Posts

Showing posts from September, 2018

பங்குச்சந்தை வீழ்ச்சி - திட்டமிட்ட சதியா ??

பங்குசந்தைகளில் பணம் போட்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் கடத்த 15 நாட்களாகவே பங்குகளின் விலை கணக்கு வழக்கு இல்லாமல், துறை வித்தியாசம் இல்லாமல் வீழ்ச்சி கண்டுவருகிறது. வீழ்ச்சிக்கு பலமான காரணம் எதுவும் எவரும் சொல்ல முடியவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த Sunday Guardian கட்டுரையில் பங்குசந்தைகளில் செயற்கையாக ஒரு வீழ்ச்சியை உருவாக்க சதி நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீழ்ச்சி அக்டோபர் காலகட்டத்தில் நடக்கும் என்றும் இதன் மூலம் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி தோற்கடிக்க முன்னாள் அமைச்சர்  (ப சிதம்பரம்) திட்டம் தீட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை இணைப்பு - https://www.sundayguardianlive.com/news/12638-cabal-plans-october-meltdown-share-prices-rout-bjp

பழக்க வழக்கங்களுக்கும் உண்டு மரணம்

இன்றைக்கு வித்தியாசமாக அல்லது முகம் சுளிக்க வைக்கக்கூடியதாக அமையும் மாற்றங்கள் நாளை சாதரணமாகிப்போகலாம் ! இன்றைக்கு இருப்பவர்கள் புலம்புவார்கள் நாளைக்கு வருபவருக்கு அது என்னவென்று கூட தெரியாமல் போகும் ! அதுதான் இயற்கையின் நீதி ! 100 வருடங்களுக்கு முன் நாம் பிறந்திருந்தால் நாமும் வெள்ளைக்காரனுக்கு அடிமைகள் ! அந்த தலைமுறைக்கு அடிமையாக இருப்பதன் வலி தெரியும் ! அவர்களுக்கு ஆகஸ்ட் 15 தின் பெருமை தெரியும் ! இன்றைய தலைமுறையிடம் அது பெரிதாக எதிரொலிக்க வாய்ப்பில்லை.. ! இதே உதாரணம் பெண்கள் மறுமணம், நாகரீக உடை அணிவது, அனைவரும் செருப்பு அணிவது, அனைவரும் சட்டை போடுவது என எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தும் ! #Sabarimala #TripleTalaq

Rafale deal in simple words - Part 2

Here is one simple example of how Rafale's offset deals gonna change India's defence sector completely ! Dassault agreed to revive the Kaveri engine project of India's DRDO as part of the offset clause, which is a huge win for India's defence production. lets see how What is Kaveri Engine ? Kaveri Engine (GTX-35VS) project was initially started in 1989 as Engine for Tejas flight (India's first indigenous Light combat jets). Even after several delays, DRDO failed to produce the Kaveri Engine, as it lacks thrust to push the aircraft. Delay in Kaveri Engine project also delayed Tejas production. So India separated Kaveri Engine & Tejas as two separate projects. Currently Tejas is fitted with engine from General Electric (GE) company as stop gap arrangement. By 2014, After spending more than 2100 crores, DRDO even planned to drop the Kaveri Engine project. But Rafale deal gave new life for Kaveri Engine. How Rafale deal going to save Kaveri Engine pro...

Rafale deal in simple words - Part 1

Till 2014 - India planned to buy 126 jets & Rafale was chosen by Indian army as the best fighter jet. 126 jets means 7 squadron. Each squadron contains 18 jets. In the planned 126 jets - 18 will be bought in Flyaway condition & manufactured in France + 108 should be manufactured in HAL Why 18 was planned to be manufacture in France ? India wanted Dassault to manufacture all Rafale jets in India but manufacturing & tech transfer needs time. But air force running short in numbers on active jets. So it want 1 squadron (18 in jets) as immediate requirement to counter Pakistan. So we planned to buy 18 in flyaway condition. Why deal was on hold ? India wanted Dassault to guarantee quality of all 126 jets (including the 108 to be manufactured in HAL) which Dassault was not agreeing. Dassault was very adamant that they will only give guarantee for 18 to be manufacture by them in France but not for the 108 manufactured by HAL So the deal was put on hold till Modi came to power. Whe...

மாலத்தீவு தேர்தல் - வெற்றி பெற்றது இந்தியா !!☺

மாலத்தீவில் நடத்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாகும்.. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிபர் சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டு இந்தியாவை எதிர்த்தார்.. இந்த தேர்தலின் மூலம் தங்களுக்கு சாதமான ஒருவரை மாலத்தீவில் ஆட்சியில் அமர்த்துகிறது இந்தியா... ஸ்ரீலங்காவில் மஹிந்தா ராஜபக்சே சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்ததாள் அவரை தோற்கடிக்க இந்திய உளவு அமைப்பான RAW இலங்கையில் இறங்கி வேலைசெய்ததும், ராஜபக்சே தான் தோல்வியுற இந்திய உளவுத்துறையே காரணம் என்று பேட்டியளித்ததும் இந்தியாவின் பெரிய அண்ணன் மொமெண்ட்ஸ்களில் சில...

வங்கிகள் இணைப்பு அறிவிப்பு - வங்கித்தேர்வுக்கு படிப்போர் உஷார்

தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மூன்றையும் இணைக்க அரசு முடிவு செய்துவிட்டது. தேனா வங்கி மோசமான நிதி நெருக்கடி மற்றும் வாரக்கடன் பிரச்னையில் உள்ளது. பேங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கி ஓரளவுக்கு நல்ல நிதிநிலையில் உள்ளன.. எனவே இந்த இணைப்பு சரியாகவேபடுகிறது. ஏற்கனவே SBI வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளும் இணைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்பொழுது அடுத்த 3 வங்கிகள் இணைக்கப்படுகிறது. இந்த trend தொடரத்தான் போகிறது. இன்னும் சில வங்கிகளை இணைக்கும் எண்ணமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது. இந்த இணைப்புகளில் ஒரே side effect புதிய வேலைவாய்ப்புகள்.. உதாரணமாக ஒரே ஊரில் தேனா, விஜயா, பரோடா வங்கிகளுக்கு கிளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இணைப்புக்கு பிறகு இவைமூன்றும் ஒரே வங்கி தான். ஒரே வங்கிக்கு ஒரு ஊரில் எதற்கு மூன்று கிளைகள் ??  எனவே சில கிளைகள் மூடப்படும் ஏற்கனவே இருக்கும் 3 வங்கி ஊழியர்களை இணைக்கப்பட்ட புதிய வங்கியில் ஏதாவது பணியில் அமர்த்தவே வங்கிகள் திண்டாடும். இதில் எங்கே புதிய ஆட்கள் எடுக்க ?? வங்கி தேர்வே லட்சியமாக கொண்டு படிப்போர் இதைப்போன்ற நாட்டு நடப்புகளையும் படி...

100 சதவீதம் மின்மயமாகிறது ரயில் பாதைகள்

இந்திய ரயில்வேயின் மொத்த ரயில் பாதையையும் மின்சார ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு முடிவு.. ஏற்கனவே 46% சதவீத ராயில்பாதை மின்மயமாக்கப்பட்டுவிட்டது. 20,000 கிமீ தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன.. மீதம் இருக்கும் 13,675 கிமீ தூரத்தியும் மின்மயமாக்க முடிவு.. 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டம்.. 100% மின்மயமாக்களுக்கு பின் ரயில்வேயின் செலவுகள் வருடத்துக்கு 13,510 கோடி வரை மிச்சமாகும் என கருதப்படுகிறது.  அதே போல் 2.83 பில்லியன் லிட்டர் டீசல் இறக்குமதியும் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டீசல் என்ஜின்களை மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் மாற்றும் நடவடிக்கைகளும் துவக்கம்.. இன்றைய தேதிக்கு ரயில்வே துறை டீசல் என்ஜின்களையே நம்பியுள்ளது .. டீசல் விலை ஏறும் பொழுதெல்லாம் ரயில்வேயின் வருவாயும் பாதிக்கப்படுகிறது..

இஸ்ரோ விஞ்ஞானி உளவாளியாக, திருடர்கள் முதல்வர்களாக !

வெளிநாட்டுக்கு இஸ்ரோ வின் ரகசியங்களை விற்க முயன்றதாக போலியாக குற்றம்சாட்டப்பட்டு கொடுமைசெய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பி நாராயணன் இஸ்ரோ வின் கிரையோஜெனிக் (Cryogenic) என்ஜின் தயாரிப்பு பிரிவின் தலைவர். அப்துல்கலாம் மற்றும் விக்ரம்சாராபாயுடன் இணைத்து பணியாற்றியவர். நம்பி நாராயணன் கைதால் இஸ்ரோ வின் GSLV ராக்கெட் தயாரிப்பு பணிகள் 19 வருடம் தாமதமானது. இது நமது நாட்டுக்கு எத்தனை பெரிய இழப்பு. இஸ்ரோ இன்றும் GSLV ராக்கெட்டில் பெரிய வெற்றியை பெறவில்லை. தொலைதூரம் அனுப்பவேண்டிய செயற்கைகோள்களுக்கு நாம்இன்னும் ஐரோப்பாவின் ஏரியான் ராக்கெட்டுகளை வாடகைக்கு பயன்படுத்துகிறோம்.  ஒருவேளை நம்பி நாராயணன் பொய்வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் பெரிய செயற்கைகோள்களை நாம் நமது GSLV ராக்கெட்டிலேயே செலுத்திக்கொண்டிருப்போம். எத்தனை கோடி நமக்கு மிச்சமாகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள் ??? எனவே நம்பி நாராயணன் கைதால் இந்தியாவும் இஸ்ரோவோம் இழந்தது பல.. ஆனால் இந்த வழக்கால் பயனடைத்தவர்களும...

சரியான திசையில் இந்தியா !

இந்திய அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பாதி போலியானவை ! கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற மட்டுமே உருவாக்கப்பட்ட, காகிதத்தில் மட்டுமே இருக்கும் shell கம்பெனிகள்.. இந்திய அரசு இவர்களுக்கு செக் வைக்க முடிவுசெய்தது ! இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களின் டைரக்டர்களும், board memberகளும் தங்களது ஆதார் எண், இருப்பிட தகவல், செல்போன் நம்பர், ஈமெயில் என அனைத்து தகவல்களையும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அரசாங்கத்துக்கு தரவேண்டும் என்று உத்தரவிட இன்று வரை பாதி நிறுவனங்கள் மட்டுமே தகவல்களை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளன. மீதி இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் போலியானவை ! அவர்களின் நிறுவன பதிவு விரைவில் ரத்து செய்யப்படும் ! ஏற்கனவே 2.26 லட்சம் நிறுவங்களின் பதிவை ஏற்கனவே ரத்துசெய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் ! ஆம் இந்தியா சரியான திசையில் தான் செல்கிறது ! #boardroomcleanup https://www.news18.com/news/business/almost-half-of-all-corporate-directors-may-not-actually-exist-govts-boardroom-cleanup-shows-1866323.html