Posts

Accidental India - கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

இந்தியா பொருளாதாரத்தில் உலகின் 5வது பெரிய நாடு.. ஆனால் Per Capita Income என்று சொல்லப்பட்டும் ஒவ்வொரு இந்தியரின் சராசரி வருமானம் ஒரு வருடத்துக்கு 1 லட்சம் ரூபாய் மட்டுமே.. இதுவொன்றும் ஆஹா ஓஹோ நிலை இல்லைதான், ஆனால் நாம் இந்த நிலைக்கு வரவே பல இன்னல்களை சந்திக்க வேண்டி வந்தது.. உதாரணமாக 1990களில் இந்திய அரசின் மொத்த கையிருப்பு ஒருவார கால இறக்குமதியை கூட சமாளிக்க முடியாது என்பது போன்ற மோசமான காலகட்டம் வந்தபொழுது தான் நாம் விழித்து கொண்டோம்.. 1991ல் (நரசிம்ம ராவ் புண்ணியத்தில்) பொருளாதார கதவுகளை திறந்து விட்டோம். இன்று உலகின் 5வது பெரிய நாடாக உருவெடுத்திருக்கிறோம்.. சரியாக சொன்னால் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடிக்காத வரை இந்தியர்கள் அந்த பிரச்னையை கையாள்வதை பற்றி யோசிக்கக்கூட முற்படுவதில்லை, ஆனால் பிரச்சனை பூதாகரமானப்பின் அவற்றை மிகத்திறமையாகவே கையாண்டிருக்கிறோம். "Any change has come about in the wake of institutional failure and individual courage but crisis was a blessing in disguise for India" இந்தியா சந்தித்த மிக முக்கியமான 7 பிரச்சனைகளும் அவற்றை நாம் கையாண்ட விதத்தையும...

சிவன் சொத்தும் குளமும் நாசம் !

Image
கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு போகுது ஜனம், சாமி சாமி ன்னு ! ஆனா அவன் கும்புடற சிலை கூட போலி சிலை ! இந்த பணவெறி புடிச்ச அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாமியையும் விட்டுவைக்கல, கோவில் சொத்தையும் விட்டுவைக்கலை ! கோவில்ல விழா எடுத்தா முன்வரிசைல நின்னு பரிவட்டம் கட்டிக்க ஒரு பெரிய மனுஷன் கூட்டமே இருக்கு ஊருக்குள்ள, ஆனா அதே கோவில் சொத்து நாசமான போனா கேக்கத்தான் நாதி இல்லை. பெருசு பெருசா வச்சுக்குறானுங்க கல்வெட்டு, என்னவோ கோவில் கட்டுன ராஜராஜன் சோழன் மாதிரி ! கோவிலுக்கு தந்தது என்னவோ ஒரு டப்பா பெயிண்ட் ! வெள்ளைக்குதிரை ஏறி வந்து 10 வது முறையா காப்பாத்துவாராம் ஒருத்தர் ! அவர் வர்றதுக்குள்ள குதிரை இனம்ன்னு ஒன்னு நாம விட்டுவச்சுருந்தா பாக்கலாம் ! எனக்கு என்னவோ மனுஷனும் பண வெறியும் மட்டும்தான் மிச்சம் இருக்கும்னு தோணுது ! ! #SupportPonManikavel சரித்திரத்தில் முதல் முறையாக தமிழக அரசு தானாக முன்வந்து CBI வசம் வழக்குகளை ஒப்படைத்துள்ளது. அதுவும் ஒரு வழக்கல்ல இரண்டு வழக்கல்ல சிலை கடத்தல் பிரிவு போட்ட அத்தனை வழக்கையும் ஒரேடியாக CBI விசாரிக்கவேண்டும் என்று கோரியுள்ளது தமிழக அரசு !  இத்தனைக்க...

விவசாயம் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை... !

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல... உணவின்றி தவிக்கும் மக்கள் ஒரு பக்கம் என்றால் உற்பத்தியில் வருடா வருடம் உச்சத்தை தொடும் விவசாயிகள் மறுபக்கம்.. உதாரணத்திற்கு பால் பொருட்களை எடுத்துக்கொள்வோம்.. இந்திய பால் உற்பத்தி உலகிலேயே பெரியது..கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்த பாலின் அளவு 176 மில்லியன் டன்கள்... ஆனால் சந்தையில் பாலுக்கு தேவை அவ்வளவு இல்லை. எனவே பாலின் கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏறிக்கொண்டே போகிறது.. SMP (Skim Milk Powder) என்று சொல்லப்படும் பால் பவுடராக மாற்றி உலக அளவில் ஏற்றுமதி செய்யலாம் என்றால் உலக அளவில் பால் பவுடரின் விலையும் ஒரு டன்னுக்கு $ 3519 ல் இருந்து $ 2000 அளவுக்கு விழுந்து விட்டது.. இப்பொழுது விவசாயிகள் வீதிக்கு வந்துவிட்டார்கள். அரசே அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து கொள்ளவேண்டும் என்று.. சந்தையில் தேவையே இல்லாத பொழுது அரசாங்கம் மட்டும் பாலை கொள்முதல் செய்து என்ன தான் செய்யமுடியும் ?

வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம்

கல்விக்கடனை திரும்ப செலுத்தாமல் வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம் !!!! தமிழகத்தில் வசூலாகாத கடன் தொகை : 2659 கோடி ₹ நபர்கள் : 1,71,744 பேர் இந்தியாவில் மொத்தம் வசூலாகாத கல்வி தொகை : 6356 கோடி  ₹  நபர்கள் : 3,45,340 பேர் சரியாக சொன்னால் மொத்த இந்தியாவில் வசூல் ஆகாமல் உள்ள கல்வி கடனில் 40% தமிழர்களின் கடன். மொத்த இந்தியாவில் கல்வி கடனை திரும்பி செலுத்தாத நபர்களில் பாதி பேர் தமிழர்கள் !! திமுக வெற்றி பெற்றால் கடன் தொகை தள்ளுபடி என்று நம்பி ஏமாந்த கூட்டம் இது ! தரவு - தி ஹிந்து நாளிதழ் - https://www.thehindu.com/news/national/tamil-nadu/40-study-loan-npas-are-from-tn/article24485638.ece

முதல்வன் பட பாணியில் கிரண் பேடி

புதுச்சேரி மின்சார வாரியத்துக்கு தனி நபர்கள், நிறுவனங்கள் என 25,000க்கு மேற்பட்டோர் சுமார் 120 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர். அதிரடிக்கு பெயர் போன புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி பல மாதங்களாக மின்பாக்கி வைத்திருப்பவரின் பெயர்கள் செய்தித்தாள் மற்றும் FM ரேடியோவில் வெளியிடப்படும் (Name & Shame Campaign) என தடாலடியாக அறிவிக்க, அறிவிப்பு வெளியான தினத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் ரூபாய் பாக்கி வசூல் ஆனது. ( படிக்க :  https://www.deccanchronicle.com/nation/current-affairs/270618/pondicherry-electricity-dept-collects-rs-14-lakh.html ) அடுத்தடுத்த நாட்களில் பலரும் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்பி கட்ட சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு நான்கே நாட்களில் வசூல் ஆனது. இதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் திருப்பி செலுத்திய தொகை சுமார் 2 கோடி ரூபாய் !  ( படிக்க :  https://www.moneycontrol.com/news/india/puducherry-electricity-department-recovers-rs-4-8-crore-in-arrears-after-name-and-shame-defaulters-directive-from-kiran-bedi-2650341.html ) அ...

புதிய இந்தியா : 1 - நிறுவனங்களை கை கழுவும் ஆடிட்டர்கள்

Image
(இந்தியாவில் ஏற்பட்டு வரும் வரவேற்கப்படவேண்டிய மாற்றங்களை பற்றிய எனது கட்டுரைகள் "புதிய இந்தியா" என்கிற தலைப்பில்) பல நிறுவனகங்கள் தங்கள் வருமானத்தை உயர்த்தி காட்டி அந்த கணக்குகளை கொண்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளன. இந்த கடன்கள் தான் பின்னாளில் வாரக்கடனாக லட்சம் கோடிகளில் இந்திய வங்கிகளை இழுத்து மூடம் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதுபோன்ற பித்தலாட்ட வேலைகளுக்கு நிறுவனங்களுக்கு உதவுபவர்கள் ஆடிட்டர்கள். உதாரணமாக A என்கிற நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடிக்கு turnover செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிறுவனமும் அதன் ஆடிட்டர்களும் சேர்ந்து A நிறுவனத்தின் turnover 500 கோடி என்று கணக்குகளை மாற்றுவார்கள். பின் மாற்றிய கணக்குகளை கொண்டு வங்கிகளில் விரிவாக்க திட்டம் என்ற பெயரில் 300 அல்லது 500 கோடிக்கு கடன் பெறுவார்கள். வங்கியை பொறுத்தவரை 500 கோடி turnover செய்யும் நிறுவனத்துக்கு 300 கோடி கடன் தருவது ஒன்றும் தவறல்ல. ஆனால் A நிறுவனம் ஆண்டுக்கு செய்யும் தொழிலே 100 கோடி தான். எப்படியும் A நிறுவனத்தால் கடனை திரும்ப செலுத்தமுடியாது. A நிறுவனம் திவால் ஆகும், நிறுவனத்தின் தலைவ...

கல்வி கடன் தள்ளுபடி ஆகும் என்று நம்புபவரா நீங்கள் ??

மாதம் நல்ல சம்பளம் வாங்கும் சில IT நண்பர்கள் கூட தாங்கள் வாங்கிய கல்வி கடனை ஏன் திரும்பி கட்டவேண்டும் ? அது அடுத்த தேர்தலுக்கு பிறகு தள்ளுபடி ஆகிவிடும் என்று நம்புகின்றனர் ! ஒரே காலாண்டில் (Quarter) அரசு துறை வங்கிகள் மட்டும் சுமார் 56,000 கோடி நஷ்டம் என அறிவித்திருக்கும் இந்த மோசமான காலகட்டத்தில் கடன் தள்ளுபடியெல்லாம் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை... (எந்த வங்கி எத்தனை கோடி நஷ்டம் என கீழே இணைக்கப்பட்டுள்ள உள்ள ட்வீட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்) ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. ஆதார் எண், பான் (PAN) எண், உங்கள் PF account (UAN) என எல்லாமே இணைக்கப்பட்டுவிட்டது. சிம்பிளாக சொன்னால் உங்களின் மாத வருமானம் என்ன என்பது அரசாங்கத்துக்கு நன்றாக தெரியும். மாதம் 50,000 80,000 என சம்பளம் வாங்கிக்கொண்டு கல்விக்கடனில் ஒரு தவணை கூட கட்டாதவரை wilful defaulter (அதாவது கடனை திரும்ப செலுத்த வழி இருந்தும் வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் வங்கிகளை ஏமாற்றுபவர், உதாரணமாக விஜய் மல்லையா) என்று அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. கடனை ஒழுங்காக செலுத்தாமல் இருந்தால் Cibil score எனப்படும் உங்களி...