எழுச்சி ! எழுச்சி !
கூடங்குளம் போராட்டம், காவிரி பிரச்சனை, மீத்தேன், ஜல்லிக்கட்டு, முல்லைப்பெரியாறு, இன்று ஹைட்ரோகார்பன் திட்டம் என மக்கள் எழுச்சி கொண்டு போராடும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அதிசய ஒற்றுமை உண்டு கவனித்தீர்களா ? - இவை எல்லாமே அரசாங்க திட்டங்கள் ! ஏன் மணல் கொள்ளைக்கு எதிராக எந்த மக்கள் எழுச்சியும் நடக்கமாட்டேன் என்கிறது ? ஏன் கல்வி கொள்ளைக்கு எதிராக அரசியல் கட்சிகள் வாயை திறக்கமாட்டேன் என்கின்றன ? ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மோடிக்கு லெட்டர் எழுதும் எடப்பாடி சார் மணல் கொள்ளை எதிர்த்து ஏன் வாயை திறக்க மாட்டேன் என்கிறார் ? நெடுவாசலில் நின்றபடி வைகோ ஆவேசமாக கத்துகிறாரே மணல் கொள்ளைக்கு எதிராக இதே வைகோ கத்த தயாரா? நன்றி தமிழ் மீம்ஸ் அரசியல் கட்சிகள் தங்கள் வருமானத்தை பாதிக்கும் எந்த பிரச்சனைகளிலும் மக்களை போராடவிடுவதில்லை ! நாம் எழுச்சி எழுச்சி என்று சொல்லிக்கொள்ளும் எல்லா போராட்டமும் அரசியல் கட்சியையும் அதன் வருமானத்தையும் நேரடியாக பாதிக்காத திட்டங்களே ! எளிதாக சொன்னால் தங்கள் பிழைப்பை பாதிக்காத போராட்டங்களே கட்சிகளால் அனுமதிக்கப்படுகின்றன. மீடியாக்களில் கவர் செய்யவும்பட