அபினந்தன் கதையில் அதிகம் பேசப்படாத பகுதி

அபினந்தனின் மொத்த எபிசோடில் அதிகம் பேசப்படாமல் (வேண்டுமென்றே?) தவிர்க்கப்படுவது அவர் சுட்டு வீழ்த்திய அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமான பகுதி தான்..

1974 முதல் அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்படும் F16 விமானம் தனது 45 வருட வரலாற்றில் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் இந்திய விமானப்படையும் அபினந்தனும்.

எல்லையில் ஒரு சண்டை அதில் ஒரு விமானம் இன்னொன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த கதை அத்தனை எளிதாக கடந்து சொல்லும் கதையல்ல..

விமானப்படையின் பலமென்பது விமானத்தின் பலம் மட்டும் அல்லவே.. அது விமானியின் பலத்தையும் சேர்த்தது என்று உலகிற்கு நிரூபித்த நொடி அது..

அபினந்தன் பறந்த MiG 21 விமானத்தின் செல்ல பெயர் "பறக்கும் சவப்பெட்டி" (Flying Coffin). 60 வருட பழைய சோவியத் டிசைனான MiG விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக நடந்த விபத்தில் மட்டும் 170க்கும் மேற்பட்ட இந்திய விமானிகள் உயிரை குடித்திருக்கிறது.

MiG விமானத்துக்கு மாற்றாக இந்தியா திட்டம் தீட்டி இருக்கும் தேஜஸ் போர்விமானங்கள் இந்நேரம் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தேஜஸ் உற்பத்தில் HAL நிறுவனம் காட்டும் காலதாமத்தால் MiG இன்னும் விமானப்படை பயன்பாட்டில் உள்ளது..

இப்படி மோசமான வரலாறு கொண்ட MiG விமானத்தை கொண்டு அபினந்தன் இதுவரை யாரும் தொடாத F16 போர் விமானத்தை வீழ்த்திவிட்டார்..

இந்தியா இப்பொழுது வாங்கியிருக்கும் 36 ரபேல் போர்விமானங்கள் தவிர குறைந்தது 100 விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் உள்ளது.

தற்பொழுது வாங்கியிருக்கும் 36 ரபேல் போர்விமானங்களின் விலை 56,000 கோடி ரூபாய்.. மேலும் 100 விமானம் என்றால் எத்தனை கோடிகள் வரும் என்று எண்ணிப்பார்த்து கொள்ளுங்கள். எனவே அந்த 100 விமான ஆர்டரை எடுக்க ஏற்கனவே போட்டாபோட்டி நிலவுகிறது..

இத்தனை பெரிய ஆர்டரை மனதில் வைத்துத்தான் மூன்று வாரங்களுக்கு முன் நடந்த பெங்களூரு ஏரோ ஷோவில் கூட அமெரிக்கா தனது F16 (Lockheed Martin நிறுவன தயாரிப்பு) மற்றும் F18 (Boeing நிறுவன தயாரிப்பு) விமானங்களை காட்சிபடுத்தியது.

இந்தியா விருப்பப்பட்டால் Make in India திட்டத்தில் அவற்றை உற்பத்தி செய்ய தயார் எனவும் அறிவித்தது..

அடுத்த இரண்டு வாரத்தில் F16 விமானத்தை சுட்டு வீழ்த்தி அமெரிக்காவின் தொழிலில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் அபினந்தன்.

என்னதான் நவீன போர் விமானமாக இருந்தாலும் F16 தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இது உலக அரங்கில் அமெரிக்க போர் விமான வியாபாரத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இனி இந்தியாவே அமெரிக்காவின் F16 விமானத்தை வாங்க முன்வந்தாலும் அது பலத்த கேள்விக்கும் கேலிக்கும் வழிவகுக்கும்...

அதனால் தான் அமெரிக்கா ஏன் F16 னை சண்டைக்கு எடுத்து போனாய் என்று பாக்கிஸ்தானை கடித்துகொண்டுள்ளது.

இந்த செய்தியை முடிந்த அளவு அமுக்கவே அமெரிக்க ராணுவ லாபி முயற்சி செய்யும். இப்படி ஒன்று நடக்கவே இல்லை, பாக்கிஸ்தான் F16 விமானத்தை பயன்படுத்தவே இல்லை என்று மறுப்பு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை..

ஆனால் பாக்கிஸ்தானின் F16 விமானத்தில் இருந்து சுடப்பட்ட AIM-120C advanced medium range air-to-air (AMRAAM) ஏவுகணையின் மீதி பாகங்களை ஆதாரமாக கொண்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் F16 சுட்டு வீழ்த்தப்பட்டத்தை நிரூபித்துவிட்டது இந்திய விமானப்படை.

இந்த செய்திகள் தலைப்பு செய்தியாக இடம்பெறாமல் இந்திய விமனாப்படை வெறும் மரங்களை தாக்கியது மேப்பில் பார்த்தோம் என்று இந்திய விமானப்படையின் தரத்தை கேள்விக்குறியாக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டது....

போரை விட மோசம் இந்த proxy போர் தான்...

- விக்கி

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)