Posts

தமிழகம் மிதக்கிறது !

Image
தமிழகம் மிதக்கிறது ! அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் பேராசைக்கு நீர் நிலைகளும் வடிகால்களும் இரையாகி, வெள்ள நீர் போக்கு தெரியாமல் நம் வீட்டுக்குள் வந்து நிற்கிறது. நவம்பர் மாதம் தமிழ்நாடு வெள்ளக்காடு ஆனால் மார்ச்சில் குடிக்க தண்ணீர் இல்லை என குடங்களுடன் வீதியில் இறங்கவேண்டியுள்ளது. நமது ஆட்சியாளர்களும் திறமையற்றவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம் டாஸ்மாக் போராட்டம் தீவிரமாக நடத்து வந்தபொழுது மூன்று நாள் பழைய செய்தியான இளங்கோவன் ஜெயலலிதா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு போராட்டம் அறிவித்து டாஸ்மாக் போராட்டத்தையே திசை திருப்பிய திறமையான ஆட்சியாளர்கள் கொண்ட மாநிலம் நமது. எதிர்கட்சிகளும் ஒன்றும் ஒழுக்க சீலர்கள் அல்ல அவர்கள் தலையில் 2G கத்தி இன்னும் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது அவர்கள் மாவட்ட செயலாளர்களும் ஆட்டம் போட வாய்ப்பை எதிர்பார்த்து தயாராகத்தான் உள்ளார்கள். மழைவந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு கேமராமேனையும் கூட்டி வந்து நம்மை சந்திப்பார்கள் . ஆனால் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் நமது கட்சிகளிடம்...

மழைதான் 2016 தேர்தலின் துருப்புசீட்டு

Image
ஜெயலலிதா ஆட்சியில் எப்பொழுதுமே அவரது கடைசி 6 மாதங்கள் அவருக்கு சவாலாக அமைந்துவிடும். இந்த முறை எதிர் கட்சிகள் சிதறிக்கிடக்க, தாங்கள் செய்த நல திட்டங்கள் மற்றும் இலவசங்கள் எப்படியும் கைகொடுக்கும் என்ற துணிச்சலில் 234ம் நமதே என கோஷமிடுகிறது அதிமுக. ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான சவால் இந்த முறை எதிர் கட்சிகள் அல்ல வடகிழக்கு பருவமழை தான் ! நான்கரை வருடம் எதிர்கட்சிகளை வளரவிடாமல் அரசியல் செய்து அதில் வெற்றியும் பெற்ற ஜெயலலிதா வருண பகவானை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே அவரது 2016 வெற்றியை தீர்மானிக்கப்போகிறது. ! குறிப்பாக திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையை 2011 ல்  அதிமுக வசமாக்கினார் ஜெயலலிதா. ஆனால் இன்று மூழ்கி கிடக்கும் சென்னையை கரைசேர்க்காவிட்டால்  2016ல் அதிமுக மூழ்குவதை அவரால் வேடிக்கை மட்டும் தான் பார்க்கமுடியும்.  

திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் 2

Image
திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த  திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின் அடுத்த பாகமே திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு என்ற இந்த கட்டுரை. 18 ஆம் நூற்றாண்டு  நாம் 10 ஆம் வகுப்பில் மனப்பாடம் செய்து பாஸான கர்நாடக போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட மோதிக்கொண்டனர். பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் கீழ் மெட்ராஸ், கடலூர் மற்றும் திருச்சி என மூன்று முக்கிய நகரங்கள் இருந்தன. அவற்றை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பிரெஞ்சு படை திரட்டியது.  பிரெஞ்சு படைக்கு  தலைமை ஏற்ற தளபதி லாலே பிரிட்டிஷ் வசம் இருந்த கடலூர் கோட்டையை அசால்ட்டாக கைப்பற்றினார். லாலேவிற்கு அடுத்து இரண்டு வாய்ப்புகள் இருந்தன ஒன்று  வடக்கு திசையில் உள்ள மெட்ராஸ் நகரை நோக்கி படையெடுப்பது மற்றொன்று தெற்கு பக்கம் உள்ள திருச்சிநோபோலி (இன்றைய திருச்சி நகரம்) நோக்கி படையெடுப்பது.    பூவா தல...

இந்தியா ஒளிர்கிறது ?

Image
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு உணவகத்தில் இருந்து வீட்டுக்கு அரசாங்கம் போட்டு தந்த பளபளப்பான நான்கு வழி சாலையின் ஓரமாய் நடத்து வந்துகொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருத்த பெரியவர் (வயது உறுதியாக 70க்கு மேல் இருக்கும்) மயங்கி சரிவதை கண்ட  எனக்கும் நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஓடிசென்று அவரை தூக்கி ஓரமாக நிழலில் உட்காரவைத்தோம். எங்களுடன் உதவிக்கு வந்த நல்ல உள்ளங்கள் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க  அவரையும் அறியாமல் பசிக்குது என்றார். 10 அடி தூரத்தில் ஹோட்டல் ஆனால் அவரால் நடக்க முடியவில்லை. ஓடி சென்று 4 இட்லி வாங்கிவந்தோம். அவருக்கு இருக்கும் பசியில் பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து வரும் மோசமான வாடையை அவர் பொருட்படுத்தவில்லை. உங்க வீட்ல உள்ளவங்க போன் நம்பர் இருந்த சொல்லுங்க ஐயா நாங்க அவங்கள வரசொல்றோன்னு சொன்ன பொழுது போன் நம்பர் கொடுத்தா செத்து போன உன் பொண்டாட்டி கிட்ட பேசப்போறியா என்று பெத்த மகன்கள் கேட்டதாக சொன்னார் பெரியவர். பாவம் அவர் மகன், மனிதனை என்றும் இளமையாய் வைத்திரு...

கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது ?

Image
ஒரு விஷத்தை பற்றி  கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது என்று ஆராயவேண்டும் என்று ஆர்வம் எனக்கு அதிகம் உண்டு. உதாரணமாக மூன்று வித்தியாசமான நிகழ்வுகளை நான் அலச விரும்புகிறேன் : உதாரணம் #1: புலி படத்தை எடுத்துக்கொள்ளலாம். புலி படம் ப்ளாப் என்பது படம் பார்க்காத எனக்கும் இப்பொழுது மனதில் பதிந்து விட்டது. காரணம் தெரியவில்லை. எல்லாரும் சொல்றாங்க எனக்கும் அப்படியே ! உதாரணம் #2: சரி இன்னொரு சீரியஸான நிகழ்வை அலசுவோம். விஜயகாந்த் வெறும் நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த வரை அவரை தலையில் வைத்து கொண்டாடியது தி.மு.க வின் குடும்ப சேனலான  சன் டிவி. நடிகர் சங்க கடன்களை அடைக்க வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் ஐடியாவை புகழ்ந்து விஜயகாந்தை உச்சத்துக்கு எடுத்து போனதில்  சன் டிவி பங்கு கனிசமானது. சரி அதே விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் . அசுர வேகமாக வளர்ந்தார். எதிர்கால முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெரும் அளவுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றார். ஆனால் கலைஞர், ஜெயலலிதா இருவர் மட்டுமே எப்பொழுதும் தமிழக முத...

கர்நாடகா தண்ணி தர்லேன்னு திட்டற தமிழர்களே இத முதல்ல படிங்க

Image
இது ஆந்திர மாநிலத்தின் கதை  கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டம்  கால்வாய் நீளம் - 174 KM திட்ட செலவு - 1300 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - மே மாதம் 2014 முடிக்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 2015 இது தமிழகத்தின் கதை  காவிரி வைகை இணைப்பு திட்டம்  கால்வாய் நீளம் - 225 KM திட்ட செலவு - 2800 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - 2008 முடிக்கப்பட்ட ஆண்டு - ??????? (முடிச்சா தான) திட்டம் முடிக்கப்படாததிற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் நிதி இல்லை! ஆனால் தமிழக அரசு 2012 -13 ஆம் ஆண்டு செலவிட்ட தொகைகள் இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி இலவச வேட்டி சேலை 300 கோடி சரி நம்ம மக்களும் அடுத்த தேர்தலுக்கு பிரிஜ், வாஷிங் மெசின் தருவாங்களான்னு வாய பொளந்து காத்துட்டு இருக்க கூட்டம் தான ! நதியா எனச்சா ? என்ன விவசாயம் செத்தா என்ன ? சிவகார்த்திகேயன அடிச்சுபுட்டாங்கலாம்ல ?? அது என்ன மேட்டர்ன்னு அலசி ஆராய்வோம்.  ஆதாரங்கள் :  http://www.dinamalar.com/news_detail.asp?id=1347852 http://www.thehindu.com/news/national/t...

வல்லவனுக்கு வல்லவன் - #1 (சபாஸ் சரியான ஜோடி)

Image
வல்லவனுக்கு வல்லவன் தொடர் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாகும். படித்து விட்டு உங்கள் மேலான கமென்ட்களை பதிவிடவும். சபாஸ் சரியான ஜோடி எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் மாயாஜாலத்தில் தமிழகம் அரசியல் சுழன்ற காலகட்டம் அது. ஆனால் அவருக்கு எதிர் கட்சியாக விளங்கிய கருணாநிதி அரசியலில் யாருக்கும் சளைத்தவர் அல்ல.  1977 - அதிமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வெற்றியை பறித்து ஆட்சியை கைபற்றி இருந்தது. அப்பொழுது இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கூட்டணியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார்கள். ஆனால் அதிமுக இந்திரா கூட்டணி சில மனகசப்பால் நீடிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கலைஞர் உடன் கூட்டு சேர்ந்து பாராளமன்ற தேர்தலை சந்தித்தது.  எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுக இந்திரா கூட்டணி பாராளமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். பிரதமர் ஆனதும் இந்திரா செய்த முதல் வேலை எதிர் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சி களைப்பு.  தமிழகத்தில் கருணாநி...