Posts

Showing posts from February, 2019

கட்டிமுடிக்கப்படாத வீடுகளுக்கான GST வரி குறைப்பு

ரியல் எஸ்டேட் துறையில் GST வரிவிதிப்பு முறை கொஞ்சம் வித்தியாசமானது * வீடு அல்லது வணிக கட்டிடம் கட்டிமுடிக்கப்படாத நிலையில் இருக்கும் பொழுதே அவற்றை வாங்கினால் அந்த பரிவர்த்தனைக்கு 12% GST வரி உண்டு * அதே சமயம் கட்டிமுடிக்கப்பட்டு Completion Certificate பெறப்பட்டிருந்தால் அவற்றுக்கு GST வரி கிடையாது இன்று நடத்த GST கலந்தாய்வு கூட்டத்தில் 12% சதவீத வரி 5% மாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு  வீழ்ந்துகொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் கொடுக்க உதவும் என துறைசார்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல் மலிவு விலை வீடுகளுக்கான GST வரி 8% தில் இருந்து 1% மாக குறைக்கப்பட்டுள்ளது.  இங்கே மலிவு விலை வீடு என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை குறிப்பிடுவது சரியாக இருக்கும் * வீட்டின் தரைபரப்பு (carpet area) மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டராகவும் (தோராயமாக 650 சதுரடி), மெட்ரோ அல்லாத நகரங்களில் 90 சதுர மீட்டருக்குள்ளும் இருக்கவேண்டும் (தோராயமாக 970 சதுரடி) - இதில் மெட்ரோ நகரம் என்பது சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் நகரங...

இந்திய அறிவியலின் எதிர்காலம் மீது நம்பிக்கை தந்த மாலை பொழுது

Image
இன்று VarahaMihira Science Forum நடத்திய "Brief History of Gravity" என்கிற அறிவியல் சொற்பொழிவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இயற்பியல் விஞ்ஞானி திரு சதீஸ் குமார் சரவணன் இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்த அறிவியல் சொற்பொழிவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் என்கிற மாணவன் கேட்ட கேள்விகளும், அவனே சில கேள்விகளுக்கு அளித்த விளக்கங்களும் பேச்சாளர் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது ! தனது தாயாருடன் வந்திருந்த ஹரீஸிடன் நிகழ்ச்சி முடிந்த பின் பேசினோம். விண்வெளி வீரர் ஆவது தனது கனவு என்றும், ராகேஷ் ஷர்மா தனது முன்மாதிரி என்றும், தனக்கு சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் இருப்பதாகவும் (சேனல்: https://www.youtube.com/channel/UCwiKjScLZ0BkNmqPsnAB_JA ), அதில் 20க்கும் மேற்பட்ட அறிவியல் வீடியோக்களை அவனே பேசி பதிவேற்றி இருப்பதாகவும் சொல்லி மேலும் ஆச்சர்யத்தை கூட்டினான். ஹரிஷ் மற்றும் நண்பர்களுடன் சரியாக சொன்னால் எனக்கு Young Sheldon தொடரில் வரும் ஷெல்டன் கூப்பர் பாத்திரத்தை நேரில் பார்த்த ஒரு உணர்வு தான். இந்திய அறிவியலின் எதிர்காலம் மீது நம்பிக்கை தந்த மாலை பொழுது !!! ...

ரபேல் ஒப்பந்தத்தின் பலன் - வருகிறது சாப்ரான் என்ஜின் தொழிற்சாலை

Image
ரபேல் விமானம் தயாரிக்கும் டசாலட் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் (56,000 கோடியில்) பாதியை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்றொரு நிபந்தனை உள்ளது... அதன்படி விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாப்ரான் நிறுவனம் (Safran, இது டசாலட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும், ரபேல் போர்விமானத்தின் என்ஜினும் இந்த நிறுவனம் வடிவமைத்து தான்) தெலுங்கானாவில் 36 மில்லியன் யூரோ  விமான என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்குவதாக அறிவித்துள்ளது.. எதிர்க்கட்சிகள் ஊழல் ஊழல் என பேசிக்கொண்டிருக்க இந்தியா பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தியில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது... ரபேல் ஒப்பந்தத்தின் பலன்கள் சில  ஆண்டுகளில் நமக்கு தெரிய வரும் என நம்பலாம்..

Cognizant நிறுவனம் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புதல்

Cognizant நிறுவனம் தனது புனே மற்றும் சென்னை அலுவலகங்களை கட்ட $ 3.8 மில்லியன் லஞ்சமாக கொடுத்ததாக அமெரிக்க அரசிடம் ஒப்புக்கொண்டுள்ளது. புனே அலுவலகத்துக்கு $ 7,70,000, சென்னை சிறுசேரி SIPCOT அலுவலகத்துக்கு $ 8,70,700, சென்னை சோழிங்கநல்லூர் ELCOT அலுவலகத்துக்கு $ 20,00,000 தொகை அரசு ஊழியர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சப் பணத்தை கட்டிடம் கட்டிய L & T கட்டுமான நிறுவனம் மூலம் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது... லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்களா ?? https://www.livemint.com/companies/news/cognizant-used-l-t-to-bribe-govt-officials-in-india/amp-1550426741937.html?__twitter_impression=true 

மோடி மீண்டும் வருவதை முகேஷ் அம்பானி விரும்பவில்லை ?

நான் முன்பே இந்த சந்தேகத்தை எழுப்பினேன் ! முகேஷ் அம்பானி மோடி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது. அவரது தொலைக்காட்சிகளான தமிழில் நியூஸ்18, CNN TV18, Moneycontrol, FirstPost போன்ற பலவும் மோடிக்கு எதிரான அல்லது பிரியங்கா/ராகுல் காந்தியை தூக்கி பிடிக்கும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகின்றன.. நம்பிக்கை வராவிட்டால் நியூஸ்18 தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் குணசேகரன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் அவர் like செய்த ட்வீட்களை வரிசையாக எடுத்து பாருங்கள்....

நீர்வழி போக்குவரத்தில் அடுத்த மைல்கள்

உலகின் ஆகப்பெரிய சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk என்கிற டென்மார்க் நிறுவனம் இன்று முதல் வாரணாசி முதல் கொல்கத்தா வரை கங்கை நதியில் National Waterway -1 (NW 1) என்றழைக்கப்படும் நீர்வழி தடத்தில் கண்டைனர் சேவையை துவங்குகிறது... ஏற்கனவே Emami, IFFCO உர நிறுவனம், டாபர் நிறுவனங்கள் NW-1 தடத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.. நீர்வழி சரக்கு போக்குவரத்து சிக்கனமானது, சுற்றுசூழலை அதிகம் மாசுபடுத்தாத வழிமுறையாகும். மொத்த சரக்கு போக்குவரத்திற்கு அமெரிக்கா 21 % நீர்வழியை பயன்படுத்துகிறது ஆனால் இந்தியாவே வெறும் 0.1% தான் நீர்வழியை பயன்படுத்துகிறது.. இதை மாற்ற மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியது..

மோடி எதிர்ப்புக்காக மம்தாவை சாரதா ஊழல் ஆதரிக்க வேண்டாம்

மோடியை எதிர்க்க வேண்டியது தான். அதில் ஒன்றும் தவறு இல்லை.. ஆனால் மூளையை கழட்டி வச்சுட்டு என்ன நடந்தாலும் எதிர்க்கனும் அப்படின்னு அவசியம் இல்லை.. சாரதா சிட் பண்ட் என்கிற நிறுவனம் மற்றும் rose valley என்கிற நிறுவனமும் சுமார் 20 லட்சம் மக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி கோடிகளில் வசூல் செய்து (சாரதா நிறுவனம் 4000 கோடி, rose valley நிறுவனம் 15000 கோடி) பின்னர் அது போலி நிறுவனம் என தெரிய வந்து, அந்த நிறுவனத்தின் தலைவர்கள் பலரும் மம்தாவின் திரிணாமுல் கட்சியின் தலைவர்கள், மாநிலத்தின் பெரிய போலீஸ் அதிகாரிகள், சினிமா தயாரிப்பாளர், நம்ம P. சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி பல பெரிய புள்ளிகள் பின்னால் இருப்பது தெரியவந்து, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்க CBI க்கு வழக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரெய்டு நடத்த அனுமதி அளித்து, ரெய்டுக்கு சென்ற CBI அதிகாரிகளை கைதுசெய்துள்ளது மம்தா அரசு ! இதில் பணத்தை இழந்த பலரும் சாதாரண மிடில் கிளாஸ் மக்கள்.. ஆமாங்க உங்கள மாதிரி என்ன மாதிரி சாமானியன் மாசா மாசம் கட்டுன பணம்.. இதெல்லாம் தெரியாம சும்மா CBI ன்னா மத்திய அரசு மத்திய ...

பட்ஜெட் 2019 - இரண்டாவது வீடு வாங்குவோருக்கும் வரி சலுகை

பலரும் சொந்த ஊரை விட்டுவிட்டு வேலைக்காகவோ, பிள்ளைகள் படிப்பிற்காகவோ நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். அதில் பலருக்கும் ஊரில் பரம்பரை வீடு சொந்தமாக இருக்கும். அதை யாரும் பெரும்பாலும் விற்றுவிடுவதில்லை. சரி நீங்கள் இடம்பெயர்ந்த நகரத்தில் குறைந்தது அடுத்த 30 வருடங்கள் கழிக்கப்போகிறீர்கள் என்பதால் நகரத்தில் ஒரு சொந்த வீடு வாங்கி குடியேறுவது சகஜமான செயல் தானே ?  ஆனால் இந்திய வருமான வரி சட்டப்படி இரண்டாவது வீடு வாங்குபவருக்கு எந்த வரிசலுகையும் கிடையாது !! இன்றைய பட்ஜெட்டில் அதை மாற்றி அமைத்துள்ளார் பியூஸ் கோயல் ! இனி இரண்டாவது வீட்டுக்கும் வரிச்சலுகை கிடைக்கும் என்று அறிவித்துள்ளார் ! இவருக்கு ground reality புரிந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சி அளிக்கிறது !  இது பெரிய அளவில் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கலாம் ! “ Currently, income tax on notional rent is payable if one has more than one self-occupied house. Considering the difficulty of the middle class having to maintain families at two locations on account of their job, children’s education, care o...