Posts

மக்கள் போராட்டங்கள் பற்றிய எனது பார்வை

குறிப்பு : இந்த கட்டுரை ஸ்டெர்லைட் சரியா தவறா என்பதை பற்றியதல்ல.  ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி வந்திருக்கும் உத்தரவு போராட்டகாரர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி தான்.. இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றம் சென்றால் என்ன ஆகும் இந்த பிரச்சனை எந்த கோணத்தில் செல்லும் என்பதெல்லாம் கணிக்க முடியாதவை.. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். மக்களுக்கு அரசாங்கம் மீதும் அவர்கள் தரும் தரவுகள் மீதும் நம்பிக்கை போய்விட்டது .. நாளைக்கே ஸ்டெர்லைட் சரியா தவறா என்று ஒரு ஆய்வை அரசாங்கம் நடத்தி முடிவு வெளியிட்டால் கூடமக்கள் நம்பப்போவதில்லை. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை சரியென்று தீர்ப்பு சொன்னால் நீதிபதிக்கு எத்தனை பெட்டி கைமாறியதோ என்று தான் நாம் நினைப்போம்... 100 ரூபாய் கொடுத்தால் சாமானியரே என்ன certificate வேண்டுமானாலும் அரசாங்க அதிகாரியிடம் வாங்கிவிட முடியுமென்றால் 1000 கோடிகள் வைத்திருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சில துண்டுகளை தூக்கிப்போட்டால் இந்த அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என சாமானியர் நினைப்பத...

வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்துகொண்டிருப்போர் உடனடி கவனத்திற்கு

இந்திய வங்கித்துறை வாராக்கடன் (NPA) பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது. வங்கிகளின் லாபம் குறைந்து கொண்டேபோவதும், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நீரவ் மோடிக்கு 11,000 கோடி அளவுக்கு ஊழல் செய்ய உதவி செய்ததும் கடந்த மாதங்களில் ஊடக செய்திகளை ஆக்கிரமித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடன்கள் காரணமாக இன்று பல பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. வாராக்கடன் அளவு ஒரு கட்டத்துக்கு மேல் அதிகரிக்கும் பொழுது  Prompt Corrective Action (PCA) என்றழைக்கப்படும் வங்கியை இழுத்து மூடாமல் காப்பாற்றும் தற்காப்பு முயற்சிகளை  ரிசர்வ் வங்கி மேற்கொள்ள துவங்கும். ஒரு வங்கி PCA நடவடிக்கைக்கு உள்ளானதாக ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தால் அந்த வங்கியின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. ஆனால் அந்த வங்கி புதிய கடன்கள் ஏதும் வழங்க முடியாது. தேனா வங்கியின் (Dena Bank) வாராக்கடன் மிக அதிக அளவு சென்றுவிட்டதால் அந்த வங்கியை PCA நடவடிக்கையின் கீழ் சேர்ப்பதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது....

பாதுகாப்பு + பொருளாதாரம் = வெளியுறவு கொள்கை

நம்மில் பலரும் foreign affairs என்று சொல்லப்படும் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் பொழுது போக்கிற்கு செய்யும் வெட்டி வேலை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் நமது நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் வளர்ப்பதில் வெளியுறவு கொள்கை மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன்.. வெள்ளி போல தோற்றம் அளிக்கும் லித்தியம் (Lithium) உலோகத்தை பேட்டரி தயாரிப்பில் முதன்மை மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். நமது செல்போன் பேட்டரிகள் Lithium Ion என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.  பொலிவியா (Bolivia) என்ற வட அமெரிக்க நாட்டில் லித்தியம் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. இதே போல் பொலிவியாவை சுற்றி இருக்கும் அர்ஜென்டீனா (Argentina) மற்றும் சிலி நாட்டிலும் அள்ள அள்ள குறையாத லித்தியம் கிடைக்கிறது. இந்த மூன்று நாடுகளை Lithium Triangle Countries என்று செல்லமாக அழைப்பர். இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியை குறைக்க (இந்தியா ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்...

இந்தியாவில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம்

Image
ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது... இதுவரை பெரிய நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் அம்பானிக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் என்றுதானே செய்திகளில் படித்தோம்.. இன்று நிலைமை தலைகீழ்... ஒவ்வொரு பெருநிறுவனமும் தாங்கள் வாங்கிய கடனை அவசர அவசரமாக திரும்பி செலுத்துகின்றனர். (மேலும் படிக்க  திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு ) அதிலும் ஒரு பெரிய மனிதர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல 40000 கோடி ரூபாய் கடனை திரும்பி செலுத்துகிறார் ! அந்த தொழில் அதிபர் வேறு யாருமல்ல அனில் திருபாய் அம்பானி தான்... என்னது அம்பானி கடனை திரும்ப செலுத்துகிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா ???? Source : கூகுள் தேடுபொறி  இதையெல்லாம் சாதித்து காட்டியது Insolvency & Bankrupty code எனப்படும் திவால் சட்டம்.. வங்கிகளின் வாராக்கடன் அளவுக்கு மிஞ்சி சென்றதால் (சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு) மோடி அரசு பெரிய நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை வசூல் செய்ய IBC சட்டத்தை கொண்டுவந்தது.. இந்த சட்டப்படி நிறுவனம் வாங்கிய கடன் வாராக்கடன் என்று RBI ...

திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு

Image
வாராக்கடனை வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC எனப்படும் திவால் சட்ட உதவியுடன் Bhushan Steel நிறுவன கடன் வழக்கு வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது Source : கூகுள் தேடுபொறி  சுமார் 44,000 கோடி ரூபாய் அளவு கடனில் உள்ள Bhushan Steel நிறுவனத்தை IBC சட்ட உதவியுடன் வங்கிகள் ஏலம்விட்டன. இந்த ஏலத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் அதிகபட்சமாக 34000 கோடி ரூபாய் குறிப்பிட்டு Bhushan Steel நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது இந்த வழக்கு மூலம் வங்கிகளுக்கு எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதையும், வங்கிகள் Bhushan Steel நிறுவனத்துக்கு கொடுத்த கடன் தொகையை அடைப்புகுறியிலும் () கீழே குறிப்பிட்டுள்ளேன் * ஸ்டேட் வங்கி - 8083 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 12,000 கோடி ரூபாய்) * PNB வங்கி - 3081 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 4904 கோடி ரூபாய்) * கனரா வங்கி - 1794 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2856 கோடி ரூபாய்) * ICICI வங்கி - 1583 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2448 கோடி ரூபாய்) * AXIS வங்கி - 1218 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 1939 கோடி ரூபாய்) Bhushan steel நிறுவனத்துக்கு தனியார், பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது வெளிநாட்...

பட்ஜெட் 2018 : என் கருத்து

Image
Source : Google image search * பசுமை புரட்சிக்கு வித்திட்ட M S சுவாமிநாதன் தலைமையில் விவசாய பிரச்சனைகளை தீர்க்க அமைக்கப்பட்ட கமிட்டி (2004-06) தனது அறிக்கையை தயாரித்து வழங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான தீர்வுகளில் ஒன்று விவசாய உற்பத்திக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price - MSP) விட 1.5 மடங்கு அதிகம் விலை தரவேண்டும் என்பதே. இந்த அறிவுரையை மோடி இந்த முறை செயல்படுத்தியுள்ளார். இனி விவசாய பொருட்கள் MSP விலையை விட 1.5 மடங்கு அதிக விலைகொடுத்து அரசாங்கம் கொள்முதல் செய்யும். மேலே சொன்ன அறிவிப்பு விவசாயிகளுக்கு நல்ல விலை ஈட்ட உதவி செய்யும். அதே போல் விவசாய பதப்படுத்துதல் மற்றும் குளிர் சாதன வசதிக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Sea food ஏற்றுமதிக்கு 10000 கோடி ஒதுக்கீடு வரவேற்கப்படவேண்டிய அம்சம். விவசாய கடன் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது நல்லவிஷயம். * பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. (குறையும் என்ற நடுத்தர மக்களின் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம்) * 10 கோடி மக்களுக்கு 5 லட்ச ரூபாய் இன்...

2ஜியும் மோடிஜியும்

Image
வழக்கு தொடங்கப்பட்ட பொழுது காட்டிய வேகத்தை CBI வழக்கை நிரூபிக்க காட்டவில்லை என்கிறார் நீதிபதி.. தவறே நடக்கவில்லை என்பதல்ல தீர்ப்பு, தவறு நடந்திருக்கலாம் ஆனால் CBI நிரூபிக்க தவறி விட்டது என்பதே தீர்ப்பு.. CBI என்பது இங்கே மோடி அரசை தான் குறிக்கிறது... BJP இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை.. திமுக விற்கு சாதகமாக நடந்தது.. தப்பிக்க விட்டது அவ்வளவு தான் சங்கதி. BJP யின் இந்த செயல்பாடு அவர்கள் செய்த பெரிய அரசியல் பிழையாக எதிர்கால வரலாற்றில் இடம்பெறலாம்.. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என யாரும் இந்த வழக்கை நிரூபிக்க பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்றும் சொல்லலாம்..