Posts

Showing posts from June, 2014

வெற்றி பெருமிதம்

Image
வருடம் 2008 நான் 10 வகுப்பு வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் என்னை ராசிபுரம் நாமக்கல் போன்ற பகுதிகளில் சேர்த்து மனப்பாட இயந்திரம் ஆக்கவேண்டும் என்ற பலரது அறிவுரைகள் எங்கள் அப்பாவுக்கு சொல்லப்பட்டன. எனக்கு வயிற்றில் புளியை கரைப்பது போல் இருந்தது. ஆண்டவன் புண்ணியத்தில் என்னை திருவாரூரில் நான் 10 ஆம் வகுப்பு படித்த அதே பள்ளியில் சேர்த்து விட்டனர். வருமான சான்றிதல் பெற்று வரும் படி சொல்லியது பள்ளி நிர்வாகம். என் தந்தை வருமான சான்றிதல் பெற என்னை அனுப்பிவைத்தார். இதற்கு முன் நான் எந்த அரசு அலுவலகத்துக்கும் சான்றிதழ் பெற சென்றது இல்லை. சரி நம்மளும்  அரசாங்க சான்றிதல் வாங்குற அளவுக்கு  பெரிய புள்ள ஆகிட்டோம் போல என்று மனதுக்குள் நினைத்து கொண்டு இன்னும் சில நண்பர்களையும் சேர்த்து கொண்டு  சைக்கிளில் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க சென்றேன். எனக்கான வேலைகள் தெளிவாக தரப்பட்டன. முதலில் வீ. ஏ. ஓ, பிறகு ஆர். ஐ அலுவலகம் பிறகு தாசில்தார் அலுவலகம் என எங்கு செல்லவேண்டும் என்பதெல்லாம் தெளிவாக சொல்லி அனுப்பினார் என் தந்தை...

இந்திய பொருளாதாரம் - குட்டி கதை (கட்டுரை அத்தியாயம் 1)

Image
இந்திய அரசாங்கத்தின் செயல்பாட்டை இந்த ஒரு கதையை கொண்டு நீங்கள் புரிந்து கொள்ளலாம். முகுந்தன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். தன்னிடம் சுத்தமாக பணம் இல்லாததால் கடன் வாங்கும் முகுந்தன் அந்த பணத்தை கொண்டு சாப்பாடு செலவு, வீட்டின் இதர செலவுகளை செய்தான். அவனிடம் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போனது. அடுத்த மாத செலவுக்கு அவனிடம் பணம் இல்லை. மீண்டும் கடன் வாங்குகிறான். அவன் செய்த தவறு வாங்கிய கடனை கொண்டு தொழிலிலோ வேறு ஏதேனும் விதத்திலோ முதலீடு செய்து அந்த பணத்தை பெருக்கி அதை கொண்டு குடும்பத்தை நடத்தி இருக்கவேண்டும். கடன்வாங்குவது தவிர்க்க முடியாதது என்று கூறும் ஆட்சியாளர்கள், அந்த கடனை வாங்கி என்ன செய்தார்கள் என்பது தான் கேள்விக்குரியது. ? அவர்கள் முகுந்தனை போலத்தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு நல்ல அரசாங்கம் தொழில் செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அதை கொண்டு மக்கள் தொழில் செய்து தங்கள் உணவு உடை இருப்பிடம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். ஆனால் இந்திய அரசாங்கம் கடனை வாங்கி முதலீடு செய்வதற்கு பதிலாக பல ஊதாரி திட்டங்களுக்கு செலவு செய்கிறது. அதனிடம் உ...

பொருளாதாரம் படிக்கலாம் வாங்க ( கட்டுரை தொடர் )

Image
பொருளாதாரம் என்றால் அது 11 ஆம் வகுப்பில் 2வது குரூப் மாணவர்களுக்கான பாடம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்தை மாற்றிகொள்ளுங்கள். ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் பொருளாதாரம் என்பது ஏதோ அதிகம் படித்த டெல்லியில் இருந்து டிவி யில் பேட்டி கொடுக்கும் மெத்த மேதாவிகள்  மட்டுமே புரிந்து கொள்ள கூடிய கணக்கு வழக்கு என்று நாம் நம்பவைக்கப்பட்டுள்ளோம். ஒரு பொருளை பற்றி நமக்கு தெரியாத வரை அந்த பொருளை வாங்க கடைக்கு சென்றால் நாம் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம். அதைத்தான்ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். மக்கள் பொருளாதாரத்தை புரிந்து கொண்டால் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதை புரியாத பாடமாகவே ஆக்கிவிட்டார்கள் . ஆனால் பொருளாதாரம் புரிந்து கொள்வதற்கு மிக எளிய, நமது வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயம். அதை புரிந்து கொள்ள புத்தகம் படிக்கவோ, பெரிய ஆராய்ச்சியோ தேவை இல்லை. இந்திய பொருளாதாரத்தையும், அரசாங்கத்தின் செயல்பாட்டையும் ஒரே ஒரு குட்டி கதையை வைத்தே விளக்கி விடலாம். படிக்க :   இந்திய பொருளாதாரம் - ஒரு குட்டி கதை ( இதன் தொடர்ச்சியாக இன்...

வரலாற்றின் பக்கங்கள் - தடுப்புகள்

Image
ஏப்ரல் 15 , 1989 சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ளது தியனன்மென் சதுக்கம் என்ற இடம். அன்று எப்பொழுதும் இல்லாத அளவுக்கு திடீரென மக்கள் கூட ஆரம்பித்தார்கள். அவர்கள் சீனாவில் ஜனநாயகத்தை (பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம்....) வலியுறுத்தி அரசுக்கு எதிராக குரல்கள் எழுப்பினார்கள். போராட்டத்தை முதலில் அரசு அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் போராட்டம் நாட்களை கடந்து வார கணக்காக நீண்டது. 10 லட்சம் மக்கள் தியனன்மென் சதுக்கத்தில் குவிந்தார்கள். போராட்டம் காட்டு தீயை போல 500 நகரங்களுக்கு பரவியது. போரட்டகாரர் ஒருவவரை நோக்கி சீனா பீரங்கிகள் சீனா அரசு விழித்து கொண்டது. தியனன்மென் சதுக்கத்தை நோக்கி ராணுவம் தனது நவீன 59 ரக பீரங்கிகளுடன் முன்னேறியது. மக்கள் கண்மூடி தனமாக தாக்க பட்டார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டது. இந்த ஆண்டோடு தியனன்மென் சதுக்க போராட்டம் முடிவுற்று 25 ஆண்டுகள் ஆகிறது. எங்கே மக்கள் மீண்டும் விழித்து கொள்வார்களோ என்று பயந்த சீனா அரசு செய்திருக்கும் செயல்கள் சீனா தனி மனித சுதந்திரத்திற்கு எத்தனை மதிப்பு தருகிறது என்பதை காட்டுகிறது. சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில ...

இந்தியரே ஏமாற்றத்திற்கு தயாராக இருங்கள் !

Image
மோடி சுனாமி காங்கிரஸ், திமுக போன்ற பல கட்சிகளை புரட்டி போட்டதெல்லாம் பழைய கதை. மோடி என்ற ஒற்றை வார்த்தை மீது நம்பிக்கை வைத்து இந்தியர்கள் (கம்யூனிஸ்ட்களின் வார்த்தைகளில் சொன்னால் 31 % வாக்காளர்கள் ) அவரை தேர்தெடுத்து உள்ளார்கள்.ஆனால் திரு மோடிக்கு சவாலே இனிதான் காத்து இருக்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்து விட்டால் பாலும் தேனும் சாலைகளில் ஓடும் என்று நம்பியவர்கள் பலர். சுதந்திர வேட்கைக்கு அதுவும் கூட ஒரு காரணம். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின் அமைந்த ஆட்சிகளால் அவர்கள் கனவு கண்டதை போல் பாலாறும் தேனாரும் ஓடவில்லை. ஆட்சியாளர் மாறினார்கள் அவ்வளவே ! ஆனால் ஒரு நிமிடத்தில் எல்லாவற்றையும் மாற்ற ஆட்சியாளர்கள் ஒன்றும் மந்திரவாதிகள் அல்ல . திட்டங்கள் தீட்டப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு அவை பலன் தர கண்டிப்பாக சில காலம் பிடிக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் மாற்றத்திற்காக ஓட்டு  அளிக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் உள்ள  பிரச்சனை உடனே தங்கள் வாழ்கையில் பெரிய  மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். அவர்களுக்கு மாற்றங்கள் நிகழும் வரை காத்திரு...