Posts

Showing posts from December, 2018

குழந்தைகளை கற்பழித்தால் மரண தண்டனை - மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தம்

குழந்தைகளை கற்பழிப்பு அல்லது கூட்டு கற்பழிப்பு செய்பவர்களுக்கு மரண தண்டனை - POCSO (Protection of Children from Sexual Offences) சட்டத்தில் திருத்தும் கொண்டுவர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் பழைய POCSO சட்டத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு மட்டுமே தண்டனை இருந்தது. இனி ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் சரிசம அளவிலான தண்டனை

கரும்பு விவசாயிகளுக்கு பெட்ரோல் விலை குறைவதும் ஒரு பிரச்சனை

Image
பெட்ரோல் விலை குறைந்துகொண்டே வருவதால் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் தேவை வெகுவாக குறையும் என கணிக்கப்படுகிறது... கவனிக்க: எத்தனால் அதிகம் கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.. எனவே உலகின் பெரிய கரும்பு உற்பத்தியாளரானா பிரேசில் 2019ல் கரும்புக்கு பதிலாக சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே சர்க்கரை விலை அடுத்த ஆண்டு குறையும். நம்ம விவசாயிகளுக்கு இதையெல்லாம் எடுத்துரைத்து நாம் அவர்களை தயார்செய்வதில்லை.. அவர்கள் வழக்கம் போல் கரும்பை உற்பத்தி செய்து விட்டு விலை கிடைக்கவில்லை என்று ரோட்டுக்கு வருவார்கள்...

அரசியல் அறிவோம்

BJP யின் பின்புலம் அல்லது பக்கபலம் ஹிந்துத்துவா.. எனவே ஹிந்துத்துவா சக்திகள் எந்த நாசகாரியம் செய்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.. திராவிட கட்சிகளின் பின்புலம் ஆதிக்க சாதியினர் (OBC communities), எனவே ஆதிக்க சாதியினர் ஆணவ கொலை செய்தால் கூட திராவிட கட்சிகள் கண்டுகொள்வதில்லை.. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் பின்புலம் அல்லது பக்கபலம் மைனாரிட்டி மக்கள் (கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள்), எனவே காங்கிரஸ்கார்கள் பெருகி வரும் மதமாற்றம் போன்றவற்றை பெரிதாக கண்டுகொள்வதில்லை... BJP காரன் நீதிமன்றமே சொன்னாலும் சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்பான்.. காங்கிரஸ் காரன் நீதிமன்றமே சொன்னாலும் முத்தலாக் நீக்கப்படக்கூடாது என்பான்.. திராவிட கட்சிகள் ஆணவ கொலையால் கலவரமே வந்தாலும் ஆதிக்க சாதி மீது கைவைக்க மாட்டான்... DOT #BJP #congress #dmk

Talgo ரயில் வேண்டாம், எங்களிடம் உள்ளது Train18

Image
2016 ஆகஸ்ட் மாதம், ஸ்வீடனின் Talgo நிறுவனம் 180 km வேகத்தில் பயணிக்கும் ரயிலை சொந்த செலவில் இந்தியாவிற்கு கொண்டுவந்து டெல்லி முதல் மும்பை வரை 12 மணிநேரத்தில் (தற்போதைய ரயிலின் பயண நேரம் 16 மணிநேரம்) வெற்றிகரமாக ஓட்டிக்காட்டி எங்கள் ரயிலை வாங்கிக்கொள்ளுங்கள் என்று இந்திய அரசை கேட்டது.. உங்கள் ரயில் வேணாம், எங்களுக்கு தேவையான ரயிலை நாங்களே தயாரித்து கொள்கிறோம் என்று அடுத்த 18 மாதத்தில் மேக் in இந்தியா திட்டத்தில் 100 கோடியில் Train18 ரயில் தயாரிக்கப்பட்டது...இது ஐரோப்பாவில் இருந்து வாங்கவிருந்த ரயிலை விட 40% குறைவான செலவில் செய்யப்பட்டுள்ளது சென்னை ICF ல் தயாரிக்கப்பட்ட Train18 ரயில் 180 KM வேகத்தில் பாயும் இந்தியாவின் அதிவேக ரயில் ! "Make In India" - நம்மாலும் முடியும் !!!  

மக்கா ஓடிவாங்கலே !! விவசாயத்தை காப்பாத்தீட்டு வந்துருவோம்

சம்பளகாரனுக்கு வருஷா வருஷம் சம்பளம் ஏறனும், வியாபாரி எவரும் நஷ்டத்துல ஒரு சோப்பு டப்பா கூட விற்க மாட்டீங்க ஆனா விவசாயி மட்டும் கடைசி வரைக்கும் நஷ்டத்துல 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் வெங்காயம் விற்று உங்களுக்கு சோறு போடணும் ??? சுயநலம் என்றால் என்ன என்பதை நம்ம மக்க கிட்ட தான் கத்துக்கனும் டோய்... இதுல Good morning, Good Afternoon அனுப்புற மாதிரி டெய்லி நாலுவாட்டி விவசாயத்த காப்பாத்தனூன்னு பேஸ்புக் போஸ்ட், அதுக்கு நாலு பேர் கண்ணீர் smiley வேற.... விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றாமல் விவசாயத்தை உணர்ச்சிகர பிரச்னையாக வைத்திருப்பதும், விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், கடன் தள்ளுபடி செய்து அடுத்த வருடம் மீண்டும் அவனை கடன்காரன் ஆக்குவது என எல்லாமே விவசாயத்தை அழிக்கும் செயல் தான்....வந்துருவோம்..

அழிவின் விளிம்பில் BSNL

ஜியோ நிறுவனத்துக்கு உதவ மோடி அரசு BSNL க்கு 4G அலைக்கற்றை வழங்காமல் இழுத்தடிப்பது ஊரறிந்த உண்மை...இதை தான் Crony Capitalism என்று கூறுவார்கள்.. இதில் கவனிக்கதக்கது மற்றுமொரு செய்தி பிராட்பேண்ட் (broadband) சேவையில் 50 சதவீத சந்தையை வைத்திருப்பது BSNL நிறுவனம் தான். வரும் நாட்களில் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை துவங்கியதும் BSNL அழிவு தவிர்க்க முடியாதது ஆகிவிடும் ! குறிப்பு : நான் BSNL சேவை தரத்தை கடுமையாக விமர்சிப்பவன். ஊழியர்கள் அலட்சியம், லஞ்சம் தலைவிரித்தாடும் இடத்துக்கு சிறந்த உதாரணம் BSNL அலுவலகங்கள். ஒரு சில நேர்மையான ஊழியர்களை தவிர மற்ற எல்லாரும் எனக்கு என்ன என்றுதான் பணிசெய்கிறார்கள். இன்று அழிவு அவர்கள் நிறுவனத்தின் வாசல் வரை வந்துவிட்டது அறிந்ததும் ரோட்டுக்கு வந்து போராட முடிவு செய்திருக்கிறார்கள். இனியாவது வாடிக்கையாளரை மதித்து லஞ்சம் வாங்காமல் சேவை வழங்குவீர்களா ??

எனக்கு ஒரு டவுட்

எனக்கு ஒரு டவுட் டெல்டா மாவட்டம் திருவாரூர் எடுத்துக்கோங்க. இங்க ஊருக்கு வெளியே இருந்த விவசாய நிலத்தையெல்லாம் plot போட்டு விற்பனை செய்வதும் வாங்குவதும் யாரு ? வெளிநாட்டுல சம்பாதிச்சது, அரசு ஊழியர் கையில் எக்கச்சக்கமா புழங்குற பணம், IT மக்கள் சம்பாத்தியம், வியாபாரிகள் கிட்ட இருந்த கருப்பு பணம் இதெல்லாம் எதுல முதலீடு செஞ்சா double ஆகுன்னு கணக்கு போட்டு ஊருக்கு வெளில இருந்த விவசாய நிலத்தை எல்லாம் plot போட்டு வாங்கி ரியல் எஸ்டேட் வளர்த்தது கார்ப்பரேட்டா நம்ம லோக்கல் மக்களா ?? இதுல விவசாயம் காப்போம்ன்னு hashtag வேற டெய்லி போட்டுக்கவேண்டியது...