உங்களின் Take Home சம்பளம் குறையப்போகிறது கேள்விப்பட்டீர்களா?

இனி PF (Provident Fund) பிடித்த தொகை அதிகமாகப்போகிறது கேள்விப்பட்டீர்களா ??

தொடர்ந்து படியுங்கள்..

பொதுவாக பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் அடிப்படை ஊதிய (basic pay) தொகையின் 12% சதவீதத்தை பணியாளர்களின் PF பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும்

அதே அளவு (12%) தொகையை நிறுவனமும் தன் பங்களிப்பாக பணியாளரின் PF கணக்கில் வரவு வைக்கும்.. (அதிகபட்சம் மாதம் ₹1,800)

மார்ச் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் special allowance தொகையையும் Basic Pay யுடன் சேர்த்து கணக்கிட்டு அந்த தொகையில் 12 % PF பிடித்தம்செய்ய வேண்டும் என கூறியுள்ளது...

உதாரணமாக ஒருவர் மாதம் ₹ 5,000 அடிப்படை ஊதியமும் (basic pay) மற்றும் ₹ 10,000 special allowance பெறுகிறார் என வைத்துக்கொள்வோம்.

(கவனிக்க: நிறுவனங்கள் செலவை குறைக்க ஊழியர் சம்பளத்தை Basic pay, special allowance என பலவாக பிரித்து தருகின்றன)

பழைய PF கணக்கீட்டின் படி, அடிப்படை ஊதியம் ₹5,000 க்கு 12% அதாவது  ₹600 மட்டும் ஊழியர் சம்பளத்தில் PF பணமாக பிடித்தம் செய்யப்படும். அதேபோல் நிறுவனமும் தன் பங்களிப்பாக ₹600 தொகையை ஊழியர் PF கணக்கில் வரவு வைக்கும். எனவே மாதம் ₹1200 PF பணம் ஊழியர் கணக்கில் வரவு வைக்கப்படும்..

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இனி அடிப்படை ஊதியம் ₹5,000, special allowance ₹10,000 இரண்டின் கூட்டுத்தொகையான ₹15,000 க்கு 12% அதாவது ₹1,800 ஊழியர் சம்பளத்தில் PF பணமாக பிடித்தம் செய்யப்படவேண்டும். அதே போல் ₹1,800 நிறுவனமும் ஊழியர் கணக்கில் மாதாமாதம் PF கணக்கில் வரவு வைக்கவேண்டும். எனவே மாதம் ஊழியர் PF கணக்கில் ₹3,600 வரவு வைக்கப்படவேண்டும்..

இந்த தீர்ப்பு எப்பொழுது நடைமுறை படுத்தப்படும் என்று தெரியவில்லை. நடைமுறைபடுத்தும் பொழுது

 * உங்களின் take home சம்பளம் குறையும்

* உங்கள் PF கணக்கில் வரவு அதிகரிக்கும்

* ஊழியர் பங்களிப்புக்கு ஈடாக நிறுவனமும் PF பணம் கட்டவேண்டும் என்பதால் நிறுவனத்தின் செலவும் அதிகரிக்கும்

* CTC (Cost To Company) அதிகரிக்கும். காரணம் CTC என்பது நிறுவனம் ஊழியரின் PF கணக்குக்கு அளிக்கும் பங்களிப்பை உள்ளடக்கியது

* இந்த உத்தரவு அரசு ஊழியருக்கும் பொருந்தும் என்பதால் அரசின் சம்பள செலவு அதிகரிக்கும்.

தீர்ப்பில் சொன்னதை அரசு அப்படியே நிறைவேற்றுமா அல்லது மாற்றம் கொண்டுவருமா என்று வரும் நாட்களில் தான் தெரியும்...

Comments

  1. now corporate companies be like.... "ipoluthu paar en rajathanthirathai"

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)