Mindtree நிறுவனத்தை வாங்கும் முனைப்பில் எல்&டி நிறுவனம்
சமீபத்தில் எல்&டி (L&T) நிறுவனம் 9,000 கோடி மதிப்பிலான நிறுவன பங்குகளை பங்குசந்தையில் இருந்து திருப்பி வாங்கிக்கொள்ள (Share Buyback) மேற்கொண்ட முயற்சியை பங்குச்சந்தை நெறியாளர் அமைப்பான செபி (SEBI) சில காரணங்களுக்காக தடைசெய்தது
செபியின் தடையால் துவண்டிருந்த எல்&டி நிறுவனத்தை Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தா தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள Mindtree தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் 20% பங்குகளை விற்க விரும்புவதாக கூறினார்
நேற்று சித்தார்தாவின் 20% பங்குகளை எல்&டி நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால் எல்&டி நிறுவனம் இத்தோடு நிற்காமல் Mindtree நிறுவனத்தின் முழுவதும் கட்டுப்படுத்தும் அளவுக்கான (51% +) பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்துள்ளது
Mindtree நிறுவனர்கள் நிறுவனம் தங்கள் கைகளை விட்டுப்போவதை விரும்பவில்லை. இந்த கையகப்படுத்துதலை முறியடிப்போம் என அவர்கள் பேட்டியளித்துள்ளனர்
இப்படி ஒரு நிறுவனத்தை நடத்திவருபவர்களின் விருப்பமில்லாமல் மற்றொரு நிறுவனம் வலுக்கட்டாயமாக மேற்க்கொள்ளும் கையாகப்படுத்துதல் முயற்சியை Hostile Takeover என்று வர்ணிப்பர்
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு முயற்சிக்கப்படும் Hostile Takeover என்பதால் இந்த முயற்சி கூடுதல் கவனம் பெற்றுள்ளது
Mindtree நிறுவனத்தின் பங்குகள் யார் வசம் உள்ளது ?
சித்தார்த்தா - 20% (தற்பொழுது எல்&டி நிறுவனத்தின் வசம்)
Mindtree நிறுவனர்கள் குழு - 13%
வெளிநாட்டு முதலீடர்கள் - 40%
சில்லறை முதலீட்டார்கள் - 17%
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் - 8%
இனி எல்&டி நிறுவனம் சந்தையில் உள்ள பங்குகளை Open Offer மூலம் வாங்க முயற்சிக்கும். அதேபோல் Mindtree நிறுவனம் Share BuyBack மூலம் சந்தையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
இப்படி சந்தையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை குறைத்தால் பங்குகளின் விலை ஏறிவிடும். எனவே வேறு வழியில்லாமல் கையகப்படுத்துதலை எல்&டி கைவிடும் என Mindtree நிறுவனம் கணக்கு போடுகிறது
பொதுவாக Hostile Takeover நடவடிக்கைகள் அதிக காலம் எடுத்துக்கொள்ளும்
இந்த கையகயகப்படுத்துதல் பற்றிய செய்திகளையும், விளக்கங்களையும் வரும் நாட்களில் விளக்கமாக எழுத முயற்சிக்கிறேன்..
Comments
Post a Comment
Post ur comments and help us to improve