Posts

Showing posts from February, 2014

மூன்றாவது கோணம் - என்ன பெருமையோ ?

Image
ரயிலில் பயணம் செய்யும் பொழுது சந்தித்த ரயில்வே ஊழியர் ஒருவரின் பாக்கெட்டில் SRMU என்று வெளியே தெரியும் அட்டை இருப்பதை பார்த்தேன். அதே போல் பல ரயில்வே ஊழியர்களின் சட்டை பாக்கெட்டுகளில் SRMU என்ற அட்டை இருப்பதை பார்த்தேன். ஆர்வம் தாங்காமல் ஒரு ரயில்வே ஊழியரிடம் விளக்கம் கேட்டேன் "நாங்கள்  இந்திய ரயில்வேயின் ஆகப்பெரிய தொழிற்சங்கமான SRMU வின் உறுப்பினர்கள் என்று காட்டிக்கொள்ள இந்த ஏற்பாடு" என்றார் பெருமிதத்துடன்.  இவர்கள் யாரும் உலகின் மிகப்பெரிய பொது துறை நிறுவனமான ரயில்வேயில் வேலை செய்கிறோம் என்று பெருமிதம் கொள்ளவில்லை. ஆனால் SRMU வின் உறுப்பினர் என்பதில் அத்தனை பெருமை . என்ன பெருமையோ ?

வாலி வார்த்தை ஜாலங்கள்

Image
எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் ஆழமான நட்பு இருந்தது. ஆனால் தொழில் ரீதியான போட்டியும் இருந்தது.கவிஞர் வாலி எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியர் என்பது உலகம் அறிந்தது. ஆனால் அவர் சிவாஜி படங்களுக்கும் பாடல் எழுதி வந்தார்.  சிவாஜி நடிப்பில் தயாரான படம் "அன்புக்கரங்கள்". அந்த படத்தின் பாடல்களை வாலி எழுதினர். எம்.ஜி.ஆர் வாலியை சந்தித்த பொழுது வாலியிடம் கேட்டார் "உங்க அன்புக்கரங்கள் எப்போ ரிலீஸ் ? " புன்னகையுடன்  "உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று வாலி சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார். வார்த்தை ஜாலங்களால் வாத்தியாரையே மடக்கியவர் கவிஞர் வாலி ... !

மூன்றாவது கோணம் - ஏர்டெல் சூப்பர் சிங்கர்

Image
இந்திய மக்களை ஒரு வார்த்தையில் குறிப்பிடச் சொன்னால் என் பதில் "உணர்ச்சிவயப்பட்டவர்கள்".  ஆம் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கலாச்சாரம் நம்முடையது. இதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ அதை நன்கு புரிந்தவர்கள் மீடியாவும், அரசியல்வாதிகளும் தான் . இதற்கு பல உதாரணங்களை காட்டமுடியும் இன்று தமிழகத்தில் அதிகம் பார்க்கப்படும் விஜய் டிவியின்  " ஏர்டெல் சூப்பர் சிங்கர் " நிகழ்ச்சி . பலரின் வாழ்கையை மாற்றிய நிகழ்வு என்ற வகையில் மிக பெரிய வெற்றிபெற்ற நிகழ்ச்சி. ஆனால் அதைவிட அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் அதிலே கட்டப்படும் உணர்சிகரமான காட்சி அமைப்புகள். ஒரு பையன் தோல்வியால் அழுவது போலவும் அவன் குடும்பத்தினர் அவனை தேற்றுவது, நடுவர்கள் அவர்கள் பங்குக்கு கண்ணீர் என பார்க்கும் நம்மையும் உணர்ச்சி வயப்பட வைத்ததாலேயே அது இன்றும் வெற்றிகரமான நிகழ்ச்சியாக உள்ளது என்பது என் கருத்து. 

மூன்றாவது கோணம் - பூனை குறுக்கே போனால் சகுனத் தடை

Image
பூனை குறுக்கே போனால் சகுனத் தடை என்ற எண்ணம் இன்னும் பரவலாக இருப்பதாய் காணலாம். இது எப்படி ஏற்பட்டது என்று தேடியபொழுது கிடைத்த சுவையான தகவல் பூனை மனித நாகரிகத்தோடு தொடர்புடையது. பொதுவாகவே மனிதன் வசிப்பிடத்தில் தான் அவையும் வசிக்கும். அந்த காலத்தில் படை வீரர்கள் இன்னொரு நாட்டுக்கு படையெடுத்து செல்லும் பொழுது பூனை குறிக்கிட்டால் மனித நடமாட்டம் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டதை உணர்வார்கள். எனவே அதன் பின் மிக ஜாக்கிரதயாகவே செல்வார்கள். எனவே வேகமாக முன்னேறும் படை பூனையை கண்டால் தயக்கத்துடனே செல்வதால் அதை சகுனத் தடையாக கருதினார்கள். அதுவே இன்றும் தொடர்கிறது.... ! 

கல்யாணமாம் கல்யாணம் - சிறுகதை

Image
தட புடலாக நடந்தது திருமண ஏற்பாடுகள். மைக் செட்டுகளும் தோரணங்களும் மண்டபத்தை அலங்கரித்தன. மாடர்ன் பிளக்ஸ் போர்டுகளில்  வருங்கால மாப்பிள்ளைகளின் முகங்கள் போட்டோஷாப் மென்பொரு ளின் கருணையில் ஜொலித்தன . திருமணம், அதுவும்  சாதி மத பேதங்களில் மூழ்கிப்போன தமிழகத்தில் இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்ட கலப்பு திருமணம். போனவாரம் வரை இந்த திருமணம் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. கூச்சல்கள் நிறைந்த இந்திய பாராளமன்றம் போல இருவர் வீட்டிலும் எதிர்ப்புகளுக்கும்  கூச்சல்களுக்கு பஞ்சமில்லை. ஒருவழியாக இருவீட்டாரும் சம்மதித்து திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று அரங்கேறின. நாளை காலை திருமணம் , இன்று இரவு மாப்பிள்ளை பெண் ஊர்வலம் என திட்டமிடப்பட்டு ஊர்வலத்துக்கான நேரம் குறிக்கப்பட்டது. நான் தயாராக இருந்தேன். அலங்கரிக்க ப் பட்ட ஊர்வல வண்டியில் ஊர்வலம் ஏற, ஆராத்தி எடுத்து முடித்ததும் நல்ல நேரம் கார்ல ஏறுங்க என்று யாரோ சொல்ல, அலங்கரிக்க பட்ட வண்டியில் ஏறி இருவரும் அமர்ந்தோம் ..! எனக்கு முன்னால் பேண்டு வாத்தியங்கள் முழங்கின. சினிமா நடிகரை பார்ப்பது போல் போவோர் வருவோர் ஊர்வல வண்டியை பார்த்தவ

ஒரு Doubt - என் சிறுகதை

Image
மூச்சுவாங்கித்தான் போனேன்,  வேகம் வேகம் இன்னும் சில மணித்துளிகளே ! நான் தங்கம் வாங்க ஒலிம்பிக்கில் ஓடவில்லை, கல்லூரிக்கு செல்ல அரசு பேருந்தின் பின்னால் ஓடினேன். கோவில்வெண்ணி செல்லும் பேருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரதொடங்கிய பொழுது எப்படியோ ஏறிவிட்டேன் . கூட்டம் குறைவுதான் உட்கார இடமும் கிடைத்தது. பேருந்து திருவாரூர் நகர் எல்லையை  தாண்டி சென்று கொண்டிருந்தது, அரசு பேருந்துக்கே உரித்தான மித வேகத்தில். எனக்கு பின் சீட்டில் இருவர் தங்கள் குடும்ப கதையை ஊர் அறியும் வண்ணம் உரக்க பேசிவர எனக்கும் என் வாழ்கை குறித்த எண்ண ஓட்டம் மனதில் எழ தொடங்கியது. பேருந்தின் ஜன்னலை திறந்தேன் தென்றல் காற்று உள்ளே வர அப்பொழுது யாருடைய செல்போனோ ஒலித்தது " செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் ..." இசைஞாநியின் கீதம். எனக்கு benz கார் மீது ஆர்வம் உண்டு. படித்து முடித்து சம்பாதிக்கும் காலத்தில் கண்டிப்பாக வாங்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். நான் நன்றாகவே படித்தேன். கல்லூரி வாழ்கை  நண்பர் பட்டாளத்துடன் மிக இனிமையாக சென்றது. படித்து முடித்ததும் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி ஊதியம் 24,0

சூடு கண்ட பூனை

Image
அரசாங்கம், பாராளமன்றம், நீதிமன்றம், மீடியா ஆகியவையே ஜனநாயகத்தின் 4 தூண்கள். ஆனால் அந்த நான்கு தூண்களை தாங்கி நிற்கும் அடித்தளம்  ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை. "செய்வது எல்லாம் ஊழல், ஊழலை தவிர வேறொன்றும் இல்லை" என்று சத்திய பிரமாணம் எடுத்த அரசாங்கம் , கூச்சல் சத்தத்தை தவிர வேறு எந்த மக்கள் பிரச்சனைக்கும் குரல் வராத பாராளமன்றம் , வாய்தா கொடுத்தே வருடங்களை ஓட்டும் நீதிமன்றம்.தலைவர்களுக்கும் , நடிகைகளுக்கும் தும்மல் வந்தாலே தலைப்பு செய்தி ஆக்கும் மீடியா இந்த நான்கு பேர்மீதுமே நம்பிக்கை தகர்ந்து விரக்தியில் இருந்த மக்களுக்கு அண்ணா ஹசாரேவின் வரவு மீண்டும் ஒரு நம்பிகையை கொடுத்தது. முன்பின் தெரியாத ஒருவரை நம்பி மக்கள் அவர் பின்னால் கூடியபோதே ஜனநாயகத்தின் தூண்கள் மீதான அவர்களின் வெறுப்பு வெளிப்பட்டது. அதை மிகச் சரியாக அறுவடை செய்தவர் அரவிந்த் கெஜர்வால் . மக்களின் வெறுப்பு அலையில் நீந்தி டெல்லி கோட்டையை பிடித்தார் கெஜர்வால். மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது இவர் நம்மை காக்கவந்த இரட்சகர் என்று. ஆனால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக இவர் டெல்லி வீதியில் நடத்தும் கூத்து