அவளும் ! நானும் ! நீங்களும் !
ஆண்டு 2011 வீட்ல பொண்டாட்டி தொல்லை போல அதான் வீட்டுக்கு போக மனசில்லாம வண்டிய நிப்பாட்டிவச்சுருக்கான் என்றார் எதிரில் இருந்தவர், பாவம் அவருக்கு தெரியாது கடவுள் ஏன் திருச்சி ரயில்நிலையத்தில் அரைமணிநேரமாக ரயிலை நிறுத்திவச்சுருக்கார்னு ! என் ஹெட்போனில் ஜி வி பிரகாஷ் கத்திக்கொண்டு இருந்தார் ! யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ! அந்த ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட தேவதை அவள் அப்பா அம்மாவுடன் வந்து எனக்கு எதிர்சீட்டில் அமர்ந்தாள். சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஆயாசமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு நொடி ஒரு சிறு பார்வை என் பக்கம் வீசினாள். ஜி வி பிரகாஷின் தொடர்ந்து பாடினார். அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா ! உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா ! நா தலகாலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே ! ஆடுகளம் பாட்டுக்கும், அவளின் ஒரே நொடி காந்தப்பார்வைக்கும் கூட தொடர்பு உண்டு என மேற்கத்திய Choas தியரிக்கு கிழக்கில் நான் புதுவிளக்கம் கொடுத்துக்கொண்டேன் ! அந்த நொடியே அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே...