Posts

Showing posts from May, 2016

கலைஞரின் காமெடி அறிக்கை

Image
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை முன் வரிசையில் அமரவைக்கவில்லை சொல்வது 93 வயதிலும் ஸ்டாலினுக்கு கட்சி தலைமை பதவியும் தராமல் முதல்வர் நாற்காலியும் தராமல் அவமதிக்கும் கலைஞர் ! குறிப்பு : தி.மு.க கட்சி ஸ்டாலினை எதிர்கட்சி தலைவராக கூட இன்னும் அறிவிக்கவில்லை. நாளை நடக்கும் கட்சி கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஒருவேளை எதிர் கட்சி தலைவராகவும் கலைஞரே அமரலாம் யார் கண்டது !

ஸ்டாலினுக்கு பொன்னான வாய்ப்பு !

Image
தமிழகம் சந்தித்த வித்தியாசமான தேர்தல் இது ! அ.தி.மு.க விற்கு இரண்டாவது முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அதேநேரம் தி.மு.க விற்கு 90 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழகமக்கள் கொடுத்துள்ளார்கள்.    குறிப்பாக ஜெயலலிதா போல் தனித்து இயங்க விரும்பும் தி. மு.க பொருளாளர் ஸ்டாலினுக்கு இது அறிய வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். சென்னை மேயராக செயல்பட்டதை தாண்டி ஸ்டாலின் நிர்வாக திறமையை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்புகள் தரப்படவில்லை. இந்த தேர்தலிலாவது ஸ்டாலின் முதலமைச்சராக முன்னிறுத்தப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எனக்கு பின் ஸ்டாலின் என ஒரே போடாக போட்டார் 93 வயதான கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் பேராசையில் மக்கள் மண்ணை தூவி விட்டனர். தி.மு.கவின் தோல்வியிலும் ஸ்டாலினுக்கு சாதகமான அம்சம் ஒன்று நடந்துள்ளது எனில் அது அவர்கள் பெற்ற 90 உறுப்பினர் எண்ணிகையை தான் சொல்லவேண்டும். கருணாநிதி வரும் 5 வருடங்களில் கையெழுத்து போடுவதை தவிர வேறு எதற்கும் சட்டசபை இருக்கும் வடக்கு பக்கம்  தலைவைத்து கூட படுக்கமாட்டார். எனவே ச...

சங்கதாரா புத்தக விமர்சனம்

Image
ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணம் பற்றிய புத்தகம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன் சங்கதாரா என்ற புத்தகத்தை வாங்கி படித்தேன் ஆனால் ஏன் இந்த புத்தகத்தை படித்தோம் என்று ஆகிவிட்டது. புத்தகம் அத்தனை அபத்தமான கற்பனை. பொன்னியின் செல்வன் கட்டிவித்த மாயா பிம்பத்தை உடைக்கிறேன் என்ற ஒரே முடிவில் பொன்னியின் செல்வனில் புகழப்பட்ட அனைத்து கதாப்பாத்திரங்களையும் கொச்சை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர் நரசிம்மா என்பதே என் மனதில் படும் எண்ணம். புத்தகத்தில் வரும் 1000 அபத்த கற்பனைகளில் ஒன்று உங்கள் கருத்துக்காக சொல்கிறேன். ஆதித்த கரிகாலனை கொன்றது குந்தவை. காரணம் அவரது மகன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக. இதில் கொடுமை என்னவெனில் குந்தவையின் மகன் தான் அருண்மொழி. குந்தவை வந்தியதேவருடன் முன் காலத்தில் கொண்ட தவறான உறவால் பிறந்தவன் தான் அருண்மொழி. இதற்கு மேல் சங்கதாரா புத்தகத்தை படிக்கவேண்டுமா என்பதை உங்கள் கருத்துக்கு விட்டுவிடுகிறேன்....

படித்ததில் பிடித்தது - 2 (உங்க ஊர் பெயருக்கு என்ன அர்த்தம் ?)

Image
தமிழக ஊர் பெயர்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் குடி, புரம் , பேட்டை, பாளையம், நகர், ஊர், கோயில், குளம், பாக்கம், பாடி, பட்டி, துறை ஆகியன. குடி என்பது ஒரே சமூக மக்கள் வாழும் இடமாகும். உதாரணம் மன்னார்குடி, ஆலங்குடி, காரைக்குடி  புரம் - பெரிய கிராமம் அல்லது தலைநகரங்கள் என்பதை குறிக்கும். உதாரணம் காஞ்சிபுரம், இராமநாதபுரம். பாளையம் - இது உள்ளூர் தலைவர்கள் வாழும் இடத்தை குறிக்கும் உதாரணம் இராஜபாளையம், குமாரபாளையம். பேட்டை - தொழிற்கூடங்கள் அமைந்த பகுதி. உதாரணம் ராணிப்பேட்டை  பட்டி - பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பல ஊர்களுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது உதாரணமாக ஆன்டிப்பட்டி.. குப்பம் - கடற்கரை கிராமம் பட்டினம் - கடற்கரை நகரம் உதாரணம் நாகப்பட்டினம்.  பாக்கம் - குப்பத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இடம். உதாரணம் துறைப்பாக்கம்.   துறை - ஆற்றங்கரையில் அமைந்திற்கும் ஊர். உதாரணம் மயிலாடுதுறை.    - மே 6, 2016  தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட  "Glimpsing history through etymology" ...

citizen திரைப்பட கிளைமாக்ஸும் - இராஜராஜ சோழனும்

சிட்டிசன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் வில்லன்களுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அறிவிப்பார். அதன்படி வில்லன், அவரது குடும்பத்தார்,அவர்தம் குடும்பத்துடன் திருமண உறவு செய்துகொண்டவர்கள் என அனைவரது குடியுரிமை மற்றும் சொத்துகளும் பறிக்கப்பட்டு சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்படுவர். புதுமையான தண்டனை என்று சொல்லப்பட்ட இந்த தண்டனை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே வழங்கியுள்ளார் இராஜராஜ சோழன் ! சோழ சரித்திரத்தில் அவிழ்க்க முடியாத ரகசியமான ஆதித்ய கரிகாலன் கொலை பற்றிய மர்மத்தை தனது சிற்றப்பா உத்தம சோழரின் ஆட்சிக்கு பின் பதவியேற்ற ராஜராஜ சோழர் கண்டுபிடிக்க முயல்கிறார். தனது இரண்டாவது ஆட்சியாண்டில் (கி. பி 986-987) பாண்டிய ஆபத்துதவிகளின் தலைவரான ரவிதாசன் மற்றும் அவரது சகோதரர்களே அதித்ய கரிகால சோழரின் கொலைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்த ராஜராஜர் அவர்களுக்கு வழங்கிய தண்டனை வித்தியாசமானது. அதாவது ரவிதாசன் அவர்தம் சகோதர்கள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர் (சிறு குழந்தைகள் உட்பட) என அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு...

ஒபாமா கூட நடந்து போவாரு ! நம்ம தலைவர்கள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டர்ல தான் போவாங்களாம்

Image
உலகின் அதி சக்தி வாய்ந்த அதிபரான ஒபாமா தனது பயணத்திற்கு VVIP ஹெலிகாப்ட்டர் வாங்கும்பொழுது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டரில் ஒன்றுதான்வாங்கினார். காரணம் அதன் விலை ! ஒரு ஹெலிகாப்ட்டர் சுமார் 18.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியா 2010 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஒரே ஆர்டரில் 12 ஹெலிகாப்ட்டர்கள் கேட்டது. காரணம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும், சோனியா மற்றும் அவரது காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் கொடுத்த லஞ்சப்பணம். இந்திய விமானப்படை தாக்குதல் ஹெலிகாப்ட்டர்கள் வாங்க பண பற்றாக்குறை என்று சொன்ன அதே காலகட்டத்தில் தான் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இன்று காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக இறங்கியிருக்கும் ஹெலிகாப்ட்டர் ஊழல் வழக்கு எப்படியும் கொஞ்சநாளில் 2G ஊழல், சொத்து குவிப்பு வழக்கை போல் இழுத்தடிக்கப்பட்டு மறக்கடிக்கப்படும் என்பது மட்டும் உறுதி. நாட்டு மக்கள் பாதுகாப்பை விட காசு முக்கியம் என்று எண்ணிய காங்கிரஸ் வாழ்க ! காசு வாங்கிய இந்திய விமானப்படை அதிகாரிகளும் வாழ்க !