வரலாற்றின் பக்கங்கள் - பழைய புத்தக கடை
பழைய புத்தக கடை , சென்னை மூர் மார்க்கெட் கல்லூரி முடிந்ததும் சுற்றுலா செல்வது போல அனைவரும் செல்லும் ஒரு இடம் பழைய புத்தக கடை. அப்பொழுது கல்லூரி தேர்வுகள் முடியவில்லை. எனவே அவ்வளவாக அந்த கடையில் கூட்டமில்லை. கூட்டம் இல்லாததால் பொழுது போக்கிற்கு வானொலி கேட்டுகொண்டிருந்த கடைக்காரர் யாரோ தன் கடைக்கு வந்திருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தார். இளம் வயதுடைய இளைஞன், கண்ணில் சோகம், பை நிறைய புத்தகம் என நின்றான்.எப்பொழுதுமே பொறியியல் புத்தங்களுக்கு அங்கே கடும் கிராக்கி. வந்திருப்பவன் பொறியியல் மாணவன் என்று தெரிந்ததும் கடைகாரனுக்கு ஏக குஷி. பையையில் உள்ள புத்தகங்களை பார்த்தார். புத்தகத்தின் முனைகள் கூட மடங்காமல் பத்திரமாக படித்திருந்தான் அந்த இளைஞன். வந்தவன் முகத்தில் இருக்கும் சோகத்தை கடைக்காரர் கவனித்தார். ஆனால் அவனிடம் பேச்சு கொடுக்கவில்லை. ஒருபுத்தகத்தை பிரித்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தார் .அந்த புத்தகத்தில் எழுதி இருந்த வரிகள் " Awarded for excellence in academics in the first year of engineering at the Madras Institute of Technology by the Vic...