாரூர் கோவில் என்றால் அத்தனை பிரியம். அவள் வேண்டுகோளுக்காக ராஜேந்திரன் திருவாரூர் கோவில் விமானம் மற்றும் கருவறை சுவர்களை தங்கத்தால் வேய்ந்தான். தங்கமா ? திருவாரூர் கோவில்லையா ? யார்கிட்ட விட்ரிங்க ரீல் என்று கூறுவோருக்கு ராஜேந்திரன் செய்த கல்வெட்டு வரிகள்  " உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய்  மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான் " தங்கம் காலபோக்கில் பலரால் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மிஞ்சம் இருப்பது கற்க...

சென்னை MTCக்கு ஆண்கள் சார்பாக ஒரு கோரிக்கை

Image
சென்னைக்கு வந்த பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யத்தை கொடுத்தது. முதலாவது பேருந்தில் இடது புறம் இருக்கை முழுவதும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, இரண்டாவது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்  அமரும் ஆண்களை " எழுந்திரிங்க இது லேடீஸ் சீட் " என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெறுவது (நம்ம ஊர்ல பொண்ணுங்க தைரியமா இது லேடீஸ் சீட் எழுந்திரிங்க என்று குரல் கொடுத்து நான் பார்த்தது இல்லை). ட்ரைனிங் பீரியட் பொழுது ஆபீஸ் நடந்து போகும் தொலைவில் இருந்ததால் பேருந்தில் பயணம் என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான். சமீப மாதங்களில் பேருந்தில் ஆபீஸ் சொல்லவேண்டிய  சூழல்.ஆபீஸுக்கு பேருந்தில்  பயணிக்கும் பொழுது மற்றுமொரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது. இடது பக்கம் பெண்கள் இருக்கை பலவும் காலியாக இருக்க பெண்கள் வலது பக்கம் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து  இருந்தார்கள். ஆண்கள் பலர் நின்று கொண்டே பயணம் செய்தார்கள். அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தங்களில் காலியாக இருந்த பெண்கள் இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கடைசி வரை ஆண்கள் நின...

யார் குற்றவாளி ?

Image
புரட்சி ! புரட்சி ! புரட்சி ! தூங்கிக்கொண்டு மட்டுமே இருக்கும் அரசு துறைகளுக்கு மத்தியில், முதல் துறையாக தமிழக கல்வி துறை விழித்து எழுந்து கொண்டுள்ளது..! ஆம் ! 1978 ஆம் ஆண்டு முதல் எழுத்து தேர்வாக இருந்துவந்த +1 வகுப்பின் தட்டச்சு (Typewriting) முதல் தாள் தேர்வு 2015 ஆம் கல்வி ஆண்டு முதல் செய்முறை தேர்வாக மாற்றப்படுமென அறிவித்துள்ளது. அதவாது தட்டச்சுக்கு எதுக்கு எழுத்து தேர்வு என்று யோசித்து முடிவெடுக்க 36 ஆண்டுகள் கடந்து விட்டன. Source: http://crsttp1.blogspot.in/2014/12/2_19.html இந்த செய்தி ஒன்றே போதும் நமது கல்வித்துறையின் இலட்சணத்தை சொல்வதற்கு. தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், மத்திய அரசு ஆசிரியருக்கு நிகரான ஊதியம் தரவேண்டும், எந்த தேர்வும் இல்லாமல் நேரடியாக வேலை தரவேண்டும் இன்னும் எத்தனையோ வேண்டும் என கூவும் எந்த ஆசிரியராவது 15 வருடங்களாக பக்கம் எண் கூட மாறாமல் பாழடைந்து கிடக்கும் +1, +2 வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும் என்று போராடியதுண்டா ? சம்பள உயர்வு கேட்டு தெருவில் இறங்குமுன் உங்கள் மனசாட்சியை கேளுங்கள் 20,000, 30000 என சம்...

குட்டி தகவல்: "பிங்க் சிட்டி" ஜெய்ப்பூர் - பெயர் வந்த கதை

Image
ஜெய்ப்பூருக்கு  பிங்க் சிட்டி என பெயர் வந்த கதை தெரியுமா உங்களுக்கு ? அதற்கு நாம் 139 வருடங்கள் பின்னே செல்லவேண்டும். ஆண்டு 1876 , இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியா நாட்டில், வெள்ளையரோடு நட்பு பாராட்டிய சில இந்திய அரசர்களும் ஓரமாக ஆட்சி செய்து கொண்டுதான் இருந்தனர். இந்த நிலை 1947 வரை தொடர்ந்தது. ஜெய்ப்பூர் மஹாராஜா ராம்சிங் பிரிட்டிஷ் அரசோடு நட்பு பாராட்டி வந்தார். 1876 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் மற்றும் விக்டோரியா மஹாராணி ஜெய்ப்பூருக்கு வருகை தந்தனர். அவர்களின் மனம் கவர்ந்து பிரிட்டிஷ் உடனான தனது நட்பை விரிவு படுத்த வேண்டும் என்று யோசித்த மகாராஜாவிற்கு கன நேரத்தில் தோன்றியது தான் பிங்க் சிட்டி ஐடியா. பார்த்தார் மனிதர்  ஜெய்ப்பூர் நகர் முழுவதையும் பிங்க் நிறத்தால் வண்ணம் பூச உத்தரவிட்டார். காரணம், பிங்க் நிறம் விருந்தோம்பலை மற்றும் வரவேற்பை  குறிக்கும் நிறமாகும். மக்கள் முழுமனதோடு இந்த உத்தரவை செய்தார்கள் என்று சொல்வதற்கில்லை.ராஜா உத்தரவு என்பதால் ஊர் மு...