மோடி எதிர்ப்புக்காக மம்தாவை சாரதா ஊழல் ஆதரிக்க வேண்டாம்

மோடியை எதிர்க்க வேண்டியது தான். அதில் ஒன்றும் தவறு இல்லை.. ஆனால் மூளையை கழட்டி வச்சுட்டு என்ன நடந்தாலும் எதிர்க்கனும் அப்படின்னு அவசியம் இல்லை..

சாரதா சிட் பண்ட் என்கிற நிறுவனம் மற்றும் rose valley என்கிற நிறுவனமும் சுமார் 20 லட்சம் மக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி கோடிகளில் வசூல் செய்து (சாரதா நிறுவனம் 4000 கோடி, rose valley நிறுவனம் 15000 கோடி) பின்னர் அது போலி நிறுவனம் என தெரிய வந்து, அந்த நிறுவனத்தின் தலைவர்கள் பலரும் மம்தாவின் திரிணாமுல் கட்சியின் தலைவர்கள், மாநிலத்தின் பெரிய போலீஸ் அதிகாரிகள், சினிமா தயாரிப்பாளர், நம்ம P. சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி பல பெரிய புள்ளிகள் பின்னால் இருப்பது தெரியவந்து, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்க CBI க்கு வழக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரெய்டு நடத்த அனுமதி அளித்து, ரெய்டுக்கு சென்ற CBI அதிகாரிகளை கைதுசெய்துள்ளது மம்தா அரசு !

இதில் பணத்தை இழந்த பலரும் சாதாரண மிடில் கிளாஸ் மக்கள்..

ஆமாங்க உங்கள மாதிரி என்ன மாதிரி சாமானியன் மாசா மாசம் கட்டுன பணம்..

இதெல்லாம் தெரியாம சும்மா CBI ன்னா மத்திய அரசு மத்திய அரசுன்னு சொன்ன எதிர்க்கணும், CBI அரெஸ்ட் பண்ண கெத்து.. கருமம் டா...நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ மாசா மாசம் சீட்டு பணம் கட்டி லட்ச கணக்கில் பணத்தை இழந்தால் இப்படித்தான் போஸ்ட் போடுவீங்களா ??

மோடி எதிர்ப்புக்கு ஆயிரம் வழி இருக்கு, ஆயிரம் பிரச்சனை இருக்கு, இது அதுல ஒன்னு இல்லை...

கீழே இருக்கும் லிங்கில் உள்ள article படிச்சா உஙகளுக்கே புரியும் மம்தா அக்காவை இந்த விஷயத்தில் ஆதரிக்கணுமா வேணமான்னு

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)