இந்திய அறிவியலின் எதிர்காலம் மீது நம்பிக்கை தந்த மாலை பொழுது

இன்று VarahaMihira Science Forum நடத்திய "Brief History of Gravity" என்கிற அறிவியல் சொற்பொழிவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இயற்பியல் விஞ்ஞானி திரு சதீஸ் குமார் சரவணன் இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இந்த அறிவியல் சொற்பொழிவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் என்கிற மாணவன் கேட்ட கேள்விகளும், அவனே சில கேள்விகளுக்கு அளித்த விளக்கங்களும் பேச்சாளர் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது !

தனது தாயாருடன் வந்திருந்த ஹரீஸிடன் நிகழ்ச்சி முடிந்த பின் பேசினோம். விண்வெளி வீரர் ஆவது தனது கனவு என்றும், ராகேஷ் ஷர்மா தனது முன்மாதிரி என்றும், தனக்கு சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் இருப்பதாகவும் (சேனல்: https://www.youtube.com/channel/UCwiKjScLZ0BkNmqPsnAB_JA), அதில் 20க்கும் மேற்பட்ட அறிவியல் வீடியோக்களை அவனே பேசி பதிவேற்றி இருப்பதாகவும் சொல்லி மேலும் ஆச்சர்யத்தை கூட்டினான்.

ஹரிஷ் மற்றும் நண்பர்களுடன்
சரியாக சொன்னால் எனக்கு Young Sheldon தொடரில் வரும் ஷெல்டன் கூப்பர் பாத்திரத்தை நேரில் பார்த்த ஒரு உணர்வு தான். இந்திய அறிவியலின் எதிர்காலம் மீது நம்பிக்கை தந்த மாலை பொழுது !!!


மாணவன் ஹரிஷின் ஒரு வீடியோ



Brief History of Gravity சொற்பொழிவின் வீடியோ

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)