Mindtree நிறுவனத்தை வாங்கும் முனைப்பில் எல்&டி நிறுவனம்
சமீபத்தில் எல்&டி (L&T) நிறுவனம் 9,000 கோடி மதிப்பிலான நிறுவன பங்குகளை பங்குசந்தையில் இருந்து திருப்பி வாங்கிக்கொள்ள (Share Buyback) மேற்கொண்ட முயற்சியை பங்குச்சந்தை நெறியாளர் அமைப்பான செபி (SEBI) சில காரணங்களுக்காக தடைசெய்தது செபியின் தடையால் துவண்டிருந்த எல்&டி நிறுவனத்தை Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தா தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள Mindtree தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் 20% பங்குகளை விற்க விரும்புவதாக கூறினார் நேற்று சித்தார்தாவின் 20% பங்குகளை எல்&டி நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால் எல்&டி நிறுவனம் இத்தோடு நிற்காமல் Mindtree நிறுவனத்தின் முழுவதும் கட்டுப்படுத்தும் அளவுக்கான (51% +) பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்துள்ளது Mindtree நிறுவனர்கள் நிறுவனம் தங்கள் கைகளை விட்டுப்போவதை விரும்பவில்லை. இந்த கையகப்படுத்துதலை முறியடிப்போம் என அவர்கள் பேட்டியளித்துள்ளனர் இப்படி ஒரு நிறுவனத்தை நடத்திவருபவர்களின் விருப்பமில்லாமல் மற்றொரு நிறுவனம் வலுக்கட்டாயமாக மேற்க்கொள்ளும் கையாகப்படுத்துதல் முயற்சியை Hostile Takeover என்று வர்ணிப்பர் இந்தியாவில் பல ஆண்டுக