இந்தியா ஜப்பான் - பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal)
சமீபத்தில் மோடி ஜப்பான் சென்றபொழுது இந்தியா ஜப்பான் இடையே $ 75 பில்லியன் (சுமார் ரூ.5¼ லட்சம் கோடி) மதிப்புக்கு பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal) கையெழுத்தாகியுள்ளது. அதேபோல் ஜப்பான் இந்தியா இடையேயான வர்த்தகமும் அமெரிக்க டாலர் இல்லாமலே நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal) என்றால் என்ன ? 1990 ல் ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு 3 வார இறக்குமதியை மட்டுமே சமாளிக்கும் அளவுக்கு கீழே செல்ல இந்தியா IMF மற்றும் உலகவங்கியிடம் டாலருக்கு கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் இனிவரும் காலத்தில் இந்தியாவின் டாலர் கையிருப்பில் பெரிய சரிவு ஏற்பட்டால் நாம் ஜப்பான் ரிசர்வ் வங்கியிடம் சுமார் ரூ.5¼ லட்சம் கோடி வரை அமெரிக்க டாலர்களாகவோ அல்லது ஜப்பான் நாணயமாகவோ பெற்றுக்கொள்ளலாம் ! அதற்கு மாற்றாக இந்திய ரூபாயை ஜப்பானிடம் பரிமாறிக்கொள்ளலாம் ! இந்திய ரூபாய் பெரிய அளவில் சரிவை சந்தித்துவரும் நிலையில் இந்த ஒப்பந்தம் பெரிய வரப்பிரசாதமாகும் !