Posts

Showing posts from 2020

பொறியியல் கவுன்சிலிங் சொல்லும் செய்தி

Image
இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் முடிவில் எவ்வளவு இடங்கள் நிரம்பியிருக்கின்றன என்று தேடிய பொழுது கிடைத்த தகவல்   அரசு கல்லூரிகளை தவிர்த்து எந்த கல்லூரியிலும் முழுவதுமாக சீட் நிரம்பவில்லை  நிரம்பியிருக்கும் சீட்களும் CSE மற்றும் IT Department தான் நிரம்பியிருக்கின்றன நல்ல கல்லூரி என்று கருதப்பட்ட பல தனியார் கல்லூரிகளில் கூட Mech, Civil, ECE, EEE துறைகள் பெரிய அளவில் நிரம்பவில்லை... Vacant seats in Engineering  Image from Google Search உதாரணமாக - திருச்சி சாரநாதன் கல்லூரி, கோவில்பட்டி National, திண்டுக்கல் PSNA, கோவை ஹிந்துஸ்தான், சேலம் Sona, சென்னை ஜேப்பியர், பனிமலர், SRM வள்ளியம்மை போன்ற கல்லூரிகளில் கூட Mech, ECE, EEE துறை சீட்டுகள் முழுவதுமாக நிரம்பவில்லை  கல்லூரி மற்றும் துறை வாரியாக நிரம்பாமல் இருக்கும் சீட்களை இந்த PDFல் சென்று பார்க்கவும் https://static.tneaonline.org/docs/Academic_Vacancy_After_Supplementary_Counselling.pdf   நான் படித்த அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் IT மற்றும் CSE துறைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. Civil மற்றும் Mech துறைகள் மோசம்..

தூவைநாதர் கோவில் - திருவாரூர் நகரின் மைய பகுதியில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்

Image
திருவாரூர் நகரின் மைய பகுதியில் பெரிய தேருக்கு மிக அருகில் (முருகன் தேருக்கு பக்கத்தில்) மோசமான நிலையில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலத்தை பற்றிய பதிவு... ~~~ தூவைநாதர் கோவில் ~~~  இத்திருக்கோயில் குளத்தில் நீராடி இறைவன் மீது "தூவாயா தொண்டுசெய்" என்று துவங்கும் தேவாரப்பாடலை பாடி இழந்த கண்பார்வையை சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பபெற்றார்.. ஆரூர் அமர்ந்த தியாகராஜ சுவாமிக்கு நண்பரான சுந்தர மூர்த்தி நாயனார் நீராடிய திருக்குளத்தின் இன்றைய நிலை வெளியே சொல்வதற்கில்லை... பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒரு அறிவிப்பு பலகை கூட கிடையாது. திருவாரூரில் வாழும் பலருக்கே அது தெரியாது... "இறைவனே நேரில் வந்து அருள்வழங்கும் அளவுக்கு பக்தியில் திளைத்த சுந்தரமூர்த்தி நாயனார் நின்று மனமுருகி தேவாரம் பாடிய அதே இடத்தில் நாம் நிற்கிறோம் என்ற உணர்வே உடலில் சிலிர்ப்பை தருகிறது" அதேசமயம் இப்படி கொண்டாடப்படவேண்டிய கோவில் நகரின் மையப்பகுதியில் இருந்தும் கேட்பாரற்று பாழடைந்து கிடப்பது மனதை உறுத்துகிறது.. தூவைநாதர் கோவில் கூகிள் மேப் தளத்தில்  தூவாயா தொண்டுசெய் தேவாரப்பாடல்  ( https://shaivam.org/thirumur

கோவிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடுவது சரியா ??

கோவிலில்  அர்ச்சகர் தட்டில் எதுக்கு சார் காசு போடவேண்டும். அவர் என்ன கடவுளுக்கும் நமக்கும் இடையில் தூதுவரா என்று கேட்பவர்கள் உண்டு காலை 5 மணிக்கு நடை திறப்பில் இருந்து பால்நெய்வேதனம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை பூஜை, இரவு அர்த்தசாம பூஜை, பிரதோஷம், சதுர்த்தி என கோவிலின் எல்லா நடைமுறைகளும் யார் வந்தாலும் வராவிட்டாலும், மழை, புயல் காலமாக இருந்தாலும், கொளுத்தும் வெயில் காலமாக இருந்தாலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன அந்த நடைமுறைகளை தினமும் செய்து வருபவர்கள் அர்ச்சகர்கள். அதற்கு நம்மால் முடிந்த காணிக்கையை கொடுக்கிறோம்.  ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம், மருத்துவ செலவுகள், பள்ளி படிப்பு செலவுகள், பெட்ரோல் விலை ஏற்றமெல்லாம் உண்டு. அவர்கள் பிழைப்பு என்பது அந்த தட்டில் விழும் பணத்தை நம்பி இருக்கிறது. முதலில் இந்த பூஜை பிரதோஷங்களே தேவையா என்று தானே கேட்கிறேன் என்று நீங்கள் கேட்பீர்கள் எனில் உங்களுக்கு கோவில் என்கிற அமைப்பின் வழியாக இறையை தேடமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு கோவில் அமைப்பின் மீதே நம்பிக்கையில்லை எனில் அதன் நடைமுறைகளை பற்றி பேச எந்த அனுமதியும்

நோபல் பரிசு வாங்க ஒபாமாவுக்கு தகுதி உண்டெனில் டிரம்ப்க்கு இல்லையா?

Image
நேற்று தமிழ் நாளிதழ் ஒன்றில் பணிப்பிரியும் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கார்டூனை ஷேர் செய்திருந்தார். அது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதை கிண்டல் அடிக்கும் ஒரு கார்ட்டூன்.. கார்ட்டூன் அல்லது meme வரைவதற்கு humour sense போதும் வரலாறு அல்லது உண்மையை படிப்பததெல்லாம் தேவையில்லை போலும்.. சரி இதற்கு முன்னால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் அமைதிப்போராளி பராக் ஒபாமாவின் கதையை பார்த்துவிட்டு ட்ரம்புக்கு நோபல் வாங்க தகுதி இருக்கிறதா என்பதை பற்றி பேசுவோம்.. ~~~~~~~அமைதி ஒபாமா~~~~~~~ அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றது 2009 ஜனவரியில். அதே 2009ல் அக்டோபர் மாதம் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.. அதாவது பதவியேற்ற 9 மாதத்தில் அவர் அமைதிக்கு பெரும்பாடு பட்டதாக சொல்லி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.. ஆனால் ஒபாமா ஆட்சியில் பிற நாட்டின் மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்கள் எப்போதும் இருப்பதை விட சற்றும் குறையாமல் நடத்துவந்தன.. அவர் ஆட்சியில் நடந்த சில முக்கிய நடவடிக்கைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.. லிபியாவில் அதிபர் கடாபியை தூக்கியெறிய உள்நா

மேதைகள் கொண்டாடப்படும் அளவுக்குசெயல்வீரர்கள் கொண்டாடப்படுவதில்லை

எல்லா மேதைகளும் செயல்வீரர்களா, காரியத்தை முடிப்பவர்களாக இருந்துவிடுவதில்லை..  காரியம் சாதிக்க தெரியாத மேதைகளால் எந்த பயனுமில்லை.. சில காரியக்கார்கள் மேதைகளாக அறியப்படுவதில்லை. ஏனெனில் யார் மேதை என்பதை மீடியா தான் தீர்மானிக்கிறது.. இதற்கு நான்கு உதாரணங்கள் சொல்கிறேன்.... திரு மன்மோகன் சிங் என்கிற பொருளாதார மேதை 1991ல் காரியம் சாதிப்பவராக இருந்தார். கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தாராளமயமாக்கல் சிந்தனையை வெற்றிகரமாக கொண்டு வந்தார். நாட்டை பொருளாதார அழிவிலிருந்து மீட்டர். ஆனால் அதே மன்மோகன் சிங் 2009 to 14 லில் வெறும் மேதை என்கிற பட்டதோடு அமைதியாக நேரு குடும்பத்தின் சேவகராக மட்டும் இருந்துவிட்டார். விளைவு கடுமையான பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு அவரது அரசை தூக்கியேறிந்தது... திரு ரகுராம் ராஜன் என்கிற பொருளாதார மேதை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பொழுது வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தவறினார். இப்பொழுது எதிர்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கை விட உதவும் வகையில் பேட்டி அளித்துக்கொண்டு சுற்றுகிறார்.. அதேசமயம் வாரக்கடன் பிரச்னையை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுத்த திரு உர்ஜித் பட்ட

கொரோனாவால் முடங்கிய மாநில வருவாய்

GST வரம்புக்குள் வராமல் மாநில அரசின் நேரடி வரி விதிப்பில் மிச்சம் இருப்பவை - பெட்ரோல்/டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி, பத்திரப்பதிவு கட்டணம், மதுவிற்பனைக்கு விதிக்கும் வரி. கடந்த ஒரு மாதமாக பெட்ரோல்/டீசல் விற்பனை பெரிய அளவில் இல்லை. நிலம் விற்றல் வாங்கலும் நடக்காததால் பத்திரப்பதிவும் நடைபெறுவதில்லை, தமிழக அரசு மதுக்கடைகளை மூடிவைத்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் GST வருவாய் பெரிதாக இருக்கும் என தோன்றவில்லை. எனில் தமிழக அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் வழிகள் எல்லாமே அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா முடிந்ததும் நாம் சந்திக்க வேண்டிய நெருக்கடிகள் ஏராளம்...

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி யாருக்கும் நல்லதல்ல

கச்சா எண்ணெய் விலை $18 என்ற 10 ஆண்டுகளில் இல்லாத விலைக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.. இதில் இரண்டு உண்மைகள் * கச்சா எண்ணெய் விலை இப்படி அடிமட்டதுக்கு வீழ்ச்சி அடைவது  யாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் நம் மக்களுக்கு கண்டிப்பாக நல்ல செய்தி அல்ல. இதனால் வேலை இழப்பே அதிகம் ஏற்படும். * கச்சா எண்ணெய் விலை குறைவதால் பொருட்களின் விலை அடிமட்டதுக்கு குறையும் என்பதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.. விலை குறைந்தால் அது முதலாளிகளின் பாக்கெட்டுக்கு போகலாமே தவிர பொருளின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. அதே சமயம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் பட்சத்தில் பொருட்களின் விலையை ஏற்றி விடுவார்கள். எனவே பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் பொருட்களின் விலை குறையும் என்பது தவறு என்பதே என் கருத்து இறுதியாக... பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அனைவரும் வாங்கக்கூடிய அளவில் இருக்கவேண்டுமே ஒழிய மலிவு விலையில் கிடைப்பது நல்லதல்ல என்பது என் கருத்து. Affordable but not cheap

திரு. ஷியாம் சேகர் அவர்களுடன் எனது உரையாடல்

130 கோடி மக்களும் வீட்டில் முடக்கப்பட்டுள்ள சூழலில் பங்குசந்தைகள் மட்டும் தொடர்ந்து செயல்படுதல் சரியா ? ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் EMI தள்ளிப்போடும் வாய்ப்பை பயன்படுத்தலாமா ? விமான நிறுவனங்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டிய சூழல் வருமா ? பஜாஜ் பைனான்ஸ் போன்ற NBFC நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் EMI தள்ளிப்போடும் முடிவு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் ? பங்குசந்தையில் தொடர்ந்து முதிலீடு செய்யலாமா ? NBFC நிறுவனங்களின் கார்ப்பரேட் பாண்ட் வாங்கியவர்கள் கவலை படவேண்டுமா ? ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ?? இன்னும் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் திரு. ஷியாம் சேகர் அவர்கள் கேட்க : https://soundcloud.com/iamvickyav/vicky-talks-discussion-with-mr-shyam-sekar-on-impact-of-corona-on-stock-market-indian-economy  

கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்

Image
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் சுருக்கம் RBI இந்த கட்டுரையின் ஆங்கில வடிவை படிக்க -  RBI announcement to tackle Corona 1. RBI allows deferment of EMIs upto 3 months வங்கிகள் (பொதுத்துறை, தனியார், பிராந்திய, கூட்டுறவு வங்கி), NBFC நிறுவனங்கள் (பஜாஜ் பைனான்ஸ் போன்றவை), வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (HDFC, DHFL போன்றவை) போன்றவற்றில் பெறப்பட்ட கடன்களின் மாத தவணையை மூன்று மாதத்துக்கு செலுத்தியாகவேண்டிய அவசியம் இல்லை.  கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்  செலுத்தாமல் விடும் பட்சத்தில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.  இதில் கவனிக்க வேண்டியது : ரிசர்வ் வங்கி EMI வசூலை தள்ளிவைக்க அனுமதி தான் கொடுத்துள்ளது. தள்ளி வைக்கும் முடிவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தது 2. RBI allows deferment of loans for business upto 3 months நிறுவனங்கள் அன்றாட பணிகளுக்காக வங்கியுள்ள Working Captial தொகைக்கான EMI மூன்று மாதத்துக்கு கட்ட தேவையில்லை. இதில் கவனிக்க வேண்டியது :   ரிசர்வ் வங்கி EMI வசூலை

RBI announcement to tackle Corona & Its impact

Image
Here is the summary of announcement from RBI RBI To read Tamil version of this article -  கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் 1. RBI allows deferment of EMIs upto 3 months Above announcement applicable for loans taken from Banks (public, private, regional, cooperative), NBFCs (like Bajaj Finance, DHFL) which includes housing finance companies, small savings banks (like Equitas) What to watch out for : RBI only give power for banks to defer. Its upto banks to do it. I hope banks will comply this time 2. RBI allows deferment of loans for business upto 3 months Loans for business Establishments gets deferred upto 3 months. This move will certainly help MSME which got hit mostly by 21 day lockdown What to watch out for  : RBI only give power for banks to defer. Its upto banks to do it. I hope banks will comply this time 2. RBI cuts Repo rate by 75 bps to 4.4% This is the lowest repo rate we ever have. Th

போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திலும், திருவாரூர் நூலகத்திலும் பட்டதாரிகள் மணிக்கணக்காக போட்டி தேர்வுக்கு தயார் செய்வதை பார்த்திருக்கிறேன். எப்படியேனும் தேர்வில் வெற்றிபெற்று அரசு பணிக்கு செல்லவேண்டும் என்று இரவு பகலாக படிக்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் TNPSC, SSC போன்ற அரசு தேர்வுகள் கேலிக்கூத்தாக, காசு கொடுத்தால் எவரும் வெற்றி பெறலாம் என்ற லச்சணத்தில் நடக்கிறது. ஒரு வேளைக்கு லச்சக்கணக்கானவர்கள் போட்டிபோடுகிறார்கள். போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள் - தயவு செய்து ஏதோ ஒரு பணியில் இருந்து கொண்டே தேர்வுக்கு தயார் செய்யுங்கள் . முக்கால்வாசி நிறுவனங்கள் கல்வி முடித்ததற்கும், வேலைக்கு செல்வதற்குமான இடைவேளை அதிகமாக இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை. நீங்கள் வேலைக்கு செல்வதை தாமதிக்கும் ஒவ்வொருநாளும் உங்கள் படிப்புக்கு ஏற்ற துறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே வரும் ஊரில் அடுத்தவருக்கு உபதேசம் செய்வதற்காகவே ஒரு கூட்டம் சுற்றுகிறது. கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்களை அரசு வேலைக்கு போங்க தம்பி, பேங்க் கோச்சிங் சேர்ந்தால் நீ தான் அடுத்த மேனேஜர் என்று கு