அலெக்ஸாண்டரும் பூனையும்
கவர்ன்மென்ட் ஆபீஸ்ல ஒரு செர்டிபிகேட் வாங்கவே paragaon ஆபீஸ் செப்பால் போடணும் , இப்படி பேர்வாங்குன நம்ம அரசாங்கம் திடிர்னு வேக வேலைசெய்யுது ? அதுவும் ஒரு தவறு செய்த தூதரக அதிகாரியை காப்பாற்ற ? விசா மோசடியில் ஈடுபட்ட தூதரக அதிகாரி தேவயாணியை காப்பற்ற அமெரிக்க தூதரக பாதுகாப்பு ரத்து, தூதரக அதிகாரிகள் சிறப்பு சலுகைகள் ரத்து, நீ தேவயானிய ரிட்டன் அனுப்புறிய ? உன் தூதர நான் அனுப்புறேன் என்று புல்லட் ரயிலாக பாய்கிறது (மெட்ரோ லேட்டாகும், அதான் புல்லட் ) இந்திய அரசாங்கம். தேவயாணியை இந்திய கொண்டுவரலேனா பார்லிமென்ட் பக்கமே தல வச்சும் படுக்கமாட்டேன்னு சொல்ற வெளியுறவு துறை மந்திரி ? உலகின் முதலாளி என்று நினைத்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இதுவரை ஆமாம் சாமி மட்டும் போட்டு வந்த இந்தியாவா இது ? இந்தியாவிற்கு தெரியும் தன் பலம் என்னவென்று , அமெரிக்க இருக்கும் நிலையில் ஆசியாவில் இந்தியாவை விட்டால் எவரும் நேசக்கரம் நீட்ட தயாரில்லை. அதுவும் சீனாவுக்கு பக்கத்தில் ஒரு நண்பன் தலைகீழ நின்று தண்ணீர் குடித்தாலும் கிடைக்காது . ஆம் இந்தியா அவர்களுக்கு முக்கியம். அதை பயன்படுத்தித்தான்...