சென்னை ஓபன் இனி இல்லை !
சென்னை ஓபன் இனி இல்லை ! இனி அது மஹாராஷ்டிரா ஓபன் ! காரணம் நிதி இல்லையாம் ! சென்னை ஓபன் தமிழ்நாட்டுக்கு அத்தனை முக்கியமா? உலகத்தில் நடக்கும் டென்னிஸ் தொடர்களில் 4 கிராண்ட்ஸ்லாம் (Grand slam) போட்டிகளுக்கு அடுத்து 5வது பெரிய டென்னிஸ் தொடர் ATP World Series. சென்னை ஓபன் ATP World Series தொடரில் ஒன்று. இந்தியாவில் நடக்கும் ஒரே ATP World Series போட்டி நம்ம சென்னை ஓபன் மட்டும் தான். சென்னையில் 22 வருடமாக தொடர்ந்து நடைபெற்றுவந்த சென்னை ஓபன் போட்டியை அடுத்த வருடம் நடத்த நடவடிக்கை கூட எடுக்க வக்கில்லாத அரசு நம்ம எடப்பாடி அரசு ! ஜெயலலிதா இருந்த வரை விளையாட்டு துறைக்கு பெரிய அளவில் உதவி செய்துவந்தார். இதை நான் சொல்லவில்லை பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சொன்னார். 2013 ஆம் ஆண்டு World Chess championship போட்டியை சென்னையில் நடத்த பெரிய அளவில் முயற்சி மேற்கொண்ட ஜெயலலிதா 29 கோடி நிதி ஒதுக்கி Vishwanath Anand vs Magnus Carlsen போட்டியை இந்தியா பெருமைப்படும் வண்ணம் நடத்தி நினைத்ததை முடித்துக்காட்டினார். இந்தியாவில் போட்டி என்றவுடன் தயங்கிய Magnus Carlsen னை சென்னைக்கு வரவழைக்க